கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 4

“அத்தான்… என்னன்னொவோ நீங்க பேசறீங்க…?”

சுகன்யாவின் குரல் கரகரத்தது. அவள் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. தன் உடம்பு சிலிர்த்து நின்றவளின் மனம் நெகிழ்ந்தது. அவள் நெஞ்சு விம்மியது. இந்த அளவுக்கு
“டீப்’ ஆக என்னை இவன் காதலிக்கறானா? சம்பத்தின் பேச்சிலிருந்த உண்மை அவளுக்குப் புரிந்தபோது, அந்த உண்மை தந்த உணர்வை அவளால் நிஜமாவே தாங்க முடியலை.

“நான் என் மனசுல இருக்கற உணர்வுகளைத்தான் பேசறேன்.. சுகா..”

“அத்த்தான்… நான் எப்பவும் நிகழ்காலத்துல வாழறவ.. நிகழ்காலத்துலதான் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன். நீங்க எதிர்காலத்துல நிறைய எதிர்பார்க்கறீங்க..” சுகன்யா தன் குரலை இழுத்தாள்.

“சுகன்யா,
“காலம்’ ங்கறது ஆதியும் அந்தமும் இல்லாததுன்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு.
“காலங்கறது’ நீளமான ஒரு மெல்லிய நூல் கண்டு. அதுல நேத்து… இன்னைக்கு… நாளைக்கு… அடுத்த வாரம், புது வருஷம், புது பிறப்புங்கற முடிச்சுகள் இல்லை. இதெல்லாம் நாம நம்ம வசதிக்கு ஏற்படுத்திகிட்ட கூறுகள், பகுதிகள், துண்டுகள்.. …”

“மெல்லிய நூலியிழையில சட்டுன்னு சிக்கு விழுந்துடும்.. நடைமுறை வாழ்க்கையில தன்னால சிக்கல்கள் வந்துடக் கூடாதுன்னு நமக்கு நாமே போட்டுக்கிட்ட வறைமுறைகள்… சிறிய சிறிய முடிச்சுகள்தான் நேற்று, இன்று, நாளை…”

“பிரபஞ்சத்துல
“காலத்துக்கு’ எல்லைகள் இல்லை. இந்த உடலுக்குள்ள அடைஞ்சுக்கிடக்கற ஆத்மாக்களின் அனுபவங்களுக்கும் எல்லைகள் இல்லை சுகன்யா… இதெல்லாமே ஒரு வட்டத்துல இயங்குது… வட்டத்துல எந்தப் புள்ளி ஆரம்பம்…? எந்தப் புள்ளி முடிவு…?” சம்பத் சுகன்யாவின் வலது கையை ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டான்.

“அத்தான்… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை…”

“கொஞ்ச நாளா நான் நல்லசிவங்கறவரை என் அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்… ராணிங்கறவங்க என் அம்மா… அவங்க ரெண்டு பேரும் என்னை தன் பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.. ஆனால், எத்தனை அம்மாக்கள் எனக்கு? எத்தனை அப்பாக்கள் இந்த சம்பத் குமாரனுக்கு…??? இவன் இதுவரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்பான்? இவனுக்குத்தான் எத்தனை காதலிகள், எத்தனை மனைவிகள் இருந்திருப்பாங்க..? இந்த சம்பத்துக்கு இந்த கணக்குகள் எதுவும் நினைவுல இல்லே…”

“அத்த்தான்…”

“இவன் மனசுக்கு இன்னும் திருப்தி வரலே… இவன் மனசு இன்னும் பெண்ணோட அன்புக்காக, பரிசுத்தமான ஒரு பெண்ணின் அன்புக்காக, அலையுது.. இவன் இப்ப சுகன்யாங்கற பெண்ணின் அன்பை, மனசை ஆசைப்படறான்… இது சரியா தவறா? இது அவனுக்கே தெரியலை…” சம்பத் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான். குரலில் விரக்தி தொனிக்க நீளமாக ஒரு முறைச் சிரித்தான். சுகன்யா மவுனமாக அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

2 Comments

Add a Comment
  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *