கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 4

“தேங்க்ஸ்.. சுகன்யா..! என்னால எதிர்ப்புகளை வெகு சுலபமா நேர் கொள்ள முடியுது. ஆனா ஏனோ தெரியலை… உபசாரத்தையும், அன்பையும் என்னால எதிர்நோக்க முடியலைம்மா…” சுகன்யாவிடம் தன் காதலை சொன்னதை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்ல என்பது புரிந்ததும், சம்பத் நிம்மதியாக பெருமூச்சுவிட்டான்.

“சுகன்யா, இவ்வளவு நேரம் நீ ரொம்பப் பொறுமையா இருந்தே… நான் சொன்னதையெல்லாம் காது குடுத்துக் கேட்டே… நீ நெனைச்சிருந்தா எப்பவோ, என்னை ஒதுக்கிட்டு எழுந்துப் போயிருக்கலாம்… இவ்வளவு தூரம் நான் சொல்றதை கேக்கணுங்கற அவசியம் உனக்கு நிச்சயமா இல்லே… இன்னும் ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதை நீ கேளு…”

“சொல்லுங்க சம்பத்…” சுகன்யா அவனை ஆதரவாகப் பார்த்தாள்.

“என் மனசுல இருக்கற அன்பை உன் கிட்ட நான் சொல்லிட்டேன்.. என்னைப் பொறுத்த வரைக்கும், ஒருவிதத்துல என் ஆசையை நான் உன் மனசுக்குள்ள இன்னைக்கு வெதைச்சிட்டேன்.. அது முளைக்கறதும், மொளைக்காததும் காலத்தோட கையிலத்தான் இருக்கு. உனக்காக நான் பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்.”

“…..”

“நான் திரும்பவும் என் காதலைப் பத்தி உன் கிட்டவோ, வேற யாரோடவும் நான் எப்பவுமே பேசமாட்டேன். என்னால உன் திருமண வாழ்க்கையில, உங்க ரெண்டு பேரு நடுவுல எப்பவும் எந்தப் பிரச்சனையும் வராது. ஐ பிராமிஸ்… சுகன்யாவின் வலது கையைப் பற்றி, தன் வலது கையால், அவள் உள்ளங்கையில் அழுத்தினான், சம்பத்.

“அத்தான்… நீங்க உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு மவுனமா என்னை காதலிச்சுக்கிட்டே இருக்கலாம்… அதை என்னால நிச்சயமா தடுக்க முடியாது… எனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்னு சொல்றீங்களே… அதை என்னாலப் புரிஞ்சுக்க முடியலை.”

“என் மனசுக்குள்ள செல்வா பூரணமா நிறைஞ்சு இருக்கான்… என் மனசு எப்படி மாறும்ன்னு நீங்க எதிர்பாக்கறீங்க… இதை நான் உண்மையிலேயே தெரிஞ்சுக்க விரும்பறேன்..” அவன் செய்த சத்தியத்தைக் கேட்டதும், அவள் தன் மனதுக்குள் மிகுந்த நிம்மதி அடைந்தாள். அதே வினாடியில் அவள் உதடுகளில் ஒரு குறும் புன்னகை அவளையும் மீறி எழுந்தது.
“யெஸ்… நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.. உன்னை மாதிரி பெண்ணோட மனசு சாதாரண சூழ்நிலைகளிலே மாறவே மாறாது. நீ உண்மையா காதலிக்கற செல்வாவை ஏற்கனவே உனக்கு பெரியவங்க நிச்சயம் பண்ணிட்டாங்க… உன் மனசு என் பக்கம் எப்படித் திரும்பும்…? அதுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.. நீ கேக்கற கேள்வியும், உன் சிரிப்பின் அர்த்தமும் எனக்கு நல்லாப் புரியுது… சுகா…!

“அயாம் சாரி சம்பத்… நான் இந்த நேரத்துல இப்படி சிரிச்சு உங்க மனசை புண்படுத்தியிருக்கக்கூடாது… ரியலி அயாம் சாரி… ஆனா…” சம்பத்தின் பதிலை எதிர் நோக்கியவாறு, அவனுடன் நடந்து கொண்டிருந்த சுகன்யா ஒரு நொடி நின்று அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

“சுகன்யா… இட் ஈஸ் ஆல்ரைட்… இந்த ஜென்மத்துல உன் மனசு மாறாமல் போகலாம்… இந்த ஜென்மத்துல இல்லன்னாலும்… அடுத்து வரப்போற எந்த ஜென்மத்துலயாவது உன் மனசுல என் மேல காதல் வரலாம் இல்லையா? அந்த நம்பிக்கையோட உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்.” தன் விழிகளில் அவள் பால் பொங்கி வரும் எல்லையில்லாத காதலுடன் சம்பத் அவளைப் பார்த்தான்.

2 Comments

Add a Comment
  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *