கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 4

“ப்ச்ச்ச்…” சம்பத் சூள் கொட்டினான்.
“அத்தான்… வாலிப வயசுக்கே உரிய சில சிலுமிஷங்களை, இளமைக்கே உரிய சில திருட்டுத்தனங்களை, சுவையான தப்புகளை, தில்லு முல்லுகளை, விளையாட்டா நீங்க பண்ணியிருக்கீங்க. அதைப் பத்தி நான் கவலைப்படலே.” பேசியவள் அவன் முகத்தை திரும்பிப் பார்த்தாள்.

“யூ ஹாவ் எ ப்ராட் மைண்ட்..சுகன்யா… என்னை நீ ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டே..!!”

“அயாம் நோபடி டு ஜட்ஜ் யூ… எனக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்லை. நீங்க உங்க மனசுல இருந்த காதலை என் கிட்ட ஓப்பனா சொன்னதுனால உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை… அதுக்கு மாறா ஐ ரியலி அப்ரிஷியேட் யூர் ஸ்ட்ரெய்ட்பார்வேட்னெஸ்…”

“தேங்க் யூ சுகன்யா..”

“ஆனா அத்தான்… உங்க மனசுக்கே பிடிக்காத உறவுகளை, இனிமே, திரும்பவும் கண்ட பெண்களோடு, நீங்க வெச்சுக்கக்கூடாதுன்னு, உங்களோட ஒரு உண்மையான சினேகிதியா, உங்ககிட்ட கேக்கற உரிமையை, நான் உங்க கிட்ட எதிர்பாக்கலாமா?” சம்பத்துடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தவள், அவன் முகத்தை புன்னகையுடன் பார்த்தாள், சுகன்யா.

“சுகன்யா… நீ என் மனசுக்குள்ள வந்துட்டே… இனிமே இந்த மனசுக்குள்ளே வேற எவளுக்கும் இடம் கிடையாது. இந்த உடம்பு இனிமே வேற எந்த பொண்னோட உடம்பையும், உடல் சுகத்துக்காக நிச்சயமா தீண்டாது… இது சத்தியம்…” ஒரு நொடியும் தயங்கமால் அவளுக்கு பதிலளித்தான், சம்பத்.

இவன் என்னை இந்த அளவுக்கு நேசிக்கிறானா? என் ஒரு வார்த்தைக்கு இவன் இந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறானா? இனிமே எவளையுமே தொடமாட்டேன்னு தயங்காம சத்தியம் பன்றானே? இவனை நான் பைத்தியக்காரன்; மன நோயாளின்னு சந்தேகப்பட்டேனே? சுகன்யா ஒரு நொடி பிரமித்து நின்றாள். ந்டந்து கொண்டிருந்த சம்பத் அவளைத் திரும்பிப் பார்த்தான்..

“ஏன் நின்னுட்டே சுகன்யா?”

“ஓண்ணுமில்லே…” சுகன்யா நடக்கத்தொடங்கினாள்.

“சுகன்யா, நான் சொன்னதை நீ நம்பலையா?” சம்பத் சிரித்தான்.

“நிஜமாவே… நீங்க பண்ண சத்தியத்தைக் கேட்டதும், ஒரு செகன்ட் … இது எப்படி சாத்தியம்ன்னு, நான் என் காதால கேட்டதை நம்ப முடியாம நின்னது உண்மைதான்.. அயாம் சாரி…உங்ககிட்ட நான் பொய் சொல்ல விரும்பலை…” சுகன்யாவின் முகம் சட்டெனக் கருத்தது.

“ப்ளீஸ் … சுகன்யா… கம் ஆன் டியர்… நீ பேசின உண்மை எனக்கு ரொம்பப் பிடிக்குது… உன்னோட இன்னோசென்ஸ், உன் மனசோட நேர்மை, இதுதான் என்னை உங்கிட்ட இழுக்குது… திரும்பவும் சொல்றேன்… ஐ லவ் யூ சுகன்யா…

“அத்தான்… ப்ளீஸ்… நாம ஃபரெண்ட்ஸா இருக்கலாம்பா… நான் சொல்றதைக் கேளுப்பா… இதனால யாருக்குமே பிரச்சனையில்ல… என்னைப் புரிஞ்சுக்கப்பா…” சுகன்யா மீண்டும் அவனைக் கெஞ்சினாள்.

“நீ உன் அன்பால, பாசமான வார்த்தைகளால, உன்னோட நேர்மையான குணத்தால, என்னை வதைக்கிறேம்ம்மா.. நீ ஓரே ஒரு வார்த்தை கோபமா பேசியிருந்தா, நீ என் கன்னத்துல பளார்ன்னு பளார்ன்னு ரெண்டு அறை விட்டிருந்தா… எனக்கு அது ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கும்…” சம்பத் தன் கண்களில் மீண்டும் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்…

“சுகன்யா… உன் மனசு நிம்மதியை நான் குலைச்சுட்டேன்னு நிஜமாவே உனக்கு என் மேல கோபமில்லையே?”

“நோ… நோ.. அத்தான்… நீங்க என்னைப் பத்தி செல்வா கிட்ட தப்பா பேசினதை, கிரேஸ்ஃபுல்லா என் கிட்ட ஒத்துக்கிட்டு, இதுல சம்பந்தப்பட்ட எங்க ரெண்டு பேருகிட்டவும், மன்னிப்பு கேட்டீங்க.. அதுக்கு அப்புறமும் உங்களோட நல்ல குணத்தை, உங்க திறந்த மனசைப் புரிஞ்சுக்காம, உங்களை கோவிச்சுக்கறதுக்கு நான் என்ன பைத்தியக்காரியா? இல்லே முட்டாளா?”

2 Comments

Add a Comment
  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *