கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 4

“அத்தான்… ப்ளீஸ்… திரும்ப திரும்ப இதை சொல்லாதீங்க… இதனால யாருக்கும் எந்தவிதத்திலும் பலனில்லே…”

“சுகா… எனக்கு உன்னோட சொத்துகள் வேண்டாம்… உன் இளமை வேண்டாம்… உன் அழகு வேண்டாம்… உன் படிப்பு வேண்டாம்.. எதுவுமே வேண்டாம்… உன்னோட அன்பு மட்டும்தான் எனக்கு வேணும்…”

“சம்பத்… எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை…” சுகன்யா பேசமுடியாமல் தவித்தாள்.

“சுகா.. நான் உன்னை உண்மையா விரும்பறேன்… உன்னை நான் அளவில்லாம நேசிக்கறேன்… என் மனசோட இந்த உணர்வுகள் உனக்குத் தெரியணும்ன்னு நான் நினைச்சேன்.. அதை நான் உன் கிட்ட உடனடியா சொல்ல நினைச்சேன்.. சொல்லிட்டேன். இப்ப என் மனசுக்குள்ள ஒரு பெரிய நிம்மதியை நான் உணர்றேன்.”

சம்பத் எழுந்தான். எழுந்து நின்ற இடத்திலேயே தன் உடலை இடவலமாக அசைத்தான். அவன் பேசியதைக்கேட்ட, சுகன்யாவின் முகத்தில் சம்பத்தின் மேலிருந்த பிரமிப்பு மேலும் ஒரு நொடி அதிகரித்தது.

“ஆனா என் நிம்மதி போயிடுச்சு அத்தான்…” சுகன்யாவின் குரல் முணுமுணுப்பாக வந்தது. அவள் முணுமுணுப்பில் சலிப்பும் இருந்தது.

“அயாம் சாரி சுகன்யா… நீ சலிச்சிக்கிட்டாலும் உன்னை நான் காதலிப்பது உண்மை..”

“அத்தான்… நீங்க ஒரு சின்னக் கொழந்தையாட்டாம் பேசறீங்க… உங்க மனசுல இருக்கறதை நீங்க சொல்லிட்டீங்க… என்னைப் பொறுத்தவரைக்கும், நான் அதை தப்புன்னு சொல்லலை… ஆனா இதனால யாருக்குப் பிரயோசனம்… சொல்லுங்க? நீங்க விரும்பறது எப்படி நடக்கும்?

“நான் எதையும் எதிர்பார்த்து உன்னை நான் நேசிக்கலை… வாழ்க்கையிலே எதிர்பார்ப்புகளே இல்லாம இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்…?” முனகினான் சம்பத். அவன் விசுக்கென்று எழுந்தான். மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் முணுமுணுத்தது சுகன்யாவுக்கும் கேட்டது. இருவரும் வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

“அத்தான், உங்க மனசை நான் புரிஞ்சிக்கிட்ட மாதிரி… நீங்களும் என் மனசைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும். மிகவும் நாசூக்காக தன் உள்ளதில் இருப்பதை உடனடியாக அவனுக்கு புரிய வைக்க விரும்பினாள், சுகன்யா.

“சொல்லு சுகன்யா…” சம்பத் இப்போது தன் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருந்தான்.

“அத்தான்… எல்லாமே விதிக்கப்பட்டதுன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க… எனக்கு விதிக்கப்பட்டவன் செல்வா. எனக்கு இந்த ஜென்மத்துல விதிக்கப்பட்டவர் நீங்க இல்லன்னு தயவு செய்து புரிஞ்சுக்கணும். நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஒரு ஆறு மாசம் முன்னாடி சந்திச்சிருந்தா, பத்து நிமிஷம் முன்னாடி நீங்க என் கிட்ட சொன்ன உங்க அன்பை அப்ப சொல்லியிருந்தீங்கன்னா, என் கண்ணை மூடிக்கிட்டு உங்களுக்கு நான் சரின்னு சொல்லியிருப்பேன்..

“ம்ம்ம்.. அயாம் அன்லக்கி…” சம்பத் முனகினான்.

“அத்தான்…

“ம்ம்ம்… செல்வாவை நீ சந்திச்சப்பிறகுதான், உன் நிச்சயதார்த்ததுக்கு நாலு நாள் முன்னாடிதான் நான் உன்னைப் பாக்கணும்ன்னு, எனக்கு விதிக்கப்பட்டிருக்கு… இதுக்கு நான் யாரை நொந்துக்கறது?” விரக்தியாக சிரித்தான், சம்பத்.

“அத்தான்… என் மனசுல உங்களுக்குன்னு ஒரு நிரந்தரமான எடத்தை நீங்க பிடிச்சிட்டீங்க. நீங்க என் அத்தைப் பையன். நீங்க என்னோட இரத்த உறவு.. எனக்கு ஒரு பிரச்சனைன்னா எனக்காக என் உறவுகள்தானே முன்னே வரும். என் நட்புகள் தானே எனக்காக ஆதரவு கரம் நீட்டும். என் நண்பர்கள்தானே எனக்கு உதவணும். இந்த நொடியிலிருந்து நீங்க என்னோட சினேகிதன். ஒரு நல்ல நண்பன்… !” சுகன்யா அவன் கையில் தன் கையை நட்புடன் கோர்த்துக் கொண்டாள்.

“ம்ம்ம்…”

“அத்தான்… நீங்க என் கிட்ட என் அன்பை மட்டும்தான் எதிர்பாக்கறதா கொஞ்சம் முன்னாடீ சொன்னீங்க…”

“ஆமாம்…”

“ஒரு பெண், ஒரு ஆணை காதலிப்பதன் மூலமாத்தான், தன் அன்பை அவனுக்கு காட்டணும்ன்னு அவசியமில்லே. இரண்டு நண்பர்களுக்கு இடையேயும் உண்மையான அன்பு நிலவ முடியும். சம்பத், நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும். சீனு என்னோட நல்ல ஃப்ரெண்ட்… மீனா என்னோட திக் ஃப்ரெண்ட்… வேணி என்னோட ஃப்ரெண்ட்… இது மாதிரி நீங்களும் நானும் நட்பா இருக்க முடியும். இதனால என் வாழ்க்கையில எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது.” சுகன்யா அவனை கெஞ்சலாகப் பார்த்தாள்.

2 Comments

Add a Comment
  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *