கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 4

“அயாம் சாரி சுகன்யா… உன் மனசை கொழப்பணுங்கறது என்னோட நோக்கமில்லே… உன்னை எந்தவிதத்திலும் எமோஷனல் ப்ளாக் மெய்ல் பண்ணணுங்கறது என்னோட விருப்பமில்லே… ஆனா என்னால என் காதலை உன் கிட்ட சொல்லாமவும் இருக்க முடியலே…”

“பின்னே… இப்ப எதுக்காக உங்க மனசை என் கிட்ட தொறந்து காட்டறீங்க…?”

“சுகன்யா… இது என்னோட முதல் காதல்… நான் காதலிச்ச… காதலிக்கற… காதலிக்கப் போற முதல் பெண் நீ… என் காதலை உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட நான் சொல்லுவேன்?” சம்பத் உடைந்த குரலில் மெதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

“அத்தான்… நீங்க பேசறது எப்படி இருக்குன்னா, நல்ல பாட்டை ஒரு கச்சேரியில கேட்டுக்கிட்டு இருக்கறப்ப, பக்கத்துல ஒருத்தன் அந்தப்பாட்டுக்கு, தப்பு தப்பா போடற தாளங்கள் மாதிரியிருக்கு; அவன் தன்னையும் வருத்திக்கறான்; அடுத்தவங்களையும் நிம்மதியா பாட்டை ரசிக்க விடாம வருத்தறான்; இது உங்களுக்கு புரியலையா?” சுகன்யா அவன் மனசை நோக அடிக்க விரும்பாமல் வினயமாக பேசினாள்.

“சுகன்யா நான் உன் நினைவுகளோடு, அந்த நினைவுகளை என் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு வாழறதுல உனக்கோ, இல்லை உன் செல்வாவுக்கோ, ஏன் இந்த உலகத்துக்கோ என்னப் பிரச்சனை?” தன் உள்ளத்தை திறந்து விட்டதில், தன் காதலை சுகன்யாவிடம் சொல்லிவிட்டதில், இப்போது சம்பத்தின் குரலில் ஒரு தெளிவு பிறந்திருந்தது.

“சம்பத்… உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே நீங்க வெச்சிக்கிட்டு இருந்திருந்தா, யாருக்குமே, எந்தவிதமான பிரச்சனையும் வந்திருக்காதுங்க… ஆனா நீங்க உங்க காதலை என் கிட்ட சொல்லிட்டீங்களே…? என் நிலைமையில நீங்க இருந்து பாருங்க…”

2 Comments

Add a Comment
  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *