கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 10

ஸ்டவ்வை அணைத்துவிட்டு வந்த சுகன்யா, கனகாவின் தட்டில் குருமாவை எடுத்து ஊற்றினாள். தாத்தாவின் பக்கத்தில் உட்கார்ந்து நிதானமாக உண்ண ஆரம்பித்தாள். எல்லோரும் சாப்பிட்ட தட்டுகளை சுத்தமாக கழுவி கிச்சனுக்குள் வைத்தாள். மூவரும் பில்டர் காஃபியை ருசித்து குடிக்கும் போது வாசலில் காலிங் பெல் அடித்தது.

“பாட்டி நீங்க உக்காருங்க … நான் பார்க்கிறேன் யாருன்னு…?”

மூடியிருந்த கம்பிக் கதவுக்குப் பின்னால், மா நிறத்துக்கு சற்றே குறைவாக, ஆனால் களையான சிரித்த முகத்துடன், ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். காம்பவுண்டுக்கு வெளியில் அவளுடைய ஸ்கூட்டரின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா மோட்டார் சைக்கிளில் அவன் வந்திருக்க வேண்டும்.

வாளிப்பான உடல். பரந்த மார்பு. கருகருவென சுருட்டையான முடி, க்ளோசாக வெட்டப்பட்டிருந்தது. கண்களில் கருப்பு கூலிங் க்ளாஸ். அழகாக டிரிம் செய்யப்பட்ட மீசை. பளபளக்கும் கருப்பு பேண்ட் போட்டிருந்தான், பேண்டில் செருகப்பட்டிருந்த வெள்ளை நிற டீ ஷர்ட்டில் பிதுங்கிக்கொண்டிருக்கும் திடமான கைகள், அவன் ஜிம்மில் தினசரி கணிசமாக ஒரு நேரத்தை செலவு செய்கிறான் என்பதை காட்டின.

உண்மையிலேயே முதல் பார்வைக்கு ஆள் ஸ்மார்ட்டா, ஹேண்ட்சம்மாத்தான் இருக்கான். டிப்-டாப்பா இவன் போட்டிருக்கற ப்ராண்டட் டிரஸ்சைப் பாத்தா சேல்ஸ்மேன் மாதிரித் தெரியலை சினிமாவில வர்ற தொப்பையில்லாத இளம் போலீஸ் ஆஃபீசரைப் போல் அவன் இருப்பதாக சுகன்யாவின் மனதில் பட்டது.

“யார் வேணும் …உங்களுக்கு?”

“ம்ம்ம் … மிஸ் சுகன்யா கதவைத் தொறங்க …” அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை அவன் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.

என் பேரு இவனுக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு தீர்மானமா, உறுதியா, முகத்துல தன்னம்பிக்கையோட எப்படி பேசறான்? கண்ணாடியை கழட்டினதுக்கு அப்புறம், இவன் கண்ணுல ஒரு திருட்டுத்தனம் இருக்கற மாதிரி படுதே? கண்ணுங்க ஒரு இடத்துல நிக்காம எதையோ தேடற மாதிரி இருக்கே? இவனை இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கேனா?

சுகன்யா தன் நினைவுகளில் அவனைத் தேடி அடையாளம் காண முயன்றாள். அவன் யார் என கண்டுபிடிக்கமுடியாமல் முடிவில் அவள் மனம் தோற்று நின்றது. அவள் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை புரிந்து கொண்டவனாக அவன் சிரித்தவாறு பேச ஆரம்பித்தான்.

“சுகன்யா, உங்களுக்கு நிச்சயமா என்னைத் தெரியாது. நீங்க முதல் தரமா என்னைப் பாக்கறீங்க. ஆனா உங்களை பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும்.” அவன் உற்சாகமாக புன்னகைத்தான்.

ஹீ ஈஸ் சம்வாட் இன்ட்ரஸ்டிங் … ஒரு நொடி, அவன் உற்சாகம் சுகன்யாவைத் தொற்றிக்கொண்டது. ஒரே வினாடிதான். எல்லாம் சரி – முதல் தடவையா நான் இவனைப் பாக்கிறேன், ஆனா இவன் பார்வை என் முகத்துல நிக்காம, ஏன் என் மார்லேயே சுத்தி சுத்தி வருது? இவன் கண்ணுல இருக்கறது திருட்டுத்தனம் மட்டுமில்லே … சதை வேட்க்கையும் அதிகமாகவே இருக்கு.