கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 6

எனக்கென்னமோ இந்த கல்யாணத்துல எல்லாம் அவ்வளவா நம்பிக்கை இல்லே. மனசுக்கு புடிச்சுதா, பொண்ணை பட்டுன்னு கேட்டமா, அவ ஓ.கே. ன்னா, தொட்டு பாரு; கட்டிபுடிச்சி அனுபவி… வுட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். ரொம்ப கமிட்மெண்ட்ஸ் வெச்சுக்கக்கூடாது. இங்கே என்னடான்னா, பூவை தொடவேயில்லை. அதுக்குள்ள கையில முள்ளு குத்தும் போல இருக்குது.

அம்மா ரொம்பவே சொன்னாளேன்னு வந்தேன். சுகன்யா நம்ம உறவுகார பொண்ணுடா. சிவதாணு தாத்தாவோட பேத்தி. குமார் மாமாவுக்கு இருக்கற ஒரே பொண்ணு; தாத்தா சொத்து, குமார் சம்பாதிச்சு வெச்சிருக்கறது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு. அதுமட்டுமில்லே; அவளோட அம்மா சுந்தரியும், ஸ்கூல் டீச்சரா கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா.

சுகன்யாவோட தாய் மாமன் கல்யாணம் பண்ணிக்கலை. அவன் அக்கா வீட்டுலதான் கூடவே இருக்கான். அவனுக்கும் வீடு, நீர், நில புலன்னு எல்லாம் இருக்கு. அவனுக்கு பின்னால அதெல்லாமும் இவளுக்குத்தான். எல்லாத்துக்கும் மேல சுகன்யாவே நிரந்தரமான கவர்ன்மெண்ட் உத்தியோகத்துல, நல்லா கை நெறைய சம்பாதிக்கறா. இவளை கட்டிக்கறவனுக்கு நல்ல தனயோகம்தான்.

நான் உன் அம்மாடா; உன் கிட்ட நான் இப்படி பேசக் கூடாது? ஆனாலும் சொல்றேன். சுகன்யா சும்மா ஜவுளி கடை பொம்மை மாதிரி எடுப்பா இருப்பாடா. சுகன்யாவை உனக்கு குடுக்கறீங்களான்னு கேட்டு இருக்கேன். சுந்தரி பிடி கொடுத்து பேசமாட்டேங்கிறா. அவ புருஷன் குமாரும், என் பொண்ணுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலயே? ஒரு ரெண்டு வருசம் போகட்டும் … அதுக்கப்புறம் பாக்கலாம்ன்னு நினைக்கிறோம்…. ராணி, நீ வேணா வேற எடம் பாக்கறதுன்னா பாரேன்னு நாசுக்கா ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி தட்டிக் கழிக்கறாரு.

ஆத்தாளும் அப்பனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு, ஜாதி வுட்டு ஜாதி கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி, சுகன்யாவும் யாரையாவது தன் மனசுல நெனைச்சுக்கிட்டு இருப்பாளோன்னு நான் சந்தேகப்படறேன். இந்த காலத்துல வெளியில படிச்சுட்டு வேலைக்கு போற பொண்ணுங்களுக்கும், ஒண்ணு ரெண்டு பாய் ப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கத்தான் செய்யறாங்க. நீயும் தான் கேர்ள் ப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கே. அவங்களையா கட்டிக்கப் போறே?

எவ்வள நாளைக்குத்தான் இப்படியே இவகூட; அவகூடன்னு சுத்துவே? காலாகாலத்துல கல்யாணம் பண்ணி செட்டில் ஆவணும்டா. கல்யாணம்ன்னு வரும் போது சுகன்யா மாதிரி பொண்ணைத்தான் பாக்கணும். இப்பத்தான் சுகன்யாவை, கனகா பாட்டி வீட்டு வாசல்ல பாத்தேன். ஜீன்ஸ், டாப்ஸ் போட்டுக்கிட்டு செப்பு சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாடா.

உனக்கு மட்டும் என்னடா குறைச்சல்? ராஜா மாதிரி இருக்கே, ஒரு தரம் நீ அந்த பொண்ணை நேரா பாத்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன். நேருக்கு நேரா பாத்தா, அவ மனசுல ஒரு வேளை, உன்னைப் பத்தி ஒரு இம்ப்ரஷன் வரலாம். அப்புறம் உன் இஷ்டம்…

காலங்காத்தாலே அம்மா என் கிட்ட ரொம்பவே இவளைப் பத்தி புகழ்ந்து பேசவே, அப்படி என்னாத்தான் இவகிட்ட இருக்கு? ஒரு லுக்கு விட்டுத்தான் பாப்பமேன்னு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது. க்ராஸ் பிரீட் ஆச்சே? சான்ஸே இல்லே … சுகன்யா நம்பளை பின்னி எடுக்கறாளே? கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருக்கா?

நான் இங்கிலீஷ்ல, நீ அழகாயிருக்கேன்னு போட்ட முதல் பிட்டுக்கு, சுகன்யா ஒ.கே ஆன மாதிரிதான் தெரிஞ்சுது. பொறுமையா இருந்திருக்கணும். கொஞ்சம் கண்ணை இங்க அங்க அவ உடம்புல அவசரபட்டு மேயவிட்டது, தப்பா போயிடுச்சின்னு நினைக்கிறேன்.

நான் என்னப் பண்ணுவேன்? மால் டக்கரா இருக்கே? டக்குன்னு சுகன்யா குட்டி முழிச்சிக்கிட்டா. மாப்ளே! உனக்கு ராஜ களை! ஆனா திருட்டு முழின்னு – நம்ம நண்பணுங்க அடிக்கடி சொல்வாங்களே, என் கண்ணு அலைச்சலால இப்ப காரியம் கெட்டுப் போயிடும் போல இருக்கு?

அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு ஒரு சான்ஸ் பார்க்கலாமேன்னு வந்தேன். சுகன்யா நிஜமாவே சூப்பரா லட்டு மாதிரி இருக்கா. இவ செட் ஆனா, பைனலா கல்யாணத்தை பண்ணிகிட்டு ஒரு வழியா லைப்ல செட்டில் ஆயிடலாம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி தெருவுல கண்ட லோலாயிங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கறது?

சுகன்யா ரொம்பத்தான் அல்டிக்கிறா …? இவளுக்கு எந்த வலையை விரிக்கறது? இன்னும் ஒரு வாரம் நாம இங்கே இருக்கப் போறோம். அதுக்குள்ள ஏதாவது ஒரு வலையை ரெடி பண்ணி விரிச்சுப் பாக்க வேண்டியதுதான்.

சுகன்யாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லன்னா அதுவும் வசதிதான். எனக்கு என்ன நஷ்டமாயிடப் போவுது? பத்தோட பதினொன்னு; அத்தோட இதுவும் ஒண்ணு. சும்மா வண்டியை ஒரு டிரையல் பாத்துட்டு, டாட்டா … பை பை … சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

சுகன்யா இல்லன்னா, ஒரு சுசீலா. சுசீலாவை விட்டா ஒரு சுபத்ரா! சம்பத் தன் மனதுக்குள் சுகன்யாவுக்கான வலையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ரூமுக்குள்ள போன சுகன்யா என்ன பண்ணுவா? கீ ஹோல் வழியா பாக்கலாமா? டேய் … உறவு காரன் வீட்டுல உக்காந்து இருக்கே. உடம்பை புண்ணாக்கிக்காதே? ஏதாவது எக்குத்தப்பா ஆச்சு … உன் அப்பன் ஆத்தா கிராமத்துல வெளியில தலை காட்ட முடியாம போயிடும்! சம்பத்து … கொஞ்சம் பொறுமையா இருடா. இன்னும் ஒரு வாரம் உங்கிட்ட டயமிருக்கு. கல்லெடுத்து அடி. மாங்கா விழுந்தா சரி … ஆனா கல்லு உன் தலை மேல விழாம பாத்துக்கோ! சம்பத் தன் கன்னத்தை சொறிந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *