என் வாழ்க்கை 1 67

திப்ருகர்…. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதி அருகில் உள்ள ஒரு ஊர். நேரம் நள்ளிரவு ஒரு மணி. எப்பொழுதும் மழை பெய்து ஈர பதத்துடன் இருக்கும் ரம்மியமான ஊரு. அங்கு இருந்த ரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டு இருக்கின்றேன். இரவு எட்டு மணிக்கு வர வேண்டிய ரயில் இன்னும் வரவில்லை. என் வாழ்க்கையை மாற்றி வாழ போவது தெரியாமல் என் அன்பு அம்மாவிற்காக காத்துகொண்டு நிற்கின்றேன்.

என் பெயர் ஆனந்த். வயது 22 . சொந்த ஊர் ஊட்டி அருகில் கூடலூர். அம்மா பெயர் பானுமதி. நாற்பதுகளின் நடுவில் இருக்கும் வயது. எனக்கு ஒரு அக்கா பெயர் செல்வி. என்னை விட இரண்டு வயது பெரியவள். அப்பா இல்லாத எங்களை அன்போடும் பாசத்தோடும் “பண்போடும்”(கவனியுங்கள் நண்பர்களே) வளர்த்தது எங்கள் அம்மா தான். சிறு வயதில் காதல் திருமணம் வீட்டை எதிர்த்து அதனால் உறவுகள் இல்லை . கொஞ்சம் வசதி இருந்த காரணத்தினால் படிப்பதற்கும் வீடு செலவுக்கும் கஷ்டம் இல்லை. அம்மாவும் அக்காவும் மட்டுமே அங்கு இருந்தார்கள். நான் ஆறாவது முதல் ஹாஸ்டெலில் தான் படிப்பு எல்லாம். மாதம் ஒரு முறை வந்து பார்த்து செல்வர். அப்படியே படிப்பு முடித்து கல்லூரி சென்னையில் படித்தேன். படிப்பு முடித்தவுடன் அப்பாவின் நண்பர் ஒருவர் ஊட்டியில் தேயிலை தோட்டம் வைத்து இருக்கிறார். அவருக்கு அஸ்ஸாமில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதில் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியினர் வேலை செய்கின்றனர். நல்ல சம்பளம். நம்பிக்கையான ஆள் வேண்டும் . அதனால் என்னை அங்கு சென்று வேலை பார்க்க சொன்னார். அம்மாவும் அக்காவும் சம்மதித்து அனுப்பினார்கள். இங்கு வந்து இரண்டு வருடம் ஆகி விட்டது. ஒரு முறை ஊருக்கு சென்று வந்தேன். அக்காவிற்கு கல்யாணம் முடித்தோம். கோவை மாப்பிள்ளை. அவர்களும் நல்ல வசதி தான். திருமணம் முடிந்து நான் இங்கு வந்து விட்டேன். அவ்வப்போது போன் மூலமாக பேசிக்கொள்வேன். நான் இருக்கும் இடம் பிரம்மபுத்திரா நதியை தாண்டி மலையில் இருப்பதனால் கைபேசி எல்லாம் கிடையாது. மேலும் இந்திய எல்லை காரணமாக ராணுவ கட்டுப்பாடுகள் உண்டு. மேலும் கடைகள் எதுவும் அருகில் கிடையாது. பழங்குடியினர் வசிக்கும் மலை பகுதி என்பதால் நான் இருக்கும் வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்து வந்தேன். அதனால் சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை. வேறு ஏதாவது வாங்க வேண்டும் என்றால் தான் கிட்டத்தட்ட முப்பத்தைந்து கிலோமீட்டர் காட்டுப்பாதையில் செல்ல வேண்டும். அதனாலேயே நான் என்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். தோட்டத்தில் பெரும்பாலும் பகலில் வேலை முடித்து மதியமே அனைவரும் மலை ஏறி விடுவார்கள். நான் மட்டும் தனியாக ஒரு வீட்டில் இருந்து வருகிறேன். அப்பாடா ரயில் வருகிறது…..

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published.