என் தேவதை – Part 6 27

அவனும் அவளை முத்தமிட்டான். அதன்பின் விலகி இருவரும் உடை மாற்றிக் கொண்டனர். ஈர உடைகளை கசக்கி பிழிந்து உதறி சிறிது நேரம் பாறை மீது காயப் போட்டு விட்டு ஒருவரை ஒருவர் அணைத்தபடி வெயில் காய்ந்தனர்.

“ரூபாக்கு கால் பண்ணலாமா.?” தமிழ் திடுமெனக் கேட்டாள்.
“ரூபாக்கா.. ? எதுக்கு.. ??” நிருதி லேசான குழப்பத்துடன் தமிழைப் பார்த்தான்.
“சும்மா.. அவளை கடுப்பேத்தலாம்..”
“சரி.. ” என்றான்.

தமிழ் உடனே தன் மொபைலை எடுத்து ரூபாவுக்கு கால் செய்தாள். கால் போனது. ஆனால் ரூபா எடுக்கவில்லை. இரண்டு முறை போன் செய்தும் அதே நிலைதான்.

“ஏய் பன்னி.. கால் பண்ணுடி” என்று ஒரு மெசேஜ் அனுப்பினாள் தமிழ்.. !!

குளிர் குறைந்து உடல் சூடானதும் ஈர உடைகளை எடுத்து ஒரு கவரில் திணித்துக் கொண்டு ஆசை முத்தங்களுக்குப் பின் அங்கிருந்து கிளம்பினர்.. !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *