என் தேவதை – Part 5 28

நேராக துணிக் கடைக்கு வண்டியை விட்டான்.
“என்ன ட்ரஸ் எடுக்கற?”
“என்ன எடுக்கறது?”
”உன் விருப்பம்”
“மிடி எடுத்துக்கவா?”
“ஓகே.”

தமிழ் தேடிப் பிடித்து மெரூன் கலர் டாப்ஸும், மிடியும் எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அதில் ஏக மகிழ்ச்சி. அப்பறம் தேவையான அளவுக்கு ஸ்நாக்ஸ், மற்ற ஐட்டங்கள் வாங்கிக் கொண்டு அருவிக்கு கிளம்பினர்.. !!

அருவிக்குப் போனபோது நன்றாக குளிர் இருந்தது. ரோட்டை விட்டு தள்ளி அந்த ஃபால்ஸ் மறைவாக இருந்தது. பெரிய பெரிய பாறைகளுக்கும், மரங்களுக்குமிடையே காற்றில் சாரல் பறக்க அருமையாக இருந்தது. ரம்மியமான இடம். குளுகுளுவென இருந்தது. எதைத் தொட்டாலும் சில்லென்றிருந்தது. அவர்கள் போனபோது அவர்களுக்கு முன்பாக அங்கே இரண்டு பைக் நின்றிருந்தது. ஃபால்ஸில் இரண்டு ஜோடிகளும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குளிக்கவில்லை. ஊட்டி போகும் வழியில் இங்கே வந்தவர்கள். இவர்கள் போன சிறிது நேரத்தில் அந்த இரண்டு பைக்குகளும் ஊட்டியை நோக்கி பறந்து விட்டன. அதன்பின் அவர்கள் இருவரும் தனியாகினர்.

“குளிக்கலாமா?” அருவியில் இருந்து கீழே வழிந்து ஓடும் தண்ணீரில் கெண்டைக்கால் நனைய இறங்கி நின்ற தமிழ் நிருதியைப் பார்த்து ஆர்வமாகக் கேட்டாள்.
“தண்ணி எப்படி இருக்கு?” அவளின் உற்சாகத்தை ரசித்தபடி கேட்டான்.
“ஜில்லுனு இருக்கு. பாருங்க உடம்பெல்லாம் எப்படி சிலிர்த்துருக்குன்னு” கைகளை நீட்டிக் காட்டினாள். அவள் கையைத் தொட்டான்.
“என்ஜாய்..”
“கிட்ட போலாமா?”
“ட்ரஸ்?”

அவன் கையைப் பிடித்து மேலேறினாள்.
“நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்” என்று சுற்றிலும் பார்த்தாள்.
“இங்கயே பண்ணிக்கலாம். மறைவா” பாறைகளின் மறைவைக் காட்டினான்.
“ஒண்ணும் பயமில்லல்ல?”
“ஒரு பயமும் தேவையில்ல. வா”

தமிழை பாறை மறைவுக்கு அழைத்துச் சென்றான் நிருதி. மறைவுக்குச் சென்றதும் அவளே அவனைக் கட்டிப்பிடித்தாள். அவனும் அவளைத் தழுவி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
“என்னாச்சு தமிழ்? ”
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” முகத்தை நிமிர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள். அவள் பார்வையை விழுங்கினான். அவள் உதடுகள் அவன் உதடுகளை நாடி வந்தது. மென்மையாக முத்தமிட்டான்.
“லவ் யூ” காதலாய்ச் சொன்னாள்.
அவள் மூக்கை உரசினான்.
“மீ டூ” அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து முத்தமிட்டு மெதுவாக கவ்வினான். அவள் கைகள் அவனை இறுக்கின. அவள் உதட்டை கவ்வி சுவைத்தான். அவள் கண்களை இறுக்கி மூடி மெல்லத் திறந்தாள். சிறிது நேரம் ஆதுரமான அணைப்பு. பின்னர் மீண்டும் முத்தமிட்டுப் பிரிந்தனர்.. !!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *