என் தேவதை – Part 5 28

பத்து மணிக்கு தமிழைப் பார்க்கப் போனான். இன்றும் அவன் அவள் வீட்டுக்குப் போகவில்லை. ஸ்கூல் பக்கத்தில் நின்றிருந்தான். சிறிது நேரம் கழித்து ஆரஞ்சு வண்ண டாப்ஸும், கருப்பு லெக்கிங்ஸும் அணிந்து அட்டகாசமாக வந்தாள் தமிழ். மார்பில் கருப்பு துப்பட்டா. நார்மல் மேக்கப் செய்து கூந்தலின் ஓரத்தில் ஒற்றை ரோஜா சொருகியிருந்தாள். அவளைப் பார்த்த நொடியே அவன் மனசு கரைந்தது. அவன் இதயத்துடிப்பு தானாக எகிறியது.
‘எவ்வளவு அழகு என் தேவதை’

மலர்ந்த முகமும், புன்னகை இதழுமாய் அவனிடம் வந்தாள் தமிழ். அவள் கண்கள் அவன் முகத்தை ஆவலாக விழுங்கின.

“ஹாய் தமிழ் ”
“ஹாய் அண்ணா”
“அண்ணாவா?”
“ம்ம்.. நிரூ அண்ணா” வெள்ளைப் பற்கள் பளீரிடச் சிரித்தாள்.
“அடிப்பாவி. இது உனக்கே ஓவரா தெரியல”
“ம்கூம்.. தெரியல” அவளின் காதுகளை அலங்கரித்த தொங்கட்டான்கள் அழகாய் தூரி ஆடின.
“யேய்.. நான் உன் பாய் பிரெண்டுப்பா”
“ந்நோ ப்ராப்ளம்ப்பா” மூக்கைச் சுழித்துச் சிரித்தாள்.
“ஆனா.. அண்ணான்றியே செல்லம்? ”
“ஸோ வாட்.. ஆரம்பத்துலருந்தே நான் அண்ணானுதானே கூப்பிடறேன்”
“அப்ப.. வேறம்மா”
“இப்ப?”
“இப்ப நீ என் பொண்டாட்டி ஆகப்போறவ செல்லம்”
“அய்யமாருங்க எல்லாம் அவா ஆத்துல.. அவா ஆம்படையான அண்ணானுதானே கூப்பிடுறா.. ??” என்று நீட்டி முழக்கி அய்யர் பாசை பேசினாள்.
“அவா ஆத்துல அவா கூப்பிடுவா? உம்ம ஆத்துல.. அட ச்சீ.. உங்க வீட்ல உங்கம்மா, உங்கப்பாவை எப்படி கூப்பிடறா? அண்ணான்னா?” அவனும் அவள் ஸ்டைலுக்கு மாறினான்.
“ச்சே ச்சே.. என்னங்க.. வாங்க போங்கனுதான் கூப்பிடுவா. ஆனா பாருங்கோ.. எனக்கு உங்களை அண்ணானு கூப்பிடத்தான் ரொம்ப புடிக்குது.. ப்ளீஸ்.. நான் அண்ணானே கூப்பிட்டுக்கவா?”
“எல்லா எடத்துலயுமா?”
“வேண்டாம். பர்ஸ்னலா.. நாம தனியாருக்கப்ப மட்டும் ஓகேவா?”
“உன் விருப்பம் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *