எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

என்று ஆரம்பித்த மீரா, உடனே பட்டென நிறுத்தினாள். ஏதோ யோசனையாய் நெற்றியை கீறினாள். கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தாள் . பிறகு குரலில் ஒரு புதுவித உற்சாகத்துடன் கத்தினாள்.

“ஹேய் அசோக்.. உன்கிட்ட பைக் இருக்குன்னு சொன்னேல..??”

“ம்ம்..”

“அப்போ.. இப்படி பண்ணலாமா..??”

“எப்படி..??”

“நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஜா…லியா ஊர் சுத்தலாமா..??”

அவள் அவ்வாறு கண்களில் ஒரு மின்னலுடன் கேட்கவும்.. அசோக்கிற்கு குப்பென்று இருந்தது… குளுகோஸ் சாப்பிட்டது மாதிரி.. எனர்ஜியுடன் நிமிர்ந்து அமர்ந்தான்..!! விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. வாயெல்லாம் பல்லாக கேட்டான்..!!

“மீரா…. எ..என்ன மீரா சொல்ற நீ..??”

“ஹ்ம்ம்.. உனக்கு ஓகே வா..?? நாளைக்கு ஃபுல் டே.. நீயும் நானும் மட்டும்.. யார் டிஸ்டர்பன்ஸும் இல்லாம.. தனித்தனியா..!!!”

“என்னது..??? தனித்தனியாவா..???” அசோக் படக்கென முகம் சுருங்கிப்போனவனாய் கேட்டான்.

“ஐயோ.. தனியா..!!!! நீயும் நானும் மட்டும் தனியான்னு சொன்னேன்..!! உனக்கு ஓகேவா..??”

“எ..என்ன கேள்வி இது மீரா..?? உ..உன்கூட தனியா ஊர் சுத்துறதுனா.. எவ்ளோ ஜாலியா இருக்கும்.. அதை எப்படி நான் வேணாம்னு சொல்வேன்..?? எனக்கு டபுள் ஓகே..!! நீ.. நீ… உ..உன்னை.. எப்போ எங்க வந்து பிக்கப் பண்ணனும்னு மட்டும் சொல்லு..!!”

“ம்ம்ம்ம்ம்… நாளைக்கு காலைல.. ஒரு ஒன்பது மணிக்குலாம் வடபழனி பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துடுறியா..??”

“ஓகே.. டன்..!!”

“ம்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு மேட்டர்..!!”

“என்ன..??”

“உன் பைக் எவ்ளோ போகும்..??”

“அது என்ன.. ஒரு லிட்டருக்கு முப்பத்தஞ்சு.. நாப்பது கிலோமீட்டர் போகும்..!!”

“ஐயோ.. நான் அதை கேக்கல..??”

“அப்புறம்..??”

“அதை வித்தா.. எவ்ளோக்கு போகும்னு கேட்டேன்..??” மீரா கேஷுவலாக கேட்க, அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது.

“என்னது..?? வி..வித்தாவா..?? அ..அதுலாம் ஏன் கேக்குற..??”

“அட சும்மாபா.. எந்த மாதிரி பைக்குனு எனக்கு ஒரு ஐடியா வேணும்ல.. அதுக்கு கேட்டேன்..!!”

“அ..அதுக்கு.. எந்த கம்பனி பைக்னு கேட்கலாம்ல..??”

“எனக்கு பைக் கம்பனி பத்திலாம் ஐடியா இல்ல.. அதான் பைசா பத்தி கேக்குறேன்..!!”

“ஓ..!! ம்ம்ம்… அது ஒரு நாப்பதாயிரம், அம்பதாயிரம் போகும்..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! எனக்கும் டபுள் ஓகே..!!” முகம் முழுதும் பிரகாசமாகிப் போக, மீரா இப்போது அழகாக சிரித்தாள்.

“ச்சலோ..!!” என்றவாறு பேக் எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

இருவரும் ஃபுட் கோர்ட் விட்டு வெளியே வந்தார்கள்.. ‘பை.. ஸீ யு டுமார்ரோ..’ சொல்லிக்கொண்டார்கள்..!! மீரா வடபழனி பஸ்டாண்ட் இருந்த திசையை நோக்கி நடக்க.. அசோக் அவனுடைய ஆபீஸ் இருந்த பக்கமாய் திரும்பினான்..!! அப்புறம் சிறிது நேரம் கழித்து.. அசோக்கின் ஆபீஸில்..

“ஃபுட்கோர்ட்ல.. ஸ்டெப்ஸ் விட்டு எறங்குற எடத்துல.. சைடுல ஒரு டோர் இருக்குதுல..??” அசோக் கேட்க,

“ஆமாம்..!!” அவனை சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் மூவரும் கோரஸாக சொன்னார்கள்.

“செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேர்டா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல அவனுகளுக்கு.. நான் இந்தப்பக்கம் இருக்குறது தெரியாம.. படார்ர்ர்னு கதவை தள்ளிட்டானுக மச்சி..!! யப்பா.. செம அடி.. மூஞ்சிலயே.. மூக்கு வேற கிழிஞ்சு போச்சு..!! அவனுக ரெண்டு பேரும் ‘ஸாரி ஸார்.. ஸாரி ஸார்..’ன்னு.. கால்ல விழாத கொறையா கெஞ்சுனானுக.. அவனுகளை அப்படியே ரெண்டு விடலாம் போல ஆத்திரம் எனக்கு..!! ப்ச்.. என்ன பண்றது.. ஆக்ஸிடன்ட் மாதிரி ஏதோ ஆகிப் போச்சு.. அவனுகளை அடிச்சு நமக்கு என்ன கெடைக்கப் போவுது சொல்லு..?? ‘பரவால பாஸ்.. ஃப்ரீயா விடுங்க..’ன்னு சொல்லிட்டேன்..!! மீராதான் பாவம்.. எனக்கு அடிபட்டுச்சுன்னு தெரிஞ்சதும்.. அப்படியே துடிச்சு போயிட்டா தெரியுமா..?? அவ கண்ணுல அப்படியே பொலபொலன்னு கண்ணீர் வந்துடுச்சு மச்சான்..!! ஹ்ம்ம்.. அப்புறம் அவதான் காயத்தைலாம் க்ளீன் பண்ணி.. இந்த ப்ளாஸ்டர் போட்டுவிட்டா..!!” மனசாட்சியே இல்லாமல் புழுகிய அசோக்,

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *