எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

“இல்ல.. அவனுக மேல எதுவும் தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது..!!”

“ஓ..!! இது எப்போ இருந்து..?? அவனுக ரெண்டு அப்பு அப்புனதுல இருந்தா..??”

“இல்ல.. அதுக்கு முன்னாடியே ஒரு மைல்ட் டவுட் வந்தது.. நான்தான் கொஞ்சம் மெதப்புல பேசிப்புட்டேன்..!!”

“எ..என்ன சொல்ல வர்ற..??”

“உண்மைய சொல்லு மீரா.. நீதான அவனுகளை பாத்து கண்ணடிச்ச..??” அசோக் அந்த மாதிரி நேரிடையாகவே கேட்டுவிட, இப்போது மீரா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள்.

“ஏன்.. அவனுகள்ட்ட வாங்குனதுலாம் பத்தலையா..??” என்று முஷ்டியை முறுக்கினாள். அசோக் நொந்து போனான்.

“ஐயோ தாயே.. ஆளை விடு.. உன்னை நான் ஒன்ன்ன்னும் கேக்கல..!!” என்றவாறே அவன் கைகூப்ப, மீராவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!!” கலகலவென சிரித்தாள்.

“அவனுக குடுத்ததே மூஞ்சிலாம் வின்வின்னுனு தெறிக்குது..!!” அசோக் சோகமாக சொல்ல, மீரா இப்போது அவனை சற்றே பரிதாபமாக பார்த்தாள்.

“ரொம்ப வலிக்குதா..??” அவளுடைய குரலில் புதிதாக ஒரு கனிவு.

“ம்ம்.. முடியல..!! அவனுகட்ட இருக்குறது கையா தும்பிக்கையான்னு தெரியல..!!”

“ஹாஹா.. சரி.. இரு..” சிரிப்புடன் சொன்ன மீரா, பேகிற்குள் கைவிட்டாள். சிவப்பாய் இருந்த இரண்டு மாத்திரகளை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

“இந்தா.. இதை இப்போ ஒன்னு போட்டுக்கோ.. நைட்டும் பெயின் இருந்தா இன்னொன்னு போடு.. பெயின் தெரியாது.. மார்னிங் யூ வில் பீ ஆல்ரைட்..!!”

“ஹ்ம்ம்.. அது சரி.. இதென்ன.. பைக்குள்ளயே ஒரு ஃபார்மஸி வச்சிருக்குற..??”

மாத்திரைகளை வாங்கிக்கொண்டே, அசோக் அந்த மாதிரி இயல்பாக கேட்கவும், மீராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. குப்பென ஒரு சோகம் எங்கிருந்தோ அவளது முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. உதடுகளை மடித்து பற்களால் கடித்துக் கொண்டவள், தலையை மெல்ல குனிந்து கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்த மீரா, பிறகு குரலில் புதுவிதமாய் ஒரு சோகம் வழிந்தோட, திக்கி திணறி சொன்னாள்.

“எ..எனக்கு.. எனக்கு ‘அரித்மொஜெனிக் வென்ட்ரிகுலார் டிஸ்ப்ளேசியா’ அப்டின்னு.. ஒ..ஒரு டிஸீஸ் இருக்கு அசோக்..!!” மீரா சொல்ல அசோக்கிடம் ஒரு சீரியஸ்னஸ். குழப்பமாய் நெற்றியை சுருக்கினான்.

“வா..வாட்ஸ் தேட்..?? அ..அரித்மேடிக்..??”

“ப்ச்.. அரித்மேடிக்கும் இல்ல.. அல்ஜீப்ராவும் இல்ல.. அரித்மொஜெனிக்..!! ரொம்ப ரொம்ப ரேரான ஹார்ட் டிஸீஸ்..!! ஸா..ஸாரி.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும்.. மறைச்சுட்டேன்.. ஸாரி..!!” அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித கலவரம்.

“வெ..வெளையாடாத மீரா..!!”

“இதுல வெளையாடுறதுக்கு என்ன இருக்கு..??”

“ரொ..ரொம்ப.. ரொம்ப மோசமான வியாதியா அது..??”

“ஆமாம்.. ஹார்ட் ப்ராப்பர் ஷேப்ல இருக்காது.. ஒரு சைட் மட்டும் ஓவரா வீங்கிருக்கும்.. ஹார்ட் பீட் ரொம்ப அப்னார்மலா இருக்கும்.. ப்ளட் ஸர்க்குலேஷன் ஒழுங்கா இருக்காது..!!”

“ஓ..!! இ..இதை சரி பண்ண முடியாதா மீரா..?? ச..சர்ஜரி ஏதாவது பண்ணினா..??”

“ம்ஹூம்.. இந்த டிஸீஸ்கு எந்த ட்ரீட்மன்ட்டும் இல்ல..!! இ..இப்போ.. இப்போ நான் ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல வேற இருக்கேன் அசோக்.. இத்தனை நாளா என் ஹார்ட் துடிச்சுட்டு இருந்ததே பெரிய அதிசயம்.. இ..இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல.. எப்போவேனா ஹார்ட் அட்டாக் வந்து.. நா..நான் மண்டையை போட்டுடலாம்..!!” மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அப்படியே துடித்து போனான்.

“பச்.. எ..என்ன மீரா நீ..?? இ..இப்படிலாம் இனிமே பேசாத ப்ளீஸ்..!! எதை இழந்தாலும்.. நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.. தெரியுமா.?? உ..உனக்கு.. உனக்கு ஒன்னும் ஆகாது மீரா.. நான் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்.. என்னை நம்பு.. நான் இருக்கேன்ல..?? நான் எப்படியாவது.. ஏதாவது செஞ்சு.. உ..உன்னை நான்.. உன்னை..” அசோக் அவள் மீதான காதலுடன் பதற்றமாய் பேசிகொண்டிருக்க, மீரா அவனுடைய முகத்தில் மிதந்த உணர்சிகளையே ஒருசில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்,

“ச்சோ.. ச்வீட்..!!” என்றாள் திடீரென ஒரு அழகுப் புன்னகையுடன்.

“என்ன நீ.. சும்மா சும்மா ஸ்வீட் காரம்னுட்டு..??” அசோக் இப்போது பேசுவதை நிறுத்திவிட்டு, அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“ஹாஹாஹாஹா..!!” அவளோ எளிறுகள் தெரிய சிரித்தாள்.

“ஏ..ஏன் சிரிக்கிற..??”

“ஹாஹா.. பின்ன என்ன..?? என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!! நான் சும்மா லுல்லுலாயிக்கு சொன்னேன்..!!”

“என்னது..?? லுல்லுலாயிக்கா..??” அசோக் எரிச்சலாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“ஹ்ம்ம்.. என்னைப் பாத்தா என்ன ஹார்ட் ப்ராப்ளம் இருக்குறவ மாதிரியா இருக்கு..?? ம்ம்..??”

என்றவாறே மீரா இப்போது சரக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்..!! ஷோல்டர்கள் இரண்டையும் சற்றே பின்னுக்கு தள்ளி.. அவள் அந்த மாதிரி விறைப்பாக நிமிரவும்.. அவ்வளவு நேரம் பம்மிக்கொண்டு கிடந்த அவளது மார்புப் பந்துகள் ரெண்டும்.. இப்போது குபுக்கென நிமிர்ந்து நின்றன..!! அவள் அணிந்திருந்த மெல்லிய மஞ்சள் நிற டிஷர்ட்டுக்குள்ளாக.. தங்களது கண.. மற்றும்.. கன.. பரிமானங்களையும் காட்டிக்கொண்டு.. திம்மென விம்மிப்போய் காட்சியளித்தன..!! அந்த காட்சியை மிக அருகில் இருந்து பார்த்த அசோக்குடய ஹார்ட்.. உடனடியாய் ஒரு அட்டாக் வாங்கி துடிதுடியென துடித்தது..!! ‘உப்’ என்று மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்ட அசோக்.. அப்புறம் சிறிது நேரத்திற்கு அப்படியே மூர்ச்சையாகிப் போனான்..!! அவளுடைய அரைக்கோள வடிவழகில் இருந்து பார்வையை அகற்றிக்கொள்ள.. அரும்பாடு பட வேண்டியது இருந்தது அசோக்கிற்கு..!! திணறினான்.. தடுமாறினான்..!!

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *