எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

“அந்த புண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அட்ச்சுசு..!!”

“வாட்..???” அசோக் நம்பமுடியாமல் கேட்க,

“அந்த பொண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அடிச்சுச்சு..!!” என்றான் ஜான் ஸீனா பெட்டர் டமிலில். அசோக்கிற்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா.. என்னங்க நீங்க காமடி பண்றீங்க.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்றது இல்லையா..?? ஹையோ.. ஹையோ..!!”

“க்யா..?? க்யா போல்த்தா..??”

“பின்ன என்னங்க..?? அங்க பாருங்க என் ஆளை.. எப்டி செதுக்குன சிலை மாதிரி இருக்குறா பாருங்க.. அவ போய் செனப்பன்னி மாதிரி இருக்குற உங்களை பாத்து கண்ணடிச்சான்னு சொன்னா… எப்படிங்க நம்புறது..??”

ஏதோ ஒரு ஃப்ளோவில் அசோக் அவ்வாறு சொல்லிவிட்டான். ஆனால் சொன்னபிறகு அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று ஃபீல் செய்தான். அதற்கு ஏற்ற மாதிரி, அவர்களும் இப்போது அசோக்கை உர்ரென்று முறைத்தனர். பிறகு கையில் இருந்த மாமிசத்தை தட்டில் வைத்துவிட்டு.. இருவரும் ஒரே நேரத்தில் எழுந்தனர்.. ஒரே நேரத்தில் முஷ்டியை மடக்கினர்.. ஒரே நேரத்தில் அசோக்கின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டனர்..!!

அடுத்த நொடி அசோக் மீரா அமர்ந்திருந்த டேபிளில் வந்து கிடந்தான்..!! என்ன நடந்தது என்றே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. இரண்டு கன்னங்களும் திகுதிகுவென எரிந்தன.. உதட்டோரம் கசிந்த ரத்தம் உப்புக் கரித்தது.. மூளைக்குள் மினி ஸ்டார்ஸ் பறந்தன.. மண்டைக்குள் கிணிகிணிகிணியென மணியடித்தது..!! அசோக் வீங்கிப்போன முகத்துடன் மீராவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான். அவளோ இருகைகளாலும் கன்னத்தை பொத்திக்கொண்டு..

“ஹைய்யயோ..!!” என்றாள் வடிவேலு வாய்ஸில்.

அந்தக்குரலில் இருந்தது.. ஆச்சரியமா.. அதிர்ச்சியா.. வருத்தமா.. சோகமா.. சந்தோஷமா..?? எதுவும் புரியவில்லை அசோக்கிற்கு..!!!

வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, ‘உஷ்.. உஷ்.. உஷ்..’ என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!!

“ம்ம்.. கையை எடு..!!” மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான்.

மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள்.

“ஹ்ஹ்ஹ்ஹா..!!” வேதனையில் முனகினான் அசோக்.

“ப்ச்.. ரொம்ப பெனாத்தாத..!! ஒன்னுல்ல.. ஒரே நாள்ல சரியாயிடும்..!!”

மீரா கூலாக சொல்லிக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் அண்டர்டேகரும், ஜான் ஸீனாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். நடந்து இவர்களை நெருங்கியவர்கள், அசோக்கின் முதுகை செல்லமாக தட்டினர்.

“வாய் ப்ராப்பர் இல்லே உன்க்கு.. அதான் மூக்லே ப்ளாஸ்டர்..!!” என்றான் அண்டர்டேகர்.

“டேக் கேர் பாய்..!!” என்று கிண்டலாக சொன்னான் ஜான் ஸீனா. கேஷுவலாக சொல்லிவிட்டு இருவரும் திரும்பி நடந்தார்கள்.

“ஏய்.. போங்கடா..!! மூக்கை பேத்துட்டு.. டேக் கேராம்.. டேக் கேர்..!!”

மீரா அவர்களுடைய முதுகை பார்த்து சீறினாள். டேபிளில் கிடந்த மிளகாய் துகள் பாக்கெட்டுகளை அள்ளி, அவர்கள் மீது வீசினாள். அவர்கள் இருவரும் அவளை கண்டுகொள்ளமல் அங்கிருந்து அகன்றனர். அண்டர்டேகர் மட்டும் திரும்பிபார்த்து ஒருமுறை ‘க்யா..??’ என்று வாயை பிளந்தான்.

“ப்ச்.. விடு மீரா.. அவனுகளை எதுக்கு திட்டுற..??” அசோக் சலிப்பாக சொன்னான்.

“ஏன்.. திரும்ப வந்துடுவானுகனு பயமா..??” மீராவின் குரலில் ஒரு நக்கல்.

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *