எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

நாள் – 3

காலை 9.45 மணி..!! அசோக்கும் மீராவும்.. அடையாறு கஸ்தூர்பா நகரில்.. ஏழாவது மெயின் ரோடும், எட்டாவது மெயின் ரோடும்.. முட்டிக்கொள்கிற இடத்தில் சாலையோரமாக நின்றிருந்தார்கள்.!!

“குட் மார்னிங்.. நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்..!! எங்க.. சொல்லு பார்ப்போம்..??”

“கு..குட் மார்னிங்.. நா..நான் அனோபா விநாதை விடுதில..” அசோக் சொல்லி முடிக்கும் முன்பே, அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டு வைத்தாள் மீரா.

“ஆஹ்ஹ்ஹ்….!!!!” அசோக் வலி தாங்காமல் தலையை தேய்த்துக் கொண்டான்.

“த்தூ.. இத்தனை வயசாச்சு.. இன்னும் பேச கத்துக்கல நீ..!! ஒரு நாலுவரி.. அதை மனப்பாடம் பண்ண வக்கு இல்ல..??”

“ஷ்ஷ்ஷ்.. ஸாரி மீரா.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு.. இரு.. திரும்ப சொல்றேன்..!!”

“ம்ம்.. சீக்கிரம்..!! டைம் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு..!!”

“கு..குட் மார்னிங்.. நா..நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்.. எங்க விடுதி சார்பா ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்த நெனைச்சிருக்குறோம்.. எ..எங்க விடுதில இருக்குற மாற்று திறனாளிகளை மட்டும் வச்சே.. இந்த இசை நிகழ்ச்சியை நடத்தப் போறோம்.. ரொம்ப ரொம்ப வித்தியாசமான.. நீங்க கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி..!! அ..அதுக்கான என்ட்ரன்ஸ் டிக்கெட்தான் ஸார் இது.. ஒரு டிக்கெட்டோட விலை.. ஜஸ்ட் பிஃப்ட்டி ருபீஸ்தான்..!! இதை நீ வாங்கிகிட்டா.. உங்களோட ஒரு நாள் ஈவினிங்க சந்தோஷமா கழிச்ச மாதிரியும் இருக்கும்.. எங்க விடுதில இருக்குற நெறைய ஆதரவற்ற குழந்தைங்களுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்..!! ப்ளீஸ் ஸார்.. உங்களோட உதவி எங்களுக்கு தேவை..!!” அசோக் தட்டுதடுமாறி சொல்லி முடிக்க,

“ஹ்ம்ம்… குட்..!! இந்தா.. இதுல நூறு டிக்கெட் இருக்கு.. நீ இந்தப்பக்கம் இருக்குற ஏரியாலாம் எடுத்துக்கோ.. நான் அந்தப்பக்கம்.. ஈவினிங் ஆறு மணிக்கு திரும்ப இதே எடத்துல மீட் பண்ணுவோம்.. சரியா..??”

“ம்ம்..!!”

“நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. ஆறு மணிக்குள்ள எல்லா டிக்கெட்டையும் வித்துட்டு.. ஐயாயிரம் ரூபா பணத்தோட வரணும்.. இல்லனா உன் பைக்கை காயலான் கடைல போட்டு காசை எடுத்துக்க வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சதா..??” மீரா பைக் சாவியை சுழற்றிக்கொண்டே சொன்னாள்.

“இ..இதுலாம் நல்லா இல்ல மீரா..!!” அசோக் பரிதாபமாக சொன்னான்.

“எதுலாம்..??”

“பார்க் பீச்னு சுத்தப் போறோம் நெனச்சுட்டு ஆசையா வந்தேன்.. இப்படி பாட்டுக்கச்சேரி டிக்கெட் விக்க சொல்றியே.. அதுவும் தெருத்தெருவா.. தனித்தனியா..!! அட்லீஸ்ட் சேர்ந்தாவது போகலாம்ல..??”

“நாம என்ன கொள்ளையடிக்கவா போறோம்.. சேர்ந்து போக சொல்ற..?? டொனேஷன் கேக்க போறோம்.. தனித்தனியா போனாத்தான் நெறைய பேரை மீட் பண்ணலாம்.. நெறைய பேரை மீட் பண்ணாத்தான் நெறைய டிக்கெட்டும் விக்க சான்ஸ் இருக்கு..!!”

“ப்ளீஸ் மீரா..!!”

“ப்ச்.. பைக் திரும்ப வேணுமா வேணாமா உனக்கு..??”

“வேணும்..!!

“அப்போ கெளம்பு..!!”

“நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல மீரா.. ஜாலியா ஊர் சுத்தலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்படி என் பைக்கை வாங்கி வச்சுட்டு மெரட்றியே..?? நீ பண்றதுலாம் தப்புன்னு உனக்கு தோணல..??”

“இல்ல.. தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது நடந்தா.. எதுவுமே தப்பில்ல..!!” மீரா ‘நாயகன்’ கமல் போல சொல்ல,

“அய்யயையைய்யயே…!!” என்று அசோக் ‘காதல்’ பரத் போல தலையில் அடித்துக் கொண்டான்.

அன்று முழுதும் அசோக் வீதி வீதியாக அலைந்து திரிந்தான்..!! அடையாறு ஏரியாவின் இண்டு இடுக்கு, சந்து பொந்தெல்லாம்.. தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டான்..!! ஒவ்வொரு டிக்கெட்டையும் விற்று தீர்ப்பதற்குள்.. அசோக்குக்கு.. தாவு தீர்ந்தது.. தவிடு தின்ன வேண்டி இருந்தது.. தழை கீழாக நின்று டகீலா அடிக்க நேர்ந்தது..!! இலவசம் என்றதும் ‘ஈஈ’ என இளிக்கிற மனித இனம்.. நன்கொடை என்றதும் நாயைப் போல பார்க்கிற நிதர்சனத்தை.. கண்கூடாக கண்டு கொண்டான்..!!

“இல்லைங்க.. எதுவும் வாங்கறது இல்ல..!!” என்ன ஏது என்று, நின்று கேட்க கூட நேரமின்றி, அசோக்கின் முகத்தில் கதவை அறைந்துவிட்டு, தியாகம் சீரியல் பார்க்க விரைந்தாள் ஒரு இல்லத்தரசி.

“என்க்கு டமில் வராது.. ஐ டோன்ட் நோ இங்க்லீஷ் டூ..!!” வாய் கூசாமல் பொய் சொன்னான் ஒரு நடுத்தர ஆசாமி.

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *