எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 41

“நீ மட்டும் என்னை பத்தி தெரியாம சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்ற.. அதே நான் சொன்னா.. சந்தேகப்படுறல.. போ..!!”

“ஹையோ.. ஸாரிம்மா.. ஸாரி.. என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!! இனிமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன்.. ஓகே வா..?? ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!”

“ம்ம்.. பரவால விடு..!!”

“ஹேய்.. நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு..!! கொஞ்சம் சிரியேன் ப்ளீஸ்..!!”

“ப்ச்.. வேணாம்.. நான் சிரிக்கிற மூட்ல இல்ல..!!”

“ம்ம்ம்ம்… ஓகே.. அப்போ.. நான் உன்னை சிரிக்க வைக்கவா..??”

“எப்படி..??”

“எனக்கு ஏதோ நிக் நேம் வச்சிருக்கேன்னு சொன்னேல..?? அது என்னன்னு கெஸ் பண்ணவா..??” அசோக் அவ்வாறு கேட்கவும்,

“ம்ம்.. ஓகே..!!” மீரா திடீர் உற்சாகத்துடன் சொன்னாள். அசோக் சில வினாடிகள் யோசிப்பது போல பாவ்லா செய்துவிட்டு கேட்டான்.

“ம்ம்.. தடிமாடு..??” அவன் அவ்வாறு கேட்கவும் மீரா குபுக்கென சிரித்துவிட்டாள்.

“ஹாஹாஹாஹா…!! இல்ல..!!” அவளை சிரிக்க வைத்துவிட்ட திருப்தியில், அசோக்கின் முகத்திலும் இப்போது ஒரு பூரிப்பு.

“ம்ம்ம்.. அப்படினா.. கருங்கொரங்கு..??”

“ஹாஹாஹாஹா…!!”

“அதுவும் இல்லையா..?? ஓகே.. காட்டுப்பன்னி..??”

“ஹாஹாஹாஹா…!! ச்சோ.. ச்வீட்..!!!! பக்கத்துல வந்துட்ட.. ஹாஹா..!! ம்ம்ம்.. போதும் விடு.. நானே சொல்லிர்றேன்..!!”

“ஹாஹா..!! ஓகே.. சொல்லு.. வாட்ஸ் மை நிக் நேம்..??”

“ஹனிபனி..!!”

“ஹனிபனியா..??”

“ம்ம்..!! யு’ஆர் மை பம்கின் பம்கின்.. ஹலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங் சம்திங்.. ஹலோ ஹனிபனி..!!”

ஐடியா மொபைல் விளம்பர பாடலை.. அசோக்கை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி.. கண்களை ‘பட், பட்’ என சிமிட்டியவாறே.. குரலில் ஒரு கிறக்கத்துடன் மீரா பாட.. அசோக் அப்படியே உருகிப் போனான்..!! அவளுடைய குரல் அவனது காது வழியே புகுந்து.. இதயத்தை வருடி சில்லிட செய்தது..!! எழில் கொஞ்சி விளையாடுகிற அவளுடைய முகத்தையே.. ஏக்கமும் காதலுமாய் பார்த்தான்..!! ‘ஏதோ நேற்று அவசரத்தில் தவறான நம்பர் தந்துவிட்டாள்.. என் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள்.. இவளைப்போய் சந்தேகப் பட்டுவிட்டேனே..?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

ஆரம்பத்தில் இருந்த இறுக்க நிலை தகர்ந்து, இப்போது இருவரும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தனர். கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஃபுட்கோர்ட்டிலும் கூட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் அசோக் பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக சொன்னான்.

“ஹேய்.. என் நம்பர் சேன்ஜ் பண்ணிட்டேன் சொன்னேன்ல.. ந்யூ நம்பர் சொல்றேன்.. ஸேவ் பண்ணிக்கோ..!!”

“ம்ம்.. சொல்லு..!!”

“எதுல ஸேவ் பண்ணிப்ப..?? உன் செல்ஃபோனை எடுத்துக்கோ..!!”

“எங்கிட்ட செல்ஃபோன்லாம் இல்ல.. நீ நம்பர் சொல்லு.. நான் மைண்ட்ல ஸேவ் பண்ணிக்கிறேன்..!!” மீரா கேஷுவலாக சொல்ல, அசோக் இப்போது பக்கென அதிர்ந்தான்.

“என்னது..??? செல்ஃபோன் இல்லையா..?? அப்புறம் நம்பர் கொடுத்த..??”

“ஹப்பா..!! இல்லன்னா.. இப்போ எங்கிட்ட இல்லன்னு சொன்னேன்.. வீட்ல வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! மறந்து வச்சுட்டு வந்துட்டியா..??”

“இ..இல்லப்பா.. நான் செல்ஃபோன் அதிகமா யூஸ் பண்றது இல்ல.. எப்போவாவதுதான்..!! ஆக்சுவலா எங்கிட்ட செல்ஃபோன் இருக்குறதே ஒன்னு ரெண்டு முக்கியமான ஃப்ரண்ட்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது.. முக்கியமா என் ஃபேமிலில யாருக்குமே தெரியாது.. தெரிஞ்சா அவ்வளவுதான்..!! உன்கிட்ட நான் நம்பர் குடுத்தது எனக்கு நீ கால் பண்றதுக்காக இல்ல.. நான் உனக்கு கால் பண்றப்போ.. நான்தான் கால் பண்றேன்னு நீ தெரிஞ்சுக்குறதுக்காக..!!” மீரா அவ்வாறு சொன்னது அசோக்கிற்கு குழப்பத்தையே உண்டுபண்ணியது.

“எ..என்ன சொல்ற நீ.. நீ செல்ஃபோன் வச்சிருக்குறது உங்க வீட்டுக்கே தெரியாதா..??”

“ஹ்ம்ம்..!! இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி..?? எங்க வீட்ல.. நோ டிவி.. நோ மூவி.. நோ இன்டர்நெட்.. நோ சாங்க்ஸ்.. நோ மேகஸின்ஸ்.. நோ பாய்-கேர்ல் ஃப்ரண்ட்ஷிப்..!!” மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகத்தில் எக்கச்சக்கமாய் குழப்ப ரேகைகள்.

1 Comment

  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Comments are closed.