இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 66

இதழ்கள் இரண்டும் விரிந்து “Long time no see” என்றது.

“நீ மட்டும் தான் கலை வேணும் எனக்கு”

அதே நொடிப்பொழுதில் கலையின் தோளில் ஒரு கை படர்ந்தது, அவள் கன்னங்களில் இரு இதழ்கள் பதிந்தது.

இதழ்கள் இரண்டும் விரிந்து “Long time no see” என்றது.

அந்த இதழ்களுக்கு சொந்தமான வசீகர தோற்றம் கொண்ட ஒரு ஆடவன் கலைக்கு மறுபக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“ஹேய், முகுந்த் நீ ஏன் இங்க வந்த, நமக்குள்ள தான் இனி எதுவும் கிடையாது ன்னு பேசி முடிவெடுத்துட்டோம்ல.. ச்சீய் தோள் மேல இருந்து கை எடுடா”

“ஹே என்னடி ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற.. புதுசா வாட்ச் வாங்கலாம் ன்னு உங்க கடைக்கு போனேன், நீ இல்ல, சுபர்ணா ட்ட கேட்டப்போ நீ பீச்சுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க.. சரி பாத்து ரொம்ப நாளாச்சே ன்னு வந்தா, ரொம்ப தான் கோவப்படுற”

“யாரு கலை இது உன் பிரண்ட் ஆ?”

“கிஷோர் இது முகுந்த், காலேஜ் ஒண்ணா படிச்சோம் அவ்ளோதான்..”

“ஹே என்னடி அவ்ளோதான் ன்னு சொல்ற.. பாஸ் நானே சொல்றேன்.. நான் கலையோட Ex Boyfriend. ஒன் இயர் லவ் பண்ணோம், சும்மா சொல்ல கூடாது பாஸ் ஒன் இயர் செம்மையா லவ் பண்ணோம்.. இப்போ நாம உக்காந்து இருக்கோமே இது தான் எங்க பேவரட் ஸ்பாட்.. கலை செம லவ் மூடுல இருந்தா ன்னா என்னை இங்க தான் வர சொல்லுவா.”

(கலை கிஷோரை பீச்சுக்கு வர சொன்னதன் காரணத்தை இப்பொழுது தான் அறிந்தான். கிஷோரின் மேல் அவளுக்கு ஏற்கனவே காதல் ஆழமாக குடிபுகுந்து விட்டது) முகுந்த் மேலும் தொடர்ந்தான்.

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.