இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 66

ஆனா ஒன்னு டா, கரண்ட் வரல ன்னு போஸ்ட் கம்பத்துல ஏறுறவன், தண்ணி வரல ன்னு தண்ணி லாரிகாரன், தண்ணி கலக்காம பால் கொடுக்கணும் ன்னு பால் காரன் கூட போவேன் ன்னு கனவு ல கூட நினைச்சிடாத.”

இதை அவள் சொல்ல இருவரும் ஒருசேர சிரித்தனர்.

இங்கு தான் புதிய யுகத்தின் புதுவிதமான காதலானது கலை மற்றும் கிஷோர் என்ற ஜோடிகள் மூலம் தொடங்கவிருக்கிறது.

கிஷோரின் கை கடல் மண்ணில் பாதி புதைந்து இருக்க, அவன் கையின் மேல் தன் கையை கலை வைத்திருந்தாள். உப்புக்காற்று இதமாக அவர்களை தீண்டுவது போல் அவளும் கிஷோரின் கையை மெதுவாக வருடிக் கொண்டிருந்தாள்.கிஷோரின் தோளில் சாய்ந்திருந்த கலை அவ்வப்பொழுது இடைவெளி விட்டு அவன் கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

சூரியன் முழுவதுமாய் கடலுக்குள் மூழ்கியிருக்க

கலை நேரமாச்சு நான் உன்னை உங்க வீட்டுல ட்ராப் பண்ணிட்டு எங்க வீட்டுக்கு போறேன், கிளம்பலாமா??

கிஷோர் லூசு, இப்போ தான் லவ்வர்ஸ் நேரமே ஸ்டார்ட் ஆகியிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு.. உக்காரு ஒழுங்கா.

ஓஹ்!!! கலை இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது, நீ தான் ஒன் இயர் லவ் பண்ணிருக்கில்ல, எனக்கு சொல்லி கொடு எப்படி லவ் பண்ணனும்ன்னு நான் போக போக கத்துக்குறேன்.

நீ ஒன்னும் கவலை படாத கிஷோர், நானும் முகுந்த் உம் வெறித்தனமா லவ் பண்ணி அதுல PhD யே வாங்கிருக்கோம், உனக்கு ‘அ’ ல இருந்து ‘ஃ’ க்கு வரைக்கும் எல்லாமே சொல்லி தரேன். முதல்ல நீ என்னை கலை கலை ன்னு சொல்றத நிறுத்திட்டு வாடி போடி ன்னு சொல்லு..

“சரி………………………………..(நீண்ட இடைவெளி விட்டு, மிகவும் கடினப்பட்டு) டி” என்றான்.

ஹையோ டி ன்னு சொல்றதுக்கே இவ்வளவு போராடுற, ரொம்ப கஷ்டம் டா,

ஹிஹிஹிஹி

“ரொம்ப இழிக்காத, மூடு. சரி டா உனக்கு இப்போ ஏதாச்சும் ஆசை இருக்கா??” என்று கேட்டுக்கொண்டே அவன் கையில் மெதுவாக கொடு போட்டாள்.

நெறய இருக்கு கலை, ஐயோ சாரி டி, நெறய இருக்கு டி…..

ஓ சூப்பர் டா, எங்க சொல்லு

நெறய சம்பாதிக்கணும், கல்யாணத்துக்கு முன்னாடியே நமக்கு ன்னு தனியா ஒரு வீடு கட்டி வச்சு கல்யாணம் ஆன முதல் நாளே அங்க குடி புகுந்துடணும். அப்புறம் இன்னும் நெறய சம்பாதிச்சு நம்ம பேபி க்கு சேர்த்து வைக்க ஆரம்பிக்கணும்.

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.