ஐயோ இப்ப என்ன பண்றது ?
இரு பெட்ரோல் பங் இருக்கான்னு விசாரிப்போம் …
எனக்கு அடி வயிற்றில் ஒரு நெருப்பு பரவ!! சலீம் இறங்கி நின்று விசாரித்தார் …
ஒரு ஆள் பைக்ல வர அவனிடம் விசாரித்தார் …
பிறகு என்னிடம் வந்து காயு இங்க பெட்ரோல் பங் போக இன்னும் பத்து கிலோ மீட்டர் போகணுமாம் …அதனால அது சரி படாது … ஒரு கிலோ மீட்டர்ல ஒரு லாட்ஜ் இருக்காம் … நாம அங்க போயி தங்கிடுவோம் …
கார் நான் ஹெல்ப் லைனுக்கு போன் போட்டு பிக்கப் பண்ணிக்க சொல்றேன் இப்போதைக்கு நாம தலை மறைவாகனும் ரோட்ல போறப்ப கார் அவனுங்க கண்ல பட்டா அவ்ளோதான் …
சரி சார் ஆனா இப்டியே எப்படி ரோட்ல வருவேன்னு புடவை இல்லாத என் உடலை காட்ட …
ஓ காட் மனசாட்சி இல்லாதவனுங்க …
சரி இதை போட்டுக்க என்று அவர் டி ஷர்டை கழட்டி குடுக்க நான் மணீஷை அவரிடம் குடுத்துவிட்டு அவர் டி ஷர்டை போட்டுக்கொண்டேன் …
நல்லவேளை அவனுக்கு இதெல்லாம் புரியாத வயது …
அதுவோ மார்கழி மாசம் அந்த இரவு நேரத்தில் அவர் வெற்று உடம்போடு குளிரில் நடுங்கியபடி வந்தார் …
எனக்கு அவரை பார்க்கவே பாவமாக இருந்தது …
பிறகு ரோட்டில் ஓரமாக நடந்தோம் … ஆனா சலீம் விவரமாக எதிர் திசையில் மாறி கூட்டி போனார் … மணீஷை அவரே தோளில் போட்டுக்கொண்டு போனார் …
நான் மனதுக்குள் சலீமை பற்றி பெருமையாக நிணைந்துக்கொண்டே வந்தேன் …
சொன்ன மாதிரி ஒரு லாட்ஜ் வந்தது …
சலீம் மட்டும் சென்று ரிசெப்ஷனில் பேசிவிட்டு வந்தார் …
பிறகு ஒரு ஆள் வந்து என்னை மேலையும் கீழையும் பார்க்க சலீம் அவரிடம் ரூம் எங்க இருக்கு ?
அது சரி நீங்க சட்டை இல்லாம இருக்கீங்க இவங்க புடவை இல்லாம இருக்காங்க என்னது இது ?
சலீம் அந்த ஆளை தனியாக கூட்டி போயி எதோ சொல்ல அவன் சலீம் நீட்டிய பணத்தை வாங்கிக்கொண்டு எங்களை ரூமுக்கு அழைத்து போனான் ..
ரொம்ப ரொம்ப சின்ன ரூம் … சிங்கிள் பெட் ரூம் …
கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்க காயு டபுள் பெட்ரூம் எதுவும் இல்லை …
சார் அதெல்லம் சொல்லாதீங்க எங்களுக்காக நீங்க தான் இவளோ கஷ்டப்படுறீங்க …
அதெல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு அவனுங்க முகத்தை பார்க்கும்போதே டவுட் ஆனுச்சு நேத்து அப்டி பொங்குனானுங்க இன்னைக்கு அப்டியே சாந்தமா பேசும்போதே நினைச்சேன் …
ம் … நான் தான் சார் முட்டாள் தனமா நடந்துக்கிட்டேன் … நீங்க மட்டும் வரலைன்னா செத்துருப்பேன் ..
ஹே லூசு …. நீ உனக்காக இல்லைன்னாலும் மணிஷுக்காக வாழனும் …
ம்ம் … ஒரு பெருமூச்சை விட …
என்னம்மா ஆச்சி அப்பா எங்க ?
அப்பா வீட்டுக்கு போயிருக்கார் … பத்து நாள்ல வந்துடுவார்…
இப்ப தான வந்தார் அதுக்குள் போயிட்டாரா ?
இல்லடா கண்ணா அப்பாவுக்கு சின்ன வேலை அதான் போயிட்டார் …
ம்ம்ம் …
மணீஷ் கண்ணா நீ தூங்கு காலைல ஸ்கூலுக்கு போகணும்ல …
சரி அங்கிள் … இதான் உங்க வீடா ?
ம் ஆமாப்பா நீ தூங்கு …
நேத்து ஒரு பெரிய வீட்ல இருந்தீங்க …
ம்ம் நாளைக்கு நாம அங்க இருப்போம் ! இப்ப நீ தூங்கு !!

Mm good . Good