அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அந்த கான்வென்ட்டில் இருக்கும் ஹாலில் எல்லோருக்கும் மதிய உணவு பரிமாறபட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ உணவாக சிக்கன் பிரியாணி செய்திருந்தனர். என்னுடைய இலையிலும் அந்த பிரியாணி வைத்தவுடன் என்னுடைய நினைவு மீண்டும் பின்னோக்கி சென்றது.
ஆம் எனக்கு கையில் அடிப்பட்டு இருந்த போது அகல்யாஅன்றைக்கு மாதத்திற்கு இந்த சிக்கன் பிரியாணியை தான் ஹோட்டலில் வாங்கியிருந்தாள்.
திடீரென்று வந்த சிஸ்டர் “என்ன தம்பி சாப்பிடாம யோசனை பண்ணிட்டு இருக்கீங்க?” கேட்க எனக்கு அகல்யாவே கேட்டது போல் இருந்தது.
அன்றும் அகல்யா இப்படி தான் சொன்னாள். ஆனால் அன்று கையில் அடிப்பட்டு கட்டு போட்டியிருந்ததால் அகல்யாவிடம் கையை காட்டி
“எப்படி சாப்பிடுறது அம்மு. இந்த கையில வேணா சாப்பிடவா?” இடது கையை ஆட்டி ஆட்டி காட்ட அவள் கையை தட்டிவிட்டு
“அந்த கையில எல்லாம் ஒன்னும் நீங்க சாப்பிட வேண்டாம். இருங்க நானே எடுத்து தரேன்” சொல்லி இலையில் இருந்த பிரியாணி தன் பட்டு விரலால் எடுத்து குவித்து என் வாயருகில் கொண்டு வர நான் வாயை திறந்து அந்த பிரியாணி பருக்கைகளை வாங்கினேன். உண்மையிலே பிரியாணி சுவையாக இருந்தது. அது சமைத்தவரின் கைப்பக்குவமா இல்லை எனக்கு எடுத்து குடுத்த அகல்யாவின் கைப்பக்குவமா என்பது தெரியவில்லை. அகல்யா குடுக்க குடுக்க என் வாயினுள் பிரியாணி சென்றுக் கொண்டே இருந்தது.
“என்ன அம்மு வெறும் பிரியாணி மட்டும் வாங்கினியா சைட் டிஸ் எதுவும் வாங்கலையா?” கேட்க அப்போது தான் அவள் வாங்கிய சில்லி சிக்கன் நியாபகம் வந்தது போல்
“இல்லப்பா சில்லி சிக்கன் வாங்கியிருக்கேன்” சொல்லி பார்சல் கவரில் இருந்து சில்லி பிரித்து அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து எனக்கு குடுத்தாள். முதலில் ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரம் செல்ல செல்ல அந்த சில்லி சிக்கன் அதன் வேலையை காட்ட தொடங்கிவிட்டது. எனக்கு மிகவும் காரமாக இருந்ததால் பொறுக்க முடியாமல்
“அய்யோ அம்மு சில்லி ரொம்ப காரமா இருக்கு. ஏதாவது பண்ணு” சொல்ல அவள் உடனே வேகமாக எழுந்து பிரிட்ஜை திறந்து வாட்டர் கேனில் இருக்கும் சிறிது தண்ணீரை கொண்டு வந்து குடுத்தாள். அதை முழுவதுமாக குடித்தும் அந்த காரம் குறைந்த மாதிரி தெரியவில்லை.
“அய்யோ அம்மு முடியல ரொம்ப காரமா இருக்கு” விடாமல் சொல்லி புலம்பி கத்திக் கொண்டிருக்க என்ன செய்வது என தெரியாமல் இருந்த அகல்யா திடீரென்று என் பக்கத்தில் வந்து என் உதட்டை அவளின் உதட்டை வைத்து நன்றாக அழுத்தி பொறுத்தினாள். காரமாக இருந்த என் உதட்டில் அகல்யாவின் உதடு பட்டதும் காரம் எல்லாம் குளிர்ச்சியாக மாறியது. அந்த குளிர்ச்சி உடல் முழுவதும் பரவி காம சூட்டை கிளப்பியது.
என் உதட்டை பிரித்து அவளின் உதட்டை கவ்வி சுவைத்தேன். அகல்யா முதலில் மறுத்தாலும் சில வினாடிகளில் மறுப்பதை விடுத்து எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள். நேரம் செல்ல செல்ல அவளின் தலையை இரு கையால் தாங்கிப் பிடித்தபடி சற்று ஆவேசத்துடன் அவளின் உதட்டை கவ்வி சப்பி சுவைத்து அமிர்தமான அவளின் உமிழ்நீரை சொட்டு விடாமல் சுவைத்து பருகினேன்.
அகல்யாவிற்கு நான் திருப்பிக் கொடுத்த முத்தத்தில் மூச்சு முட்ட என் நெஞ்சில் கை வைத்து விலக்கி விட்டு இதயத்துடிப்பு சீராகும் வரை தன்னை ஆசுவாசபடுத்தினாள்..
“அய்யோ பாவமே காரமா இருக்கு கஷ்டபடுறீங்களே இரக்கப்பட்டு கொடுத்தேன். கடைசியில எனக்கு தான் கஷ்டமாகிடுச்சு” சொல்ல
“அச்சசோ என் அம்மு என்ன கஷ்டம் சொல்லு சரி பண்ணிடுறேன்.”
“அதெல்லாம் நீங்க எதுவும் பண்ண வேணாம்.. அது தானா சரி போய்டும்.
இந்தாங்க மீதி பிரியாணி சாப்பிடுங்க” என்றாள்.
இங்கும் அந்த சிஸ்டர் திரும்பி வந்து “என்ன தம்பி யோசனை சாப்பிடுங்க” என்றார்..
இன்னும் அங்கிருந்தால் அகல்யாவின் நினைவு என் மனதை ஒரு மாதிரியாக சந்தோஷத்தையும் துக்கத்தையும் மாறி மாறி கொடுத்து வதைத்துக் கொண்டிருக்கும் என்பதாலே வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு சிஸ்டரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கான்வென்ட் விட்டு வேகமாக கிளம்பி வெளியே வந்தேன்…
