அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 5

“எனக்கு செஞ்சு தர ஆளில்ல. அதுமட்டும் இல்ல இப்ப மனசு சந்தோஷமா இருக்கு. சாப்பிடவே தோணல.. அப்படியே ஹால்ல ஹாயா படுத்திட்டேன்.”

“ஏன் உங்க வீட்டுல ஆள் யாரும் இல்லையா?”

“ம்ம்.. ஆமா இந்த வீட்டுல நீ மட்டும் தா இருக்கேன்.”

“ஏன்ப்பா அப்படி உங்க அப்பா அம்மா இல்லையா? எங்க இருக்காங்க? ”

“தெரியல.. ஆனா இருக்காங்க.” மட்டும் சொன்னேன். அதன் பிறகு அவளும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை.
நானும் அதை பற்றி வேறு எதும் சொல்லாமல் டாப்பிக்கை மாற்றினேன்.

“உன் டிபில ரொம்ப அழகா இருக்க அம்மு?”

“அப்படியா. தேங்க்ஸ்.”

“உங்க டிபில உங்களோட ஃபோட்டா வைங்க. நானும் உங்கள பாத்துக்கிறேன்.”

“நா உன்ன மாதிரி அழகாக இல்ல அம்மு..”

“அட யாரு சொன்னா நீங்க அழகு இல்லைனு. அதலாம் நீங்க அழகாக தான் இருக்கீங்க.”

“நீங்க டிபில வைங்க. நா பாக்கனும்.”

“கண்டிப்பா வைக்கனுமா?” அவளிடம் கேட்க

“ஏன்பா அப்படி கேக்குறீங்க?”

“இல்ல என் மூஞ்சிய நானே பாக்கிற மாதிரி இருக்குமே அதான் கொஞ்சும் யோசிக்கிறேன்.”

“அதலாம் ஒன்னுமில்ல. நீங்க வைங்க. நா பாக்கனும். உங்களுக்கு பிடிக்கலைனா புரோப்ஃபைல் பாக்காதீங்க.” சொல்ல அகல்யாவிற்காக முதன்முறையாக டிபியில் செல்பி எடுத்து அப்படியே வைத்தேன்.

அவள் அதை பார்த்துவிட்டு என்னிடம் “கொஞ்சம் சிரிச்சபடி எடுத்தா என்னவாம்.. இப்படியா உர்னு இருக்குற மாதிரி எடுபபாங்க.” கேட்டாள்.

“எனக்கு அழகாக இருக்கவறவங்கள தான் அழகாக எடுக்க தெரியும். என்னை நானே அழகாக எடுத்ததில்ல.” என்றேன்..

“அதலாம் முடியும் எடுங்க.. கொஞ்சம் ஃபேஸ் சிரிச்ச மாதிரி எடுங்க.”

“சிரிச்ச மாதிரியா? எனக்கு சிரிப்பு வரலையே” சொல்ல

“என்னைய பிடிக்கும்ல?” அவள் கேட்க

“ம்ம் ரொம்ப பிடிக்கும்.. ஏன் கேக்குற?”

“அப்போ என்னைய உங்க மனசுல நெனச்சா சிரிப்பு தான வரும்.. அப்படியே ஒரு செல்பி எடுங்க..”

“அப்படியா சொல்ற. இது ஒர்க் அவுட் ஆகுமா?” என நான் கேட்க

“அதலாம் ஆகும்.. ஆகலனா கூட ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்.” அவள் சொல்ல

அவள் சொன்ன மாதிரியே அவளை என் மனதில் நினைக்க என் உதடுகள் என்னையும் அறியாமல் விரிந்தன. அப்படியே ஒரு செல்பி எடுத்து டீபியில் வைக்க உடனே பார்த்துவிட்டாள் போல அதை வைத்த அடுத்த நிமிடமே அவளிடமிருந்து

“இப்ப எப்படி கியூட்டா சூப்பரா இருக்கு. நீங்க சிரிச்சா உங்கள் கன்னத்துல அழகா குழி விழுக்குது.” என்றாள்..

அதற்கு “ம்ம்.. ஆமா விழும்” மட்டும் பதில் அனுப்பினேன்..

அடுத்த இரண்டு நிமிடத்தில் நான் டீபியாக வைத்திருந்த ஃபோட்டாவை டவுட்லோட் செய்து அந்த கன்னக்குழி இருக்கும் இடத்தில் ‘?’ ஸ்மைலி வைத்து அனுப்பினாள். இப்படியெல்லாம் அவள் செய்வாள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இது ஆச்சரியமாக தான் இருந்தது..

“ஹேய் அம்மு என்ன இப்படி சொல்லாம ஷாக் அன்ட் சர்பைஸ் எல்லாம் தர்ற”

“ஆமா அந்த ஃபோட்டா பாத்ததும் தோணுச்சு.. அதான் இப்படி.”

“ம்ம்.. டு டே எனக்கு ரொம்ப லக்கிடே போல நா நினைக்காது எல்லாம் தானா அதுவா நடக்குது.”

“ம்ம்.. அப்படியா சரி.. ஏதாவது சாப்பிட்டு தூங்குங்க குட் நைட்” என்றாள்..

“என்ன அம்மு அதுக்குள்ள குட் நைட் சொல்லிட்ட” கேட்க

“ஹலோ சார் மணிய பாருங்க.” என்றதும் மணி இரவு 10.30 ஆகியிருந்தது.

“நாம ஓன் ஹவரா பேசியிருக்கோம்.. டு டே போதும்.. நாளைக்கு ஃபிரிடைம்ல மெசேஜ் பண்றேன்.. இப்போ டின்னர் சாப்பிட்டு தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் டிரிம்ஸ்” என அனுப்பிவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டாள்.

அவள் சென்றாலும் அவள் ஏற்படுத்தி விட்டு சென்ற சுக நினைவுகள் இன்னும் மனதை நீங்காமல் தான் இருந்தது. அதையே மீண்டும் மீண்டும் அசை போட்டபடி படுத்திருந்தேன். அந்த நினைவிலே மிதந்து கொண்டிருந்த நான் சாப்பிடாமல் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. காலையில் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு தான் முழிப்பு வர வாட்ஸ்அப்பில் அகல்யா ஒரு அழகான ரோஜா பூ படத்துடன் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியிருந்தாள். எனக்கு இருந்த தூக்கத்தில் வெறும் குட் மார்னிங் மட்டும் அனுப்பிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.

அன்றையில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகல்யா வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தாள். எனக்கும் பெரிய அளவில் வேலை இல்லாததால் அகல்யாவுடன் சாட் செய்ய முடிந்தது. அகல்யா அவள் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை பற்றி பேசினாள்.. பின் அவளுக்கு பிடித்த விசயங்கள் என அவளுக்கு தோன்றியதை எல்லாம் பேசினாள். இதனால் அந்த ஒரு வாரத்தில் பேசியதில் இருந்து இருவருக்குமிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு இருந்தது.

ஒரு நாளையில் காலையில் அகல்யா குட்மார்னிங் வித் ஓன் குட் நியூஸ் என அனுப்பியிருந்தாள். அவள் எப்போதும் போல காலையில் அனுப்பிவிட்டாள். ஆனால் நான் கொஞ்சம் தலைவலி, காய்ச்சலாக இருந்ததால் அதை நேரம் கழித்து பார்த்திருக்கிறேன்.. அந்த மெசேஜ் பார்த்த உடனே அவளுக்கு ரியலி என மட்டும் அனுப்பிவிட்டு படுக்கையிலே படுத்திருந்தேன். சில நிமிடங்கள் கழித்து அகல்யா கால் செய்தாள். நான் சோர்வுடனே ஹலோ என சொல்ல அவள் மறுமுனையில் இருந்து

“என்னப்பா ஆச்சு.. உங்க வாய்ஸ் ஒரு மாதிரி டல்லா இருக்கு?”

“கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான். வேற ஒன்னுமில்ல.”

“ஏன் என்ன ஆச்சு?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *