அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 4

இதோ எல்லோரும் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அதை முடிப்பதற்குள் நான் இதை சொல்லி முடிக்க வேண்டும்.. ஆனால் எப்படி அவரை பார்த்து யாருக்கும் தெரியாமல் பேசி புரிய வைப்பது என ஒரு குழப்பமும் இருந்தது.. இருந்தாலும் அதனுடன் ஒரு சிறு நம்பிக்கையும் கூடவே இருந்தது. அந்த நம்பிக்கை காப்பாற்றும் என நம்பினேன். எப்படியோ அவரின் பக்கத்தில் வந்து நின்றுவிட்டேன். என் தலையில் இருந்த மல்லிகை பூவின் மணம் அவரை என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. நானும் அவரை பார்த்து கை காட்டி புன்னகைத்து ஹாய் என யாருக்கும் தெரியாமல் மெதுவாக வாயை மட்டும் அசைத்து சொன்னேன்.. ஆனால் அவரிடம் இருந்து புன்னகையோ பதிலோ வரவில்லை.. அதிலிருந்து இன்னும் அவரின் மனநிலை மாறவில்லை என்பது புரிந்தது.

அவர் என்னை பார்க்கும் போதெல்லாம் அவரது டிரஸ், ஹேர்ஸ்டைல் என இப்படி ஏதாவது பற்றி சைகையில் அல்லது வாயை மட்டும் அசைத்து சொல்லிக் கொண்டேயிருந்தேன்.. நான் இப்படி தொடர்ந்து பேசியதற்கு பலனும் கிடைத்தது. அவரின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. இது தான் தக்க சமயம் என முடிவு செய்து என்னை சுட்டிக்காட்டி (ஐ) பின் இரு விரலை சேர்த்து விரித்தபடி (லவ்) அவரை பார்த்து அந்த ஒற்றை விரலை நீட்டினேன் (யூ). இதற்கு பதிலாக அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் கண் விரிய விழித்துக் கொண்டிருந்தார். என் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய பார்வையில் இருந்து…

இருவரின் காதல் சொல்லும் படலத்தை இப்போதும் நினைத்து பார்க்க அதே சந்தோஷத்தை தந்தது.. அன்று அகல்யா என் காதலை ஏற்றுக் கொண்டு அவளும் தன்னை காதலிப்பதாக சொன்ன நிமிடத்தில் இருந்து நான் இந்த உலகத்தில் இல்லை.. பின் அவள் வந்து என் முன்னால் தன் அழகிய கை விரல்களை சேர்த்து சுடக்கை போட்டு “ஹலோ சார் என்ன டீரிமா? பகல்ல கனவு கண்டா பலிக்காது சொல்வாங்க” சொல்லி இந்த உலகத்திற்கு கொண்டு வந்தாள்.

இந்த கனவு சந்தோஷ கனவு. அதனால பலிக்கும். சொல்லி அவளின் இடுப்பில் கை வைத்து என்னை நோக்கி இழுக்க அவளும் எனக்கு எதிரில் வந்து நின்றாள்.

“அப்ப என்னமோ சொன்னியே. அத திரும்ப இப்ப சத்தமா சொல்லு” என்றேன்.

“ஏன் அப்ப சொன்னது புரியலையா? இல்ல கேக்கலையா?”

“ரெண்டும் தான்.. அதனால திரும்பி சொல்ல சொல்றேன்.”

“அப்படியா ஓகே.” சொல்லிவிட்டு மீண்டும் அதே போல் சைகையிலே சொன்னாள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் அப்போது சொல்லும போது முகத்தில் வெட்கமில்லை. இப்போது அது இருந்தது.

“ஹலோ என்ன இப்பவும் அதே மாதிரி சொல்ற.. பின்ன ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி சொல்ல முடியும்.”

“சரி சரி.. என்ன திடீர்னு இவ்வளவு பெரிய மனமாற்றம்.”

“ஆமா என்னமோ எனக்கே தெரியல.
வந்துடுச்சு.”

“அந்த மாற்றம் உண்மை தான?” கேட்டேன்

“ம்ம்.. ஆமா..”

“நிஜமாவா?”

“ம்ம்” வெட்கபட்டு தலையை குனிந்தபடி ஆட்ட

“அப்ப உனக்கு ஓகே வா?” கேட்க அதற்கும் அதே வெட்கத்துடன் தலையாட்ட அவளே எதிர்பாக்காத தருணத்தில் அவளின் உதட்டுடன் உதட்டை பொறுத்தி அகல்யாவிற்கு என்னுடைய முதல் காதல் முத்தத்தை பரிசாக குடுத்தேன். அவளாக உதட்டை விலக்கி கொள்ளும் வரை என் உதடு அந்த அழகிய உதட்டின் மேல் தான் இருந்தது. இந்த முத்தம் இருவருக்குமே ஒருவித திருப்தியை தந்ததோடு மட்டுமல்லாமல் உடலினில் சிலிர்ப்பையும் ஏற்படுத்திவிட்டது.

அவள் ஆசுவாசமான பின்,
“நீங்க பெரிய ஆள் தான். ஆள் அசந்த நேரத்தில பிடிச்சு இப்படியா பண்ணுவீங்க..” என்றாள் செல்ல கோபத்துடன்

“அது என்னமோ தெரியல அம்மு.. நீ ஓகே சொன்னதும் ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன்.” என்றேன். (அகல்யாவை அம்மு கூப்பிட்டது இதான் முதல்முறை)

“இப்ப ஓகே. இனி நா சொல்லாம என்னைய எதுவும் பண்ண கூடாது.. சரியா?”

“சரிங்க மேடம்.. உங்கள கேட்காம எதுவும் பண்ணமாட்டேன்.”

“ம்ம்.. குட் பாய்.” என்றாள்.

“சரி வாங்க சாப்பிட போகலாம்.” கூப்பிட

“மேடம் உங்க கூடவே வரலமா?” பாவமாக முகத்தை வைத்து கேட்க அவள் சிரித்துவிட்டாள்.

தலையை ஆட்டியபடி “ம்ம்.. அதலாம் வரலாம்ப்பா வாங்க.. ரொம்ப பண்ணாதீங்க” சொல்லி அவளே என் கை விரல்களுக்குள் விரல் கோர்த்து நடந்து வந்தாள்..

அந்த பெரிய ஹாலில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதனால் நான் ஒரு ஓரமாக நின்றுவிட்டேன். அகல்யா அங்கு உட்காந்திருப்பவர்களுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள். அவள் அந்த சிகப்பு நிற பூ போட்ட புடவையில் அழகாக தேவதை போல் இருந்தாள். அவளின் அழகையும் சாப்பாடு பரிமாறும் அழகையும் ஒரு சேர பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்..

ஒவ்வொருக்கும் குனிந்து பரிமாறும் போது அவளின் அழகிய இடுப்பு தெரிந்தது. அதில் வியர்வை துளிகள் வழிந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வியர்வை துளியாக நான் இருக்க கூடாதா நினைத்து ஏக்கத்தில் பெருமூச்சு விட்டேன். நான் அவளின் இடுப்பை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டாள். என்னை முறைத்தபடி ‘கொன்றுவேன்’ என சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்து ஒற்றை விரலை காட்டியபடி செல்லமாக எச்சரிக்கை விடுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *