அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 4

அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாலும் என் நினைவுகள் இன்னும் அவளை சுற்றிக் கொண்டே இருந்தது.
என் மனம் இன்னும் அவள் அந்த இடத்தில் இருப்பது போல் தான் உணர்ந்துக் கொண்டே இருந்தது. அந்த உணர்விலிருந்து மீண்டு வரவே அதிக நேரம் ஆனது. அவள் கையில் குடுத்திருந்த சென்ற டம்ளரில் இருந்த காபி காலியாகி இருந்தது. அந்த டம்ளரை யாரிடம் குடுப்பது என தெரியவில்லை. அதனாலே அந்த டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு இந்த டம்ளரை குடுக்கும் சாக்கிலாவது அவளை பார்த்து ஓரிரு வார்த்தை பேசிடமாட்டோமா என என் மனம் ஏங்கியது.

அதனாலே நான் காபி குடித்த டம்ளரை எடுத்துக் கொண்டு அவளை காண அந்த ஹோம் முழுவதும் சுற்றி வந்தேன். ஆனால் அவள் மட்டும் என் கண்ணில் படவில்லை. மற்றவர்கள் கண்ணில் நான் படும் போதெல்லாம் என் கையில் இருந்த காபி டம்ளரை மறைக்க நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும். அந்த டம்ளரை கையில் மறைத்தபடி அவள் எங்கு இருக்கிறாள் என தேடுவது சற்று சிரமமாக இருந்தது. இறுதியில் ஒரு வழியாக அந்த ஹோம் முழுவதும் சுற்றி திரிந்து அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அவள் அந்த ஹோமின் சிஸ்டர் ரூமில் உட்கார்த்து சிஸ்டருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

“என்னடா இது நமக்கு வந்த சோதனை” என மனதில் தோன்றியது. அவர்கள் “எப்போ பேசி முடிக்க நா எப்போ பாத்து பேச” என ஒன்றும் புரியாத மனநிலையில் அந்த இடத்தில் இருக்கவும் மனமில்லாமல் நகர்ந்து செல்லவும் மனமில்லாமல் குழப்பத்திலே யோசித்தபடி இரண்டடி எடுத்து வைத்து நடக்க பின் அந்த ரூமை திரும்பி பார்க்க என இப்படியே தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் அந்த ஹோமில் இருப்பவர்கள் யாரும் என்னை பார்க்கிறார்களா என சுற்றியிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். ஒரு வழியாக அவர்களின் பேச்சு முடிந்து வெளியே வர நான் அங்கிருந்த மரத்தின் பின்னால் போய் ஒழிந்துக் கொண்டேன்.

அகல்யாவும் அந்த சிஸ்டரின் பின்னாலே சென்றுக் கொண்டிருந்தாள். இப்போது எப்படி அவளை சந்தித்தது பேசுவது என என் மனம் தவியாய் தவித்து ஏங்கியது. அதற்காக அவர்களின் பின்னாலில் சென்று இங்கிருப்பவர் யாராவது பார்த்துவிட்டால் மானத்துடன் மரியாதையும் சேர்த்து போய்விடும். என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது அந்த சிஸ்டரிடம் ஏதோ சொல்ல அவர் மட்டும் நடந்து சென்றார்.. அப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த சிஸ்டர் அவளின் கண்ணில் இருந்து மறைந்ததும் அவள் சென்ற பாதையிலே திரும்பி வந்தாள். அதாவது நானிருக்கும் நோக்கி வர நானும் அந்த மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தேன்.

இருவருமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்த போது,

“ஹலோ சார் உங்களுக்கு என்ன வேணும்?”

“எதுவும் வேண்டாம்” என்றேன். ஆனால் மனமோ நீ தான் வேண்டும் என்றது.

“பின்ன ஏன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?”

“உனக்கா.. இல்ல.. சிஸ்டர்.. காக.. இல்ல இல்ல அது.. வந்து..” என வார்த்தைகள் முழுமையாக வெளியே வராமல் திக்கி திணறி தான் வந்தது.

“இங்க பாருங்க சார்.. நா கூட மதர் பாக்க தான் வெயிட் பண்றீங்க நெனச்சேன். ஆனா மதர் வெளியில வந்தப்ப நீங்க மரத்துக்கு பின்னாடி போய் ஓளிஞ்சிங்க..
அப்ப தான் நீங்க மதர பாக்க தா அவ்வளவு நேரமா நிக்கல புருஞ்சுகிட்டேன்.. அதான் மதர் போக சொல்லிட்டு நா மட்டும் வந்தேன். நா நெனச்ச மாதிரியும் நீங்களும் மரத்துக்கு பின்னால இருந்து வந்தீங்க.” அவள் சொல்லி முடிக்க

“ஆமா உண்மை தான். குடுத்திட்டு சொல்லிட்டு போலாம் தா வந்தேன்.”

“எத குடுத்திட்டு என்ன சொல்லிட்டு புரியாமலே பேசிட்டு இருக்கீங்க?” அவள் சீரியஸ் தோணியில் கேட்க

நான் எனக்கு பின்னால் கையில் வைத்திருந்த டம்ளரை அவளை நோக்கி நீட்டி

“இத தான் யார்ட்ட குடுக்க தெரியல. அதான் உன்கிட்ட குடுத்திட்டு தாங்க்ஸ் சொல்லிட்டு போலாம் வந்தேன்” சொல்ல அதுவரை முகத்தை சீரியஸாக வைத்த்திருந்தவள் சட்டென்று மாறி குப்பீரென்று சிரித்துவிட்டாள்..

இந்த டம்ளர குடுக்குறத்துக்கா வெயிட் பண்ணிட்டே இருந்தீங்க.? அவள் கேட்டதும் உடனே இல்லை என்று தான் சொல்ல தான் தோன்றியது. ஆனால் சிறிது நேரத்திற்கு முன் அவளின் முகம் இருந்தததை பார்த்துவிட்டு என் கையில் வைத்திருந்த சிகப்பு நிற ரோஜாவை குடுக்காமல் வெறும் டம்ளரை மட்டும் குடுத்தேன். இப்போது காதலை சொல்லி அவளிடம் இருந்து எந்த விதமான கசப்பை பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை..

மீண்டும் அவள் தான் “ஹலோ சார் டம்ளர இப்ப குடுக்குற ஐடியா இருக்கா?” என தன் தலையை சாய்த்து என் முகத்தை பார்த்து கேட்க

“ம்ம்.. இந்தா ங்க” அவளிடம் டம்பளரை குடுத்தேன்.

“வேற எதுவும் இல்லைல.” கேட்க

“வேற என்ன என் மனசுல உன் மேல காதல் தான் இருக்கு. அத இப்ப சொன்னா நீ ஏத்துக்குவியா தெரியலயே. ஒருவேளை என்னையும் என் காதலையும் வேண்டாம்” என சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதை எல்லாம் வெளிப்படுத்தாமல்

“வேற என்ன காபி சூப்பர். அதுக்கு தாங்க்ஸ் மட்டும் சொல்லனும். அவ்வளவு தான்”

“இட்ஸ் ஓகே.. இருக்கட்டும் பரவாயில்ல.. அப்ப நா போலாம்ல.. மதர் தேடுவாங்க.” சொல்ல

என் மனம் அவள் இன்னும் சிறிது நேரம் நின்று பேசினால் நன்றாக இருக்கும் என்றது. ஆனால் அதை சொல்ல அப்போது எனக்கு தைரியமில்லை. அதனாலே அவளிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *