அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 3

அந்த ஹோமில் சென்று என்ன செய்து கொடுக்க வேண்டும் என கேட்க போகும் போது அகல்யாவை பார்க்கவில்லை. அந்த ஹோமிற்க்கு தலைவர் போல் இருக்கும் இப்போது என்னுடன் பேசிய அந்த பெண்மணியை தான் அன்று பார்த்தேன். அவள் தான் புதிய கட்டபட வேண்டிய கட்டடம் பற்றி சொன்னாள். அவர்கள் சொன்னதற்கும் கேட்ட சந்தேகத்திற்கு பதில் சொல்லிவிட்டு இரண்டொரு நாளில் பிளான் தயார் செய்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். நான் சொன்னது போல் மூன்று நாட்களில் அவர்கள் சொன்னபடி பிளான் தயார் செய்து எடுத்துக் கொண்டு அந்த பெண்மணி பார்க்க போனேன்.

ஆனால் அன்று நான் சென்ற நேரத்திற்கு அந்த பெண்மணி அங்கு இல்லை. அங்கே வந்த பெண்மணியிடம் “எங்க உங்க மேடம்” என கேட்டதற்கு

“ஸ்கூல்க்கு ரவுன்ஸ் போய் இருப்பாங்க. இருங்க வர சொல்றேன்” சொல்லிவிட்டு அந்த பெண்மணி செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ரூம் விட்டு வெளியில் வந்து சுற்றியிருந்த செடி கொடிகளை பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்த ஒரு தொட்டியில் மஞ்சள் நிற ரோஜா ஒன்று பூத்திருந்தது. அதை பார்க்கும் போதே மிகவும் அழகாக இருந்தது. அதனாலே பக்கத்தில் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ரோஜாவின் இதழில் கை வைத்து தடவி பார்த்துக் கொண்டிருக்கம் போது பின்னால் இருந்து

“ஹலோ மிஸ்டர் அந்த பூ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” ஒரு அழகான பெண்குரல் கேட்க சட்டென திரும்பி பார்க்கும் போது அந்த பூவினுடைய இதழ் என் கையில் இருந்தது. என் கையில் இருந்த ரோஜா இதழை பார்த்ததும் கோவத்தில் எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அந்த ஹோமினுடைய இன்சார்ஜ் பெண்மணி வர இவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். இவள் தான் என்னையும் என் வாழ்க்கையையும் மாற்ற போகிறாள் என அப்போது எனக்கு தெரியாது. ஏன் அவள் பெயர் கூட தெரியாது. பின்பு தான் அவளின் பெயர் அகல்யா என தெரிந்துக் கொண்டேன்.

அகல்யாவை முதன்முறை பார்த்த போதே அவளின் அழகில் மயங்கிவிட்டேன்.. அவ்வளவு அழகு. அழகு என்றால் நேர்த்தியான இயற்கையின் அழகில் எந்த வித கலப்படம் இல்லாமல் தூய்மையான அழகுடன் இருந்தாள்.. அந்த ஏரியாவிற்குள் பலமுறை வேலைக்காக சென்றிருந்தாலும் ஒரு முறை கூட இவள் என் கண்ணில் பட்டதில்லை. அதற்காக சிறு வருத்தமும் என் மீது கூட இருந்தது.

ஒரு நல்ல நாளில் அந்த கட்டடத்தை பூஜையுடன் ஆரம்பிக்க அதோடு சேர்த்து என் வாழ்க்கைக்காக மாற்றமும் ஆரம்பித்தது. ஆம். இந்த அகல்யா என்ற பெண் பேசிய அந்த ஒற்றை வார்த்தையில் இருந்து ஏனோ என் மனம் அவளையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது. முதன்முதலாக ஒரு பெண்ணை நினைத்து பார்க்க தொடங்கியிருக்கிறேன். அதற்கு காரணம் அவள் தான்.. என்ன மாயம் மந்திரம் செய்தால் தெரியவில்லை. என் மனம் அவளேயே சுற்றி சுற்றி வருகிறது. அவள் பூஜைக்காக எல்லா வேலைகளையும் பறந்து பறந்து செய்துக் கொண்டிருக்க என் மனமோ அவளுடன் பறந்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் பார்த்து அவள் என்னிடம் வந்து

“ஹலோ சார் உங்கள சிஸ்டர் சாமி கும்பிட கூப்பிட்டு வர சொன்னாங்க” என்றாள். இந்த முறை அவளின் பேச்சில் முன்பு பேசிய அதிகார தோரணை இல்லாமல் ஒரு கணிவு, பணிவு எல்லாம் இருந்தது. அவளின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஒரு வேளை என்னை பற்றி சொல்லியிருக்கலாம் என தோன்றியது. இதையெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க அவள் மீண்டும்

“ஹலோ சார். என்ன பகல்லே கனவா?” கேட்க நான் சுயநினைவுக்கு வந்து

“ம்ம்.. இல்ல.. ம்கூகும்” சொல்ல அவள் தன் வாயில் வைத்து சிரிப்பை அடக்கியபடி சரி வாங்க சாமி கும்பிட சொல்லிவிட்டு என்னை விட்டு நகர்ந்து செல்ல நானும் அவளை பின்தொடர்ந்து நகர்ந்து சென்றேன். பூஜை நடைபெறும் போது கூட அதை பார்க்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அவள் மயில் கழுத்து நிறத்தில் ஒரு காட்டன் சுடிதார் உடுத்தியிருந்தாள். அது அவளின் உடலமைப்புக்கு கச்சிதமாக இருந்தது. கழுத்தில் ஒரு செயின் இரு கையிலும் இரண்டு கண்ணாடி வளையல்கள் போட்டியிருந்தாள். தன்னை அழகாக்கி கொள்ள எந்தவித முயற்சியும் செய்யாமலே அவ்வளவு அழகாக இருந்தாள்.

பூஜைகள் எல்லாம் முடிந்த பின் ஆட்கள் ஒவ்வொருவருக்கும் குழிகள் தோண்ட இடத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு அவர்கள் வேலை செய்வதை ஒரு ஓரமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அகல்யாவும் இந்த ஹோமில் தான் வேலை பார்க்கிறாள். அவ்வப்போது என்னை கடந்து சென்றுக் கொண்டிருந்தாள். மணி 11.30 ஆனதும் அகல்யா வேலை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு தட்டில் டம்ளர் வைத்து காபியோ டீயோ கொண்டு வந்து குடுத்துக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் குடுத்து விட்டு கடைசியாக என்னை நோக்கி வரும் போது வழியில் இருந்த கல் தடுக்கி விழ அவளின் கையில் இருந்த தட்டில் இருந்த டம்பளரில் இருந்த காபி எல்லாம் என் சட்டையில் சூட்டுடன் விழு நானும் சட்டையை உதறிவிட்டபடி எழுந்தேன்.

அதற்குள் அகல்யாவும் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து என் சட்டையில் விழுந்ததை பார்த்து உடனே என்னை நோக்கி வந்து சட்டையில் விழுந்ததை தன் பட்டு கையால் என் நெஞ்சில் தடவி குடுக்க எனக்கோ அவளின் கை என் பரிசத்தின் மேல் பட்டதும் பறப்பது போல் இருந்தது. ஆனால் அவளோ ஒருவித பதற்றத்துடன்

“சாரி சார் தெரியாம உங்க மேல காபி கொட்டிடுச்சு. வர்ற வழியில கல் இருந்தத கவனிக்காம வந்திட்டேன். அதான் கல் தடுக்கி நா விழ காபி உங்க மேல கொட்டிட்டுச்சு” சொல்ல நானோ அவளின் கை என் உடம்பில் பட்டதை நினைத்து பறந்துக் கொண்டிருப்பதால் அவள் சொன்னதற்கெல்லாம் தலை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன். அவள் என் பக்கத்தில் இருந்த அந்த சில வினாடிகள் அவளிடமிருந்து ஒரு சுகந்தமான நறுமணம் வந்தது. அதோடு அவள் தவையில் வைத்திருந்த முல்லை பூவும் சேர்ந்து என் நாசிக்குள் சென்று என் உடலை குறுகுறுக்க செய்தது.

அகல்யா என்னை விட்டு பிரிந்து செல்லும் வரை அந்த நறுமணம் நாசிக்குள் இருந்தது. மீண்டும் காபியை டம்பளரில் ஊற்றிக் கொண்டு வந்து என்னிடம் நீட்ட,

“ம்ம்.. பரவாயில்ல இந்த டைம் கரைக்டா கையில காபிய குடுத்திட்ட போல” சொல்ல

“ஆமா பின்ன குடுக்குற தடவ எல்லாம் மேல சிந்திட்டேவா குடுக்க முடியும்?”

“அப்படிக் குடுத்தா தான் நல்லதே” சொல்ல

அகல்யா உடனே “என்னது?” தன் கண்களை அகல விரித்து முழித்தபடி கேட்டாள்..

அகல்யா என்னிடம் தன் கண்களை அகல விரித்து புருவத்தை உயர்த்தியபடி “என்ன சொன்னீங்க?” அவள் கேட்க அவள் கேட்டது கூட காதில் விழவில்லை. நான் அவளையும் அவளின் சற்றே காலமான பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுக்கு பதில் சொல்லாததால் என் தோளை உலுக்கி மீண்டும்

“என்ன சார் பகல் கனவா?” கேட்க

“இது கனவா? கனவில்லையா? தெரியல. ஆனா கனவு மாதிரி தான் இருக்குனு” அவள் கேட்டதற்கு ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவளே மீண்டும்

“என்ன சார் யாரையும் லவ் பண்றீங்களா?” என திடீரென அவளாகவே கேட்டாள்.

அவளின் கண்களை பார்த்தபடியே “இதுவரைக்கும் அந்த ஐடியா இல்ல. ஆனா இனி பண்ணலாம் இருக்கேன்” சொல்ல

“என்ன பண்ணலாம் இருக்கீங்க?”

“லவ் தான்.”

“ஓ.. ஐ.. சி.. யார.?”

“உங்கள மாதிரி அழகான பொண்ண தான்.” சொல்ல

அவள் உடனே “என்ன சார் தீடிர்னு என் ரூட்ல கிராஸ் பண்ற மாதிரி தெரியுது?” சொல்ல

“அட அப்படியெல்லாம் இல்ல.. சும்மா ஒரு ரிபரன்ஸ்க்கு சொன்னேன்” அவ்வளவு தான். என்றேன்

“அதான பாத்தேன்.” அடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிஸ்டர் கூப்பிட்டார் ஒரு பெண்மணி வந்து சொல்ல

“சரி சார் காபி குடிச்சிட்டு உங்க வேலைய பாருங்க சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல தயாரனாள். அந்த சமயம் பார்த்து

“ஹலோ மேடம் காபி டம்பளரல அதிகமா இருக்கு என்ன பண்ண?” கூப்பிடு கேட்க

“பரவாயில்ல ஒரு நாள்ல தான குடிங்க.” சொல்லிட்டு என் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *