அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 1

ஆற்றில் சித்திரை திருவிழாவுக்காக மற்றும் பாசத்திற்க்காக திறந்து விட்ட நீர் சலசலவென்று ஓடி கொண்டிருந்தது. அந்த நீர் எந்த மாசு இல்லாமல் எவ்வளவு தூய்மையாக போய் கொண்டிருந்தது. ஆனால் என் மனசு அப்படி தூய்மையாக இல்லை. அது மட்டுமில்லாமல் எந்த திசையில் காற்று அடித்தாலும் அந்த திசைக்கு ஏற்ப அசைந்து வளைந்து கெடுக்கும் நாணல் புல், அங்கு துணியை துவைத்து உலர வைக்கும் பெண்கள், அங்கிருந்த புல்லை உண்டு பசியை அமர்த்தும் ஆடு,மாடுகள், அந்த ஆற்றை கடந்து அடுத்த ஊரில் வேலை பார்க்க செல்லும் வேலையாட்கள், ஆற்றில் நீந்தி விளையாடும் சிறுவர்கள்.. சரக்கு அடிக்கும் நம் குடிமகன்கள்.. அவர்கள் பேசும் அவர்களுக்கான ஒரு பாஷை.. பார்க்க ரசிக்க இவ்வளவு இருந்தும் என் மனம் எதிலும் செல்லவில்லை..

நான், என் வாழ்வில் நடந்த சோகமான அந்த நிகழ்வை மறக்க இப்படி தான் ஒவ்வொரு வருடமும் எனக்குள்ளாகவே போராடி கொண்டிருக்கிறேன். ஆனாலும் என்னால் அதில் வெற்றி காண முடியவில்லை. என் வாழ்வில் அந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் நரக வாழ்வாக தான் இருந்தது. சென்ற வருடம் இதே நாள் சென்னையில் இருந்தேன். அங்கே இருந்ததால் அது எனக்கு மிகவும் நரகமாகவே இருந்தது. அந்த நிகழ்வை மறக்க நினைத்து நான் என்னையே மறந்து சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடித்து எங்கையோ ஒரு ரோட்டுல விழுந்து கிடந்தேன். அதன் பிறகு என்னுடன் வேலை செய்பவர்கள் தான் என்னை வீட்டில் சேர்த்தனர்.

என்னை வீட்டில் சேர்த்த பிறகு நான் சுயநினைவு வந்த போது எல்லாரும் அவர் அவர் பாணியில் அட்வைஸ்ஸாக பண்ணினார்கள். இருந்தாலும் என் காதில் ஒரு வார்த்தை கூட போகவில்லை. என் மனதில் இருந்த அந்த ஆறாத ரண வடு இன்னும் இருக்கதான் செய்கின்றது.. அதை நானே கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நினைத்தாலும் இந்த சமுதாயம் நமக்கு திரும்ப திரும்ப ஏதோ ஒரு வகையில் அதை நமக்கு நினைவூட்டி கொண்டே தான் இருக்கும். அது எழுதபடாத ஒரு விதி. அதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையெனில் அதை மறக்க வேற ஏதோ ஒன்றை நினைத்து கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் என்னை மாதிரி மறக்க முடியாமல் தவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உங்கள் வாழ்வில் ஏற்படலாம்..

இதையெல்லாம் நினைத்து கொண்டே நான் ஒரு சிகரெட் பற்ற வைத்து புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போராட ஆரம்பித்தேன். வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்த போது ஆற்றின் நீரின் நுரை போல் பொங்கி வழிந்து ஓடியது. அதையும் ஒரே மூச்சில் பாதி பாட்டிலை காலி செய்து அதனுடன் இருந்த ஒயின் கலந்து குடிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த சில ஆண்கள் பெண்கள் அவரவர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அதை பார்த்து ரசிக்க மனம் இல்லாமல் மீதி இருந்த பாட்டில் இருந்த சரக்கை 10நிமிடத்தில் காலி செய்தேன். பற்ற வைத்த சிகரெட்டும் கருகி முடிந்து போய் இருந்தது. என் வாழ்க்கையும் அந்த பற்ற வைத்த சிகரெட் மாதிரி தான் நினைக்க தோன்றியது..

அடுத்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பீரை நுரை வெளியேற கூட விடாமல் குடிக்க ஆரம்பித்தேன்.. மூச்சு விடாமல் குடித்து என் மூக்கு வழியே புரை ஏற ஆரம்பித்தது. என் தலையை ஏதாவது கை தொடுகிறதா என்று தான் பார்த்தேன். இல்லை.. மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். இழந்தது எதுவும் அப்படியே கிடைத்துவிடாது. உங்கள் வாழ்வில் பாக்கியம் ஏதாவது செய்து இருந்தால் வேற ஏதாவது வழியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதே தவிர. இழந்தது, இழந்தது தான். இழந்ததை மீட்டு எடுக்க முடியாது.. நான் என் வாழ்வில் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் இழந்துவிட்டேன்..

நான் வாழ்வில் இழந்த, என் சந்தோஷத்தில் இருந்து எப்படி மீண்டு வர போகிறேன் தெரியவில்லை.. அந்த சந்தோஷத்தை மீட்டு எடுக்க முடியுமா? தெரியவில்லை.. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே இரண்டாவது பீர் பாட்டிலை காலி செய்தேன்.. எனக்கு போதே தலைக்கு ஏறி இருந்தது. அந்த நிலையிலும் அடுத்த சிகரெட் பற்ற வைத்து தட்டு தடுமாறி புகை இழுத்து விட்டு கொண்டிருந்தேன். மிச்சம் இருந்த ஒரு பாட்டிலையும் காலி செய்தேன். எந்திரித்து நடக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்தேன். ஆற்றை கடந்து அந்த பக்கத்தில் யாரோ ஒருவர் நான் மறக்க நினைக்கும் “அகல்யா” என்ற அந்த பெயரை சொல்லி யாரையோ அழைத்தனர். நானும் போதையில் அகல்யா அகல்யா புலம்ப ஆரம்பித்தேன். நீ செய்ததற்கு நிம்மதியாக புலம்ப கூடாது என்று நினைத்த வருண பகவான் மழையாக பொழிய ஆரம்பித்தார். என்னால் எந்திரித்து செல்ல முடியாத அப்படி ஒரு நிலைமை. செய்ததற்கு தண்டையாக மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். தண்டனை அளவு (மழையின்) குறைந்ததும் தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பித்தேன். நிலையில்லாமல் நடந்து எப்படியோ மேட்டில் ஏறி நடக்கும் ரோட்டுக்கு வந்தேன். மழை பெய்து கொண்டே தான் இருந்தது.. தட்டு தடுமாறி கால்கள் பின்னி பிணைந்து மெதுவாக நடந்து அந்த மழையில், அந்த ஒத்தையடி பாதையில் இடது பக்கம் தனியாக இருந்த ஒரு ஓட்டு வீட்டின் சுவரை பிடித்தும் நடக்க முடியாமல் தள்ளாடி அந்த வீட்டின் கதவை தட்டியதும் திறந்த வேகத்தில் உள்ளே போய் விழுந்தேன்…

மழைநீரில் தொப் தொப்பென நனைந்த உடம்புடன் ஏற்கெனவே உள்ளுக்குள் சென்றிருந்த ஆல்காஹலின் உதவியால் நிற்க கூட முடியாத நிலையில் என்னையும் அறியாமல் இந்த வீட்டின் கதவை தள்ளி தடுமாறி வீட்டின் முன்புறம் விழுந்து இருக்கிறேன். அதன் பின் என்ன நடந்தது என்று அந்த வீட்டில் இருந்த அந்த பெண்ணின் பார்வையிலிருந்து..

ஒரு ஆண் என் வீட்டிற்கு முன் வந்து விழுந்து கிடப்பது எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனால் அவன் முகத்தை வைத்து பார்க்கும் போது அப்படி ஒன்றும் மோசமானவாக தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் “குடிக்கிற எல்லாரும் கெட்டவனும் இல்லை.” அதே மாதிரி தன்னை உத்தமன் என்று சொல்கிற “குடிக்காத உத்தம புருஷன்கள் எவனும் உத்தமனும் இல்லை”. ஒரு சோகம் வருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவனுடைய முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. அவன் வாய் ஏதோ ஒரு பெயரை மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருந்தது.

அவனை அப்படியே மழையில் நனைய விட என் மனம் ஒப்பவில்லை. அவன் தன்னையே மறக்கும் அளவிற்கு குடிச்சிருக்கிறான் என்பது அவன் வீட்டின் முன் விழுந்து கிடப்பதிலிருந்தே தெரிகிறது. ஆனால் எதற்காக இப்படி குடித்திருக்கிறான் என்பது அவன் வாயால் சொன்னால் தவிர மற்றபடி தெரிய வாய்ப்பே இல்லை. இதையெல்லாம் யோசித்து கொண்டே அவனை இன்னும் பெய்து கொண்டிருக்கிற மழையில் நனைய விட்டு கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து சில வினாடிகளிலே நிஜ உலகத்திற்கு வந்து அவனின் இரு கால்களை பிடித்து இழுத்து பார்த்தாள். அவளால் முடியவில்லை.

பின் இரண்டு கால்களையும் இரு கைகளால் பிடித்து சிறு சிறு அசைவாக அவனை உள்ளே இழுத்தாள். அவனை பிடித்து இழுக்கும் போது வாயில் எதை எதையோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான். அப்படி ஒரு தடவை இழுக்கும் போது அவன் காலால் என்னை உதைத்து தள்ளினான். என்னை எட்டி உதைத்து தள்ளி விட பிறகும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. அது ஏன் என்று என் மூளைக்கோ அல்லது மனதுக்கோ தெரியவில்லை. அவன் கால்களை விடாமல் பிடித்து இழுத்து கொண்டு வந்து ஹாலில் (ஒரே ஒரு அறை தான்) இருந்த கட்டில் முன் போட்டேன்.

அவனின் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்றே தோன்றியது. ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது?என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் தோன்றியது. இப்போது அவன் கட்டிலின் முன் மழை நீரில் நனைந்த உடம்புடன் காலை லேசாக விரித்து நேராக படுத்து இருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த கட்டிலின் உட்காந்து அவனையே உற்று பார்த்தேன். இதுவரை எந்த ஒரு ஆணையும் நான் இப்படி ரசித்து பார்த்தது இல்லை. அதற்கு காரணம் என் வாழ்க்கை மற்றும் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் தான்.

இவன் அதை எல்லாம் எந்த ஒரு பார்வையும் பார்க்காமல், பேச்சும் பேசாமல் தவிடு பொடி ஆக்கிவிட்டான். என்னை பார்க்காமல் பேசாமலே என் மனதை ஏதோ செய்துவிட்டான். என்னையும் அறியாமல் அவனின் மீது ஒரு இனம் புரியா அன்பு, ஆசை, மயக்கம், ஏன் காதல் கூட வந்துவிட்டது என்று சொல்லலாம். உனக்கு எல்லாம் காதல் செய்ய அருகதை உண்டா? என்று என் ஒரு பக்கம் மனம் என்னை கேட்டது சூடுகோலால் சுட்டது போல் இருந்தது. இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் காதல் செய்ய உரிமை உண்டு. இரு மனங்கள் இணைந்தால் தான் காதல் என்றில்லை. ஒருவனை மனதால் நினைத்து அவனுடனே மனதில் வாழ்வதும் ஒரு வகை காதல் தான் என்று மற்றொரு பக்க மனம் சூடிட்ட மனதிற்கு மருந்தாக இருந்தது.

என்ன தான் என் மனம் இருவாறாக சொன்னாலும் அவனை ஒருமனதாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பது எனக்கே புரிய ஆரம்பித்திருந்தது. என் அருகில் இருக்கும் இந்த சில மணி நேரங்களில் மட்டும் தான் இவனை பார்க்க முடியும்.. ரசிக்க முடியும். அதன் பின் வானத்தில் சில மணிதுளிகள் இருக்கும் வானவில்லை போல மறைந்து விடுவான். வானத்தில் இருக்கும் வானவில் சில மணிதுளிகளில் மறைந்துவிடும் என்பதை தெரிந்தும் அதை நாம் ரசிக்க தவறுவது இல்லை. இவன் மீது இருந்த என் ரசிப்பும் அது மாதிரி தான். என் வாழ்க்கையில் வந்த வானவில்லாக தான் தெரிந்தான் இந்த கள் அருந்திய கள்வன்.

அவனை கட்டிலில் உட்காந்து பார்த்திட்டு இருந்த நான், கட்டிலில் குப்புறபடுத்து அவனின் முகத்தை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். என் மனதை அவன் கவர காரணம் என்று நான் நினைத்தது முகத்தில் தெரிந்த பல நாட்கள் சோகம் தான். இதுவரை என் வாழ்வில் பார்த்த ஆண்களில் மிகவும் வித்தியாசமாவனாக தெரிந்தான். ஏன்னென்றால் நான் பார்த்த ஆண்கள் சில நிமிடங்கள் ஆடிவிட்டு தான் அமைதியாக ஓய்வில் இருப்பார்கள். ஆனால் இவனோ அமைதியாக ஓய்வில் இருக்கும் போதே என் மனதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான். அவனின் வாய் இன்னும் ஏதோ ஒரு பெயரை முனுமுனுத்து தான் கொண்டிருக்கிறது. அதை கூட கேட்க மனமில்லாமல் அவனின் முகத்தையே விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் மனதில் தோன்றிய ஒரு சில வரிகள்.

“மனித உடல் ஆடியடங்கும் இவ்வுலகில் – நீ
ஆடிக் கொண்டே வந்து அடைகலமானாய் – என் வீட்டினில்(மனதினில்)
அன்பாக பண்பாக பாசமாக பேசவில்லை -இருந்தும்
பக்குவமாக இருந்த என் மனதை – நீ
பரிவு கூட காட்டாமல் களவாடினாய்
கள் அருந்திய என்மன கள்வனே”.

பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய சில நிமிட சந்தோஷத்திற்காக பெண்களை எதிர்பார்பார்கள். ஆனால் இவனோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதுவும் செய்யாமல் சந்தோஷத்தை (மனதளவில்) கொடுத்துக் கொண்டிருக்கிறான். சில நிமிட சந்தோஷத்திற்க்காக ஆடிவிட்டு (உடலுறவு கொண்டு) செல்லும் சில ஆண்களுக்கு மத்தியில் இவன் ஒரு பெயரை முனுமுனுத்து கொண்டு அதற்காக மனதோடு போர்(ஆ)டி கொண்டிருக்கிறான். இப்படி பட்ட ஒரு ஆணை என் வாழ்நாளில் இப்போது தான் அதுவும் இந்த நிலையில் சந்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *