பாலு, பவியை பார்த்து, மாப்பிள்ளையிடம் என்னை பேசின
போ ன்னா, சொல்ல மாட்டேன்.
ஏ சொல்லு பவி
நோ நோ நோ. பவித்ரா மண்டையை ஆட்ட
பவி மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு அண்ணன் பாலு ஓடி விட
அம்மா, அண்ணா கொட்டுது, அண்ணனை பத்தி அம்மாவிடம் சொல்ல
எதை கொட்டினான் டி , அம்மா புரியாமல் கேட்க
ஐயோ அம்மா, மண்டைல கொட்டிட்டான்.
இதற்கா கூப்பிட்ட, அம்மா சலித்து கொண்டே போய் விட்டார்கள்.
பவி, டிரஸ் கழட்டி நைட் டிரஸ் மாட்டி வெளியே வர,
மஹேந்திரன் தன் மகளிடம், என்னைடா, மாப்பிளையை உனக்கு பிடிச்சிருக்கா
பிடிச்சிருக்கு பா, பவித்ரா வெட்கத்துடன் சிரிக்க
பின்னாடி எதுவும் சொல்ல கூடாது,
இல்ல பா, சொல்ல மாட்டேன், சொன்ன பவித்ரா ஓடி விட்டாள்.
மாப்பிளை வீட்டில்…..
அம்மா, பவி போன் நம்பர் தாங்கம்மா, சதிஷ் அம்மாவிடம் கேட்க
யாருடா பவி,
ஐயோ, உன்னுடைய வருங்கால மருமகள்.
அந்த பொண்ணு பேரு பவித்ரா இல்ல……..
சதிஷ் அக்கா செல்வி – அம்மா தம்பி பவித்ரா பேரை சுருக்கி பவினு சொல்றான்
ஏன்டா இப்பவே ஆரம்பிச்சிட்டியாடா – அம்மா முறைக்க
சதிஷ் அக்காவை முறைக்க
அம்மா – போன் நம்பர் கொடுமா, சதிஷ் மீண்டும் கெஞ்ச
அக்கா தான் வாங்கினா – அவ கிட்டே கேளு
செல்வி போன் நம்பர் கொடு சதிஷ் தன் அக்காவிடம் கேட்க
என்னது செல்வியா – அக்கானு கூப்பிடு
அக்காஆ ஆ ஆ – கொடு…………க்கா……… – சதிஷ் கெஞ்ச
செல்வி, சிரித்து கொண்டே பவித்ராவின் போன் நம்பரை கொடுத்தாள்.
வாய் எல்லாம் பல்லாக இளித்து கொண்டு பவி நம்பரை பெற்று கொண்டான் நம்ப மாப்பிள்ளை.
பவி வீட்டில்………………………..
இரவு பத்து மணிக்கு, பவிக்கு போன் வர, புது நம்பர் என்பதால் போன் எடுக்கலே
உடனே வாட்சப்பில் மெசேஜ்
ஹாய்
யாருடா இது, பவி முழிக்க
நம்பர் சேவ் செய்து, போட்டோ பார்த்தா, அட நம்ப ஆளு
ஹலோ மிஸ்டர், யாரு நீங்க – பவி மெசேஜ் தட்டி விட
“நாந்தாங்க” ,சதிஷ் மெசேஜ் வர
உங்களுக்கு பேர் இல்லையா, பவித்ரா சிரித்துக்கொண்டே சதீஷை கலாய்க்க
நான்தாங்க, சாயந்தரம் உங்களுக்கு முத்தம் கொடுத்தது. சதிஷ் அவளை மடக்க
சீ……………
என்ன சீ, இப்ப யாருனு தெரியுதா
தெரியுது தெரியுது
யாரு
கெட்ட பையன்
ஆனா நீ நல்ல பொண்ணு
இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்.
வீட்டுலே ஓகே சொல்லிட்டியா பவி
ம்……
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பவி
என்னை பிடிச்சிருக்கா பவி