சாப்டியாமா.,
சார், நான் சாப்பிட்டேன், நீங்க
இனிமேல் தாமா சாப்பிட போறேன்.
சார், வீட்டுக்கு போவீங்களா இல்ல கொண்டு வந்து இருக்கீங்களா
கொண்டு வந்துட்டேன் மா
சார், நான் பறிமாற வரவா
வேண்டாம் மா,
ஏன் சார்,
உன்னை கஷ்ட படுத்த விரும்பல, நீ வேலையை பார்.
பவி போனை வாய்த்த வுடன், நேராக அவர் ரூமுக்கு சென்று கதவைதட்டி உள்ள செல்ல,
சார், சாப்பாடு பரிமாற எனக்கு என்ன கஷ்டம் சார்,
ஹசன் சிரித்து கொண்டே, சரிம்மா போடு.
இவள் அவருக்கு பரிமாற,
ஹசன், கான்டீன் சாப்பாடு எப்படி இருக்கிறது. ஏதும் குறை இருக்க மா
பவி, சார் ஒரு குறையும் இல்லை. அருமையான சாப்பாடு.
வீக்லி கான்டீன் மெனு லிஸ்ட், இது வரைக்கும் அமீர்தான் ரெடி பண்ணுவான்.
இனிமேல் நீ அந்த பொறுப்பை எடுத்துக்கோமா.
பெண்கள் இதுலே நல்ல எக்ஸ்பர்ட் ஆ இருப்பீங்க.
சார், நானா
ஒன்னும் பயப்படாதே, ஏதாவது உதவி வேணும் நா அமீரை கேட்டுக்கோ;
சரிங்க சார்.
பவி மனதில் ஹசன் சார் இன்னும் ஒரு படி மேல உயர்ந்து நின்றார்.
வீட்டுக்கு போனால், ஹசன் சார் பற்றி செல்வியிடமோ வெங்கட்டிடமோ சொல்லாமல் இருக்க
மாட்டாள்.
அவர்களுக்கும் ஹசன் சார் மேல் நல்ல அபிப்ராயம் இருந்தது.
மறுநாள் மதியம் பவித்ரா, ரூபா, வசந்தி கேன்டீனில் மீட் பண்ண, கான்டீன் மெனு விஷயத்தை பவி
அவர்களிடம் சொல்ல, அவர்களுக்கு சந்தோசம்.
இவர்களுக்கு பிடித்த ஐட்டம் போட சொல்லி சாப்பிடலாம்.
ஆனால், மூவரில் வசந்தியின் சோகமான முகம் மற்ற இருவரை வருத்தியது.
கேட்டால், குழந்தையின்மை காரணத்தையே கூறினாள் வசந்தி.
எப்பவும் போல் இருவரும் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்பு நடந்தவை.
நாட்கள் உருண்டோடின
ஒரு மாதம் ஓடியது. பவியின் கடின உழைப்பால் ஆபிசில் அவளுக்கு நல்ல பெயர்.
ஹசன் அவளை வெகுவாக பாராட்டினார். பவி மீது அவருக்கு தனி அன்பு.
பவிக்கும் ஹசன் மேல் நல்ல மதிப்பு.
அமீர் பவித்ரா இருவரின் நட்பும் அதிகரித்தது.
முதல் மாசம் சம்பளம் என்பதால், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து கவர் ஹசன் சார்
டேபிளுக்கு வந்தது.
அவரே பவியை கூப்பிட்டு, அவளை பாராட்டி சம்பள கவரை கொடுக்க,
பவி அவர் காலில் விழுந்து பெற்று கொண்டாள்.
ஹசன் அவள் தலை மேல் கையை வைத்து அவளை ஆசீர்வதித்தார்.
பவிக்கு செம சந்தோசம்.
தன்னுடைய ரூமுக்கு வந்தவுடன் பியூனை அழைத்து அவனிடம் பணத்தை கொடுத்து ஆபிசில் உள்ள
அனைவர்க்கும் ஸ்வீட் வாங்கி கொடுக்குமாறு அவனுக்கு சொன்னாள்.
அவனும் சரிங்க மேடம் னு பணத்தை பெற்று கொண்டு போகும்போது, இண்டர்காம் அடித்தது.
அமீர், ஹலோ மேடம்,
பவி, சார், மேடம்னு கூப்பிடாதீங்க, பேர் சொல்லி கூப்பிடுங்க
அமீர், ஓகே ஓகே, ஹலோ பவி
பவி, என்னது பவியா, என் பேர் பவித்ரா,
அமீர், நான் மேடம்னே கூப்பிடுறேன்.
பவி, அடங்க மாடீங்களே, சரி எப்படியோ கூப்பிடுங்க
அமீர், பேச்சி மாற கூடாது.
பவி, ஐயோ, பவினு கூப்பிடுங்க னு சொன்னேன். எதுக்கு கூப்பிட்டீங்க
அமீர், சம்பளம் வாங்கிட்டு, எஸ்கேப்பா, ட்ரீட் இல்லையா
பவி, அப்படி எல்லாம் இல்ல சார், எல்லாருக்கும் ஸ்வீட் வாங்க சொல்லிருக்கேன்.
அமீர், ஸ்வீட் யாருக்கு வேணும்.
பவி, வேற என்ன வேணும் சார், சொல்லுங்க
அமீர், என்ன வேணும் என்றாலும் கேட்கலாமா
பவி, சார், உங்க கிட்ட பார்த்து தான் பேசணும் போல,…
அமீர், அப்ப பார்த்துட்டே பேசலாம் வாங்க, போன் கட் ஆனது.
பவி, சிரித்து கொண்டே அமீர் ரூமிற்குள் நுழைய,
அமீர், வாம்மா மகாராணி.
பவி, சார் கிண்டல் பன்னாதீங்க சார்.
அமீர், சம்பளம் வாங்கினவுடன் வந்து பார்க்கிறது இல்லையா
பவி, உங்களை பார்க்கத்தான் கிளம்பினேன், அதற்குள்ள போன் பண்ணீட்டிங்க.
அமீர், பொய் பேசுற, அவள் மண்டையில் கொட்ட
பவி, ஆ ஆ , மண்டையை தடவி கொண்டே, பொய் இல்ல, உண்மைதான்
அமீர், சம்பள கவர் எங்கே