வழிமறியவள் – End 55

EPISODE – 80 – முடிவுரை

எனது முடிவுரையை படிக்கச் ஆரம்பிக்கும் அன்பு

நண்பர்களுக்கு

இதை படிக்கும் முன்பு தயவு செய்து

சிரமம் பார்க்காமல் என்னுடைய முன்னுரை பகுதியை

படிச்சிட்டு அப்புறமா இதை தொடர்ந்து படியுங்கள்.

…………………….

…………………..

…………………..

முன்னுரை பகுதியை படிச்சதுக்கு எனது நன்றி.

கடந்த May 2025 மாதம் இந்த கதை

வழிமறியவள் ஆரம்பிக்க பட்டது.

எல்லாரும் பண்ண ஆசை பட்ட அதே தப்பைத்தான்

நானும் பண்ணினேன்.

ஆமாம்,

நாமும் ஒரு கதை எழுதலாமே என்று…………..

என் வாழ்க்கையில் பல மணி நேரங்களை நான் இழந்துள்ளேன்.

எந்த பிரதி பலன் எதிர்பார்க்காமல்,

உண்மையை சொல்ல வேண்டும் என்றால்,

நண்பர்களுக்காக………………

முன்னுரையில் சொன்னது போல

எப்படியோ கதையை பாதியில் நிப்பாட்டாமல்

முடித்து விட்டேன்.

இந்த முடிவு திடீர் முடிவு கிடையாது.

இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று

ஏற்கனவே தீர்மானம் செய்த கதையும் கரு இதுதான்.

சதிஷ் பவித்ரா திருமணத்தில் ஆரம்பித்த இந்த கதை

பல வழி சென்று,

அவர்கள் திருமணத்திலேயே முடிந்துள்ளது.

இது நாள் வரைக்கும் இந்த கதையை படித்து

ஆதரவு கொடுத்து

விமர்சனம் எழுதி

உற்சாகம் ஊட்டி,

என்னை மகிழ வைத்த

என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும்

என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த கதையை பற்றி,

முழுக்க முழுக்க கற்பனை கதை.

கடந்த பத்து மாதமாக பவித்ரா குடும்பத்தில்

ஒரு அங்கத்தினராக நாம் அனைவரும் இருந்து

வாழ்ந்தது……………

உங்களுக்கு எப்படியோ தெரியல,…..

ஒரு ஆசிரியராக நான் அவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்தேன்.

என்னை பொறுத்தவரைக்கும்

சதிஷ் பவித்ரா, எங்கேயோ அபி குட்டியுடன் நிம்மதியாக

வாழ்ந்து கொண்டு இருப்பதாக தான் நான் எண்ணுகிறேன்.

என் மனதை பாதித்த கதா பாத்திரம்

செல்வி – வெங்கட்.

அவர்கள் இருவரையும் பார்க்க என் மனம் ஆசை படுகிறது.

அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

4 Comments

  1. இந்த கதையோடு நானும் வாழ்ந்திருக்கிறேன்.
    I love this story

  2. அருமை

  3. Gud happy ending story bro

  4. Very beautiful story
    I feel and like yours script

Comments are closed.