வழிமறியவள் – Part 58 39

சாய்ந்த வுடன் அழ ஆரம்பிச்சான்.

இருவரும் கொஞ்ச நேரம் பேச வில்லை.

வினிதாவுக்கு லேசான சந்தேகம்.

ஒரு வேலை சலீமின் இந்த ஆண்மை குறைபாடு

காரணமாகத்தான் சலீம் வீட்டார் சலீமை

தன்னை விட அந்தஸ்தில் குறைவாக இருந்த

வினிதா குடும்பத்தை தேர்ந்து எடுத்தாங்களா

என்று யோசிக்க ஆரம்பிச்சா வினிதா.

அவளின் சந்தேகம் நியாயமான ஒன்று.

மனசில் வைத்து கொள்ளாம அதை தன்

கணவன் சலீமிடமே கேட்க முடிவு பண்ணினா வினிதா.

தன் தோள் மேல இருந்த சலீமின் தலையை நிமிர்த்தி

அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து

ஏங்க, இந்த ப்ரோப்லேம் எவ்வளவு நாளா இருக்கு,

வினிதா கேட்க

வினிதாவின் கேள்வியில் பதறிய சலீம்

இல்லை வினிதா, நேற்று வரைக்கும் நீ நினைக்கிற மாதிரி

எனக்கு எந்த குறைபாடும் கிடையாது.

இந்த பிரச்சனை நானே எதிர் பார்க்காத ஒன்று.

தயவு செய்து என்னை தப்பாக நினைக்காதே.

ஒரு வேலை திருமணத்துக்கான அதிக அலைச்சல்

அல்லது மன உளைச்சல் எதாவது காரணமாக

இருக்கலாம்.

ப்ளீஸ் என்னை நம்பு வினிதா,

சலீம் வினிதாவின் கையை பிடிச்சி கெஞ்சும் குரலில் சொல்ல

அதை கேட்ட வினிதா,

நான் உங்களை நம்புகிறேன் சலீம்,

ஆனா, என் நிலைமையையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சிக்கணும்.

நான் ஒரு பொண்ணு, வெளிப்படையா சொல்ல முடியாது.

எப்படி சொல்றதுன்னு தெரியல,

தயங்கிய வினிதாவை பார்த்த சலீம்,

என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்க,

உங்களுக்கு புரியும்னு நினைக்கிறன் சலீம்,

என்னால இதை ஏத்துக்க முடியல

என்னை மாதிரி உள்ள பொண்ணுங்க

இந்த நாளுக்காக எவ்வளவு நாள் ஏக்கமா

காத்திருந்து இருக்காங்க னு உங்களுக்கு

புரியாது,

இந்த மாதிரி ஆச்சுன்னா எந்த பொண்ணுதான்

ஏத்துக்குவா, வினிதா ஜாடை மாடையாக சொல்ல,

புரியுது வினிதா,

நீ என்னை நம்பு, சலீம் சொன்னான்,

இருவரும் பேசி, மருத்துவரை பார்த்து

ஆலோசனை பெறலாம் என்றும்

அது வரைக்கும் இந்த விஷயம் வீட்டில்

இருக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம்

என்றும் இருவரும் முடிவு எடுத்து

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு

தூங்க ஆரம்பித்தனர்.

ஒரு வாரம் சென்ற பிறகு

திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஒவ்வொருத்தராக

கிளம்பிய பின், வீடு நார்மல் மோடுக்கு வந்தது.

வினிதா அந்த வீட்டில் சகஜமாக உலாவ ஆரம்பிச்சா.

பவித்ரா ஹாசனுக்கு ரெண்டாவது மனைவி என்று

தெரிந்தவுடன் அந்த விஷயம் வினிதாவுக்கு

அதிர்ச்சியாக இருந்தது.

ஆனா, பவித்ராவின் அன்பும் அரவணைப்பும்,

அபி குட்டி கள்ளமற்ற சிரிப்பும்

வினிதாவை, அந்த விஷயத்தை ஜீரணிக்க வைத்தது.