ஆபிசில் பிசியாக வேலை பார்த்து கொண்டு இருந்த
அன்பு தன் டேபிளில் இருந்த இன்டெர்க்காம் ஒலிக்க
அதை தன் இடது கையை நீட்டி எடுத்து தன் இடது
காதில் பொருத்தி ஹலோ சொல்ல
கூப்பிட்டது தன் முதலாளி நண்பன் சதிஷ்.
டேய் என்னடா பண்ணிட்டு இருக்க, சதிஷ் கேட்க
என்னடா கேள்வி இது.
பிசியா வேலை பார்த்துட்டு இருக்கேன்,
கூப்பிட்டு கலாய்க்கிறியா, அன்பு சிரிக்க
சதிஷ், நீ என்ன வேலை பார்த்துட்டு இருந்தாலும்
அதை அப்படியே மூடி வச்சிட்டு என் ரூமுக்கு வா.
போன் வைக்க பட்டது.
எதுக்கு இவ்வளவு அவசரமா சதிஷ் கூப்பிடுறான்
என்று யோசித்து கொண்டே
தன் இருக்கையில் இருந்து எழுந்த அன்பு
டேபிளில் இருந்த தன் மொபைலை எடுத்துக்கொண்டு
சதிஷ் ரூமிற்கு போனான்.
காண்டீனுக்கு சென்று நல்ல வடை மற்றும் டி குடிச்சிட்டு
கேஸூலாக பேசிக்கிட்டே வந்த ரூபாவும், வசந்தியும் சுமித்ராவும்
அன்பை பார்த்தவுடன் கப் சிப் என்று தங்கள்
பேசுவதை நிப்பாட்டிட்டு தங்கள் சீட்டுக்கு போய்ட்டாங்க.
பவித்ரா இந்த கம்பெனியில் வேலை பார்க்கும் போது
இவர்கள் பாடு ஜாலியாக இருந்தது.
ஆனால், இப்போதோ பவித்ராவும் இல்லை.
எதையும் கண்டுக்காத ஹசன் சாரும் இல்லை.
ஆனால் பவித்ரா அவ்வப்போது இவர்களிடம் தொடர்பில்
இருந்தா.
சரி இவர்கள் கதை நேரம் இருந்த அப்புறமா பார்ப்போம்.
லிப்டில் பயணித்த அன்பு மேல் மாடி சென்று
வராண்டாவில் நடந்து இடது பக்கம் திரும்பி
கடைசியில் இருந்த சதிஷ் ரூமிற்கு சென்று
டொக் டொக்……….
கதவை தட்ட
டேய், உள்ள வாடா,
நோ பார்மாலிட்டீஸ்
சதிஷ் குரல் கேட்க
சிரிப்புடன் உள்ள வந்தான் அன்பு.
வேலை பார்த்துட்டு இருக்கும் போது
ஏண்டா கூப்பிட்ட,
அன்பு கேட்க
மச்சி, ஒரு முக்கியமான விஷயம்.
அதன் உடனே கூப்பிட்டேன்.
இதை கேட்ட அன்பு,
என்னடா துபாய் பார்ட்டி நம்ம
டீலுக்கு ஒத்துக்கிட்டாங்களா, அன்பு கேட்க
டேய் இது பியூரிலி பர்சனல்.
கொஞ்ச நேரத்துக்கு பிசினெஸ்ஸை ஒத்தி வை;
சொன்னா சதிஷ் அன்பை பார்க்க
நெற்றியில் ஆச்சார்ய குறியுடன் அவனை
நிமிர்ந்து பார்த்தான் அன்பு.
சதிஷ், மச்சி, நம்ம ரெண்டு பேரும் வெளிநாட்டில வேலை
பார்த்தோம் அல்லவா,
அன்பு, ஆமாண்டா…….
சதிஷ், அப்போ, கடைசியா நான் வேலையை ரிசைன்
பண்ணிட்டு
வரும் போது நாம பேசிக்கிட்டது ஞாபகம் இருக்காடா.
அன்பு, கொஞ்ச நேரம் யோசித்தவன்,
ஆமாண்டா ஞாபகம் இருக்கு, ஆனா………….