பொது இடத்துல அவ பேசினா நமக்கு
சத்தமே கேட்காது.
அவ்வளவு சாது. (?????)
வீட்டுலயும் ரொம்ப அமைதி.
நான் அவங்க வீட்டுக்கு போயிருந்தபோ
இந்த பொண்ணை பார்த்துருக்கேன்.
பெரியவங்களுக்கு என்ன மரியாதையை குடுக்குது
இந்த பொண்ணு.
நானே ரொம்ப சந்தோச பட்டேன்.
அப்படி அவளை வளர்த்து இருக்காங்க.
பெத்தவங்களை நானே பாராட்டிட்டு வந்தேன்.
சலீம் தம்பி செலக்ட் பண்ண பொண்ணுங்கள்ள
கடைசி பொண்ணு பெயர் தீபிகா
ரொம்ப லட்சணமான பொண்ணு.
அப்பா பெயர் தர்மராஜ்.
இவரும் பெரிய தொழில் அதிபர்.
இவங்களுக்கு ரெண்டு பசங்க.
ரெட்டை பசங்க.
பையன் ஒன்னு பொண்ணு ஒன்னு.
பொண்ணுக்கு முதல்ல கல்யாணம்
பண்ணிட்டு அப்புறமா பையனுக்கு
பண்ணலாம்னு அவங்க ஆசை.
இந்த பொண்ணை பற்றி சொல்லலும்னா
சுருக்கமா பாசக்கார பொண்ணு.
ரொம்ப அடக்கமான பொண்ணு.
இவளும் குனிஞ்ச தலை நிமிராதவ.
அண்ணன் என்றால் உசிரு.
அவனை விட்டு பிரிய மாட்டா.
அவ்வளவு பாசம்.(????)
நானும் ஒரு தடவை இவங்க வீட்டுக்கு
போயிருந்தேன்.
அப்ப கூட அண்ணனும் தங்கையும்
ஒரே ரூமில கதவை பூட்டிக்கிட்டு
ஒரே ஆட்டம் (???).
படு சுட்டி.
ரொம்ப நல்ல பொண்ணு.
தம்பியுடைய செலேக்சன் அற்புதம்.
நான் மனசுல நினைச்சதையே தம்பியும் நினைச்சிருக்கு.
நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.
இப்போ பெரியவங்க நீங்கதான் சொல்லணும்.
குருநாத சாஸ்திரி தன் நீண்ட உரையை முடிச்சார்.
அவர் சொன்னா அனைத்தையும் கேட்டு கொண்டு
இருந்த மூவரும்
ஒருத்தரை ஒருத்தர் பார்க்க
ஹசன், ஒரு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க சாஸ்திரி.
நாங்க கலந்து பேசி ஒரு நல்ல முடிவு சொல்றேன்.
அப்புறமா நாம மற்றதை பேசலாம்.
சொன்னா ஹசன் சலீமை பார்க்க
அவன் 5000 ரூபாயை ஒரு கவரில் போட்டு தன் அப்பாவிடம்
கொடுக்க
அவர் அதை குருநாத சாஸ்த்ரியிடம் கொடுக்க
அவர் வாய் எல்லாம் பல்லாக சிரித்து கொண்டு அதை
பவ்யமாக வாங்கி கொண்டார்.
மூன்று பேரில் யாரை சூஸ் பண்ண என்று மூன்று பேருக்கும்
குழப்பம்.
பெரிய விவாதம் நடந்தது.
சலீமின் வாழ்க்கை எந்த பெண்ணின் கையில் மாட்ட
போகிறது என்று பார்ப்போம்.
