அப்புறமா சாஸ்த்ரியிடம் விவரம் கேட்டுக்கலாம்.
பவித்ரா பக்கத்துல இருந்ததால் சலீம் சிறிது
சங்கோஜ பட
உணர்ந்த ஹசன் அணைத்து போடோஸ்களையும்
சலீம் மெயில் ஐடி கு அனுப்ப சொன்னார்.
சாஸ்திரிகளும் ஐடி வாங்கி உடனே அனுப்ப
சலீம் புன்னகையுடன் மேல இருந்த தன்
ரூமுக்கு சென்றான்.
இந்த நேரத்துல பழரசம் பறி மாற பட்டது.
முவரும் பொதுவான விஷயத்தை பற்றி
பேசி கொண்டு இருக்க
சிறிது நேரத்தில் குருநாத சாஸ்திரியின் லேப்டாப்பில்
மெயில் வந்த நோட்டிபிகேஷன் வர
அவர் அதை திறந்து பார்த்தார்.
அதில் மூன்று போட்டோஸ் இருந்தது.
சிறிது நேரத்தில் சலீமும் கீழ வந்து
உட்கார்ந்தான்.
பழரசத்தை குடிச்சி முடிச்சி டம்ளரை கீழ
வைத்த சாஸ்திரி,
தன் வாயை துடைத்து கொண்டு
தன் எதிரில் உட்கார்ந்து இருந்த மூவரையும்
பார்த்து விபரங்களை சொல்ல ஆரம்பிச்சார்.
தம்பி, அருமையா சூஸ் பண்ணிருக்காங்க.
மூன்று பேர் ஜாதகங்களும் மிக அருமை.
அருமையான குடும்பம்.
மூன்று பெண்களும் அம்ச ஜாதக லட்சணங்கள்
பொருந்த அமைந்த பெண்கள்.
முதலாவது இந்த பெண் பெயர் காயத்ரி.
அப்பா பெயர் ராமமூர்த்தி.
பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்
ஒரே பொண்ணு. அப்பா செல்லம்.
ரொம்ப ஒழுக்கமா வளர்ந்த பொண்ணு.
எந்த ஆண்களையும் ஏர் எடுத்து பார்க்காத பொண்ணு.
இன்ஜினியரிங் படிச்சிட்டு MBA படிக்கச் ஆசை படுது.
தம்பி இந்த பொண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை
அமோகமா இருக்கும்.
குருநாத சாஸ்திரி தன் தொழில் பக்தியை காட்ட ஆரம்பிச்சார்.
அண்ட புளுகு ஆகாச புளுகு.
ஜோசியர் மற்றும் கல்யாண ப்ரோக்கர் என்றாலே இப்படித்தான்
என்று நமக்கு தெரியாதா என்ன.
அடுத்து இந்த பெண் பெயர் வினிதா.
இவங்க அப்பா பெயர் குமரவேல்.
இவரும் பெரிய இண்டஸ்ட்ரிலியஸ்ட்.
சொத்து பத்து எக்கச்சக்கம்.
ஒரு பையன் ஒரு பொண்ணு.
பையன் மூத்தவன்.
பொண்ணு சின்னவ.
பையன் படிச்சிட்டு மேற் படிப்பு படிச்சிட்டு இருக்கான்.
பொண்ணு காலேஜ் கடைசி வருஷம்.
பொண்ணு பற்றி சொல்லனுமா
சுருக்கமா ரொம்ப அடக்கமானவ.
குனிஞ்ச தலை நிமிராதவ.
