EPISODE – தரகர்
நாட்கள் நகர்ந்தன.
ஒரு நாள் காலையில்
ஹசன் ரூமில் யாருடனோ போனில் பேசி
கொண்டு இருக்க
பவித்ரா தன் குழந்தை அபியாவுக்கு டிவியில்
கார்ட்டூன் காண்பித்து கொண்டே
உணவு ஊட்டி கொண்டு இருந்தாள்.
சலீம் தன் ரூமில் லேப்டாப்பில் வேலை செய்து
கொண்டு இருந்தான்.
அந்த சமயத்தில் ஒரு கார் வரும் சத்தம் கேட்க
பவித்ரா குழந்தையை தூக்கி கொண்டு
வாசலுக்கு வந்து பார்த்தாள்.
ஒரு அறுபது வயது நபர் அமிதாப்பச்சனை
நினைக்க தூண்டும் உயரத்துடன்,
கனமான உடம்புடன் காரில் இருந்து
கீழ இறங்கினார்.
உள்ள வந்த அவரை வரவேற்ற பவித்ரா
யார் என்று விசாரிக்க
தன் பெயர் குருநாதன் என்றும்
சலீம் தம்பி திருமண விஷயமா ஐயா வர
சொல்லி இருந்தாங்க என்று சொல்ல
பவித்ரா அவரை உள்ள வர சொல்லி
வரவேற்பறையில் இருந்த சோபாவில்
உட்கார சொன்னா.
குழந்தை அபியா அவரை பார்த்து சிரிச்சது.
பவித்ரா மெதுவா படி ஏறி ஹசன் ரூமை
எட்டி பார்க்க அவர் இன்னும்
போனில் பேசி கொண்டு இருந்தார்.