வழிமறியவள் – Part 56 40

மனைவி கனகு என்ற கனகவல்லி.

ரெண்டு பசங்க.

மூத்தவன் டிகிரி படிச்சிட்டு அட்மினிஸ்டரேஷன்

படிச்சிட்டு இருக்கான்.

அவன் பெயர் கார்த்திக்.

அடுத்தவ,

இப்ப வீடு இடிஞ்சி விழுற மாதிரி

கத்தினாள், அவ தான். வினிதா.

ரொம்ப அடக்கமான பெண்.

ஆனா வாய் மட்டும் நீளும்.

அப்பா செல்லம்.

ஏண்டி, இந்த கத்து கத்துற, கேட்டுகிட்டே

வினிதா ரூமில எட்டி பார்க்க

காலேஜ் போக ரெடி ஆகிட்டு இருந்தா வினிதா.

காலேஜ் கடைசி வருஷம்.

அடுத்த மாசம் பைனல் எக்ஸாம்.

வினிதா, இங்க வச்ச என் பேணா என்கேமா.

அந்த தடி மாடுதான் எடுத்துருப்பான்.

கனகு, அண்ணனை மாடுனு சொல்ற,

பல்லை பேத்துடுவேன்.

வினிதா, உனக்கு அவனை சொன்னா ஆகாதே.

அப்புறம் எங்க போச்சி என் பேனா.

கனகு, நல்ல தேடுடி.

நேத்து எங்க வச்ச.

நல்ல ஞாபக படுத்தி பாருடி.

எனக்கு அடுப்பங்கரையில் வேலை இருக்கு

கனகு எஸ்கேப் ஆக

வினிதா, அப்பா அப்பா, மறுபடியும் ஏலம் போட ஆரம்பிச்சா.

நியூஸ் பார்த்துகிட்டு இருந்த குமரவேல், தன்

மகளின் குரலை கேட்டு பதறி அடித்து ஓடி வந்தார்.

என்னமா,

நீங்க ஆசை யா வாங்கி கொடுத்த பேணா காணோம்ப்பா

அண்ணன்தான் எடுத்துருப்பான்.

அவனுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆகிடிச்சி.

அம்மா அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறா.

மகள் தையா தக்க என்று குதிக்கிறதை பார்த்து சிரிச்ச

குமரவேல்,

சரிம்மா, கோப படாதே,

அப்பா வேற வாங்கி தரேன்.

நீ காலஜிக்கு கிளம்பு சொன்ன அவர்

மறுபடியும் நியூஸ் பார்க்க போய்ட்டார்.

வினிதா கோபத்துடன் தேட

அது சமர்த்த அவள் காலேஜ் பேக்கில் கடைசி

ஜிப்பில் இருந்தது.

கிடைச்சவுடன் சத்தம் காட்டாம

சாப்பிட வந்தா.

ஏங்க உங்களுக்கு தனியா சொல்லனுமா, சாப்பிட வாங்க

கனகு சொல்ல

மனைவி சொல்லே மந்திரம் என்று சாப்பிட

டைனிங் டேபிள் வந்தார் குமரவேல்.

ஆனா அவர் கண் டிவி பொட்டி மேல தான் இருந்தது.