வழிமறியவள் – Part 55 34

விட்டு விலக ஆரம்பித்தான்.

ஆனால், பவித்ராவோ தன் கணவன்

சதீஷை அழைத்து இந்த விஷயத்தை

அழுது கொண்டே சொல்ல

சதிஷ் துடித்து போய் விட்டான்.

மறுநாள் இரவு தன் ஆபிசில் வேலை முடிந்த வுடன்

சதிஷ் தன் நண்பன் அன்புவை அழைத்தான்.

தன் பாக்கெட்டில் இருந்த போன் இசையை வெளியிட

அன்பு எடுத்து பார்த்தான்.

சதிஷ் காலிங்……………

அன்பு, சொல்லுடா மச்சி…….

சதிஷ், டேய், வேலை முடிந்ததா…………

அன்பு, ஆமாண்டா, என்ன விஷயம்.

சதிஷ், மச்சி, உங்கிட்ட கொஞ்சம் பேசணும் டா.

அன்பு, மச்சி, ஏதும் பிராபலமா

சதிஷ், நேர்ல சொல்றேண்டா….

அன்பு, மச்சி ஒரு அரை மணி நேரம் கொடு,

இந்த ஒர்க் முடிச்சிட்டு ரிப்போர்ட் ஆடிட்டோருக்கு

மெயில் அனுப்பிச்சிட்டு நான் வரேன்.

சதிஷ், மச்சி என் கேபின்ல பேச வேண்டாம்.

வெளியில எங்கேயாவது போகலாம்டா.

அன்பு, சரிடா, நாம போன மாசம் மீட் பண்ண

ரெஸ்ட்டாரெண்டுக்கு சரியா 6 மணிக்கு வந்துடு.

நானும் வந்துடுறேன்.

சதிஷ், சரி டா. பை

அன்பு, பை டா.

போனை வைத்த பின்பு, என்ன விஷயம் என்று அவன்

மூளை யோசிக்க ஆரம்பித்தது.

தனியாக பேசணும் என்றால், ஒரு வேலை அவன்

மனைவி பவித்ராவை பற்றி தான் இருக்கும்.

தன் நண்பனுக்காக வருத்த பட்ட அன்பு,

பின்பு தன் வேலையில் மூழ்க ஆரம்பித்தான்.

ஐம்பது நிமிடம் கழிந்த பிறகு, மெயில் அனுப்பி முடித்த

அன்பு, தன் நண்பன் அழைத்ததை நினைவு கூர்ந்து

கிளம்ப ஆரம்பித்தான்.

ரெஸ்ட் ரூம் சென்று, முகத்தை கழுவி

வெளியில் வந்து தன் பேக்கை எடுத்து கார் பார்க்கிங்

ஏரியாவுக்கு வந்தான்.

அங்கே சதீஷின் கார் இல்லை.

அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான்.

அவன், முதலாளி அரை மணி நேரத்திற்கு முன்னாடியே

கிளம்பிட்டாங்கனு சொல்ல

அன்புவும் வேக வேகமா தன் காரை நகர்த்தினான்.

கார் பார்க்கிங் தாண்டி வெளியில் வந்து மாநகர

டிராபிக்கில் நீந்த ஆரம்பித்தான்.

மாலை நேர ட்ராபிக் அதிகமாக இருக்க

அன்பு காரை லாவகமாக கையாண்டான்.

இந்த வாழ்க்கை, இந்த பதவி,

இந்த கார், சொகுசான பங்களா

கை நிறைய சம்பளம், எல்லாம்

நண்பன் சதிஷ் போட்ட பிச்சை.

இல்லை என்றால் சொற்ப பணத்திற்காக

வெளிநாட்டில் அடிமை வாழ்க்கை.

அப்பேர் பட்ட நண்பனுக்கு மன கவலை.

அவனுக்கு ஏதாவது செய்யணும்.

மனசில் கருவி கொண்டான் அன்பு.

திடீர் என்று ஒரு பைக் குறுக்கே வர

சட்டென பிரேக் போட்டான்.

டோர் கண்ணாடியை இறக்கி தலையை

வெளியில் நீட்டிய அன்பு,

ஏம்பா பார்த்து வர கூடாதா,

சாரி சார், சொன்ன பைக் காரன் கிளம்ப

டோர் கண்ணாடியை ஏற்றி தன்

வண்டியை நகர்த்தினான் அன்பு.

அடுத்த பத்து நிமிடத்தில் தன் நண்பன்

முன்னாடி உட்கார்ந்து இருந்தான்.

சதிஷ் அமைதியாக இருக்க

அன்பு, மச்சி, நீ இப்படி இருப்பதை பார்க்க

கஷ்டமாக இருக்குடா

என்ன பிரச்சனை சொல்லுடா………..

சதிஷ் சொல்ல ஆரம்பிக்க

சார் என்ன சாப்பிடறீங்க

சர்வர் தனக்கே உரித்தான பணிவுடன் அவர்களை

பார்த்து கேட்க

என்னடா சாப்பிடற சதிஷ் நண்பனை பார்த்து கேட்க

மச்சி ஒன்னும் சாப்பிடுற மூட் இல்லேடா

என்ன விஷயம்னு மனசு பதறுது. அன்பு அன்புடன் சொல்ல

சதிஷ் சர்வரை பார்த்து ரெண்டு பிளேட் கட்லட் ஆர்டர் செய்துட்டு

அன்பு பக்கம் திரும்பினான்.

சர்வர் ஆர்டர் எடுத்து கிளம்ப

சதிஷ் சொல்ல ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் இருந்து விவரமாக சொல்லி

தற்போது சலீம் விஷயம் வரை சொல்லி முடிக்க

ஆர்டர் பண்ண கட்லட் பிளாட்டை சர்வர்

டேபிளில் வைத்து விட்டு போனார்.

விஷயத்தை கேட்ட அன்பு பதறி விட்டான்.

சதீஷோ அமைதியாக இருந்து

கட்லட்டை போர்க்கில் துண்டாடி அதை

தக்காளி சாஸில் முக்கி வாயில் வைக்க

அவனை வித்யாசமாக பார்த்தான் அன்பு.

என்ன என்பது போல சதிஷ் அவனை பார்க்க

இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு

நீ பாட்டுக்கு சாப்பிட்டிட்டு இருக்க,

அன்பு கேட்க

சதிஷ் ஒன்றும் சொல்லாமல் அன்பை சாப்பிட சொன்னான்.

இருவரும் சாப்பிட்டு முடிக்க