வழி பிறந்தது 2

அந்தப் பெண்ணின் பால் கனிந்த நட்பு.. காதலாகக்கூடத் தோன்றியது. இதுபோன்ற ஒரு கலகலப்பான பெண்ணை எந்தப்பையன்தான் விரும்ப மாட்டான்.? இவளது காதலன் அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். !

” பூரணி.. யூ ஆர் வெரி க்யூட்..! ரொம்ப ஜாலியா.. கலகலப்பா பேசறீங்க..! ” எனப் பாராட்டினான்.
அவளது முகம் பிரகாசமானது.
”அப்ப என்னைப் புடிச்சிருக்கு இல்லையா..?”
”புடிச்சிருக்காவா..? ரொம்ப.. ரொம்ப புடிச்சிருக்கு. .!”

அருகில் மிருதுளா இல்லாவிட்டால் இன்னும் என்னெல்லாமோ சொல்லியிருப்பான். அப்போது அவள் கை பேசி சிணுங்கியது.

”எக்ஸ்க்யூஸ் மீ..” சொல்லி.. செல்லில் பேசினாள்.
மிருதுளாவைப் பார்த்தான் நந்தா.
மிருதுளா.. ” சரியான வாயாடி பொண்ணு..! எல்லார் கூடவும் இப்படித்தான்.. கலகலன்னு பேசுவா.. சுலபமா எல்லார் கூடயும் பிரெண்டாகிருவா..” என்றாள்.

கைபேசியில் உரையாடின பூரணி. . இவர்களைப் பார்த்து..

” ஓகே பிரெண்ட் நந்தா. ! மறுபடி இன்னொரு நாள் பேசலாம்.! எனக்கு அழைப்பு வந்தாச்சு.. பை.. பை..! ஆண்ட்டி. பை..” எனக் கையசைத்து.. டாடா காட்டிவிட்டு. . அவசரமாக அங்கிருந்து காணாமல் போனாள்..!!!

ஜன்னல் அருகில் இருந்து மெதுவாக நகர்ந்து வந்து.. கட்டிலில் உட்கார்ந்தாள் மிருதுளா. நந்தாவைப் பார்த்து.. மெல்லிய குரலில் கேட்டாள்.

” நீ.. லவ் பண்றியா நந்தா. .?”
”லவ்வா..? என்ன ஆண்ட்டி.. நீங்க. .! அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .”
” இவள இல்லப்பா… ஊர்ல..?”
” சே.. சே..! நா ஒன்னும் அப்படிப்பட்ட பையன் இல்ல ஆண்ட்டி. .”

” ஹேய்..! உக்காரு இப்படி. .” எனச் சிரித்து. . அவன் கையை எட்டிப் பிடித்து. . அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.

” லவ் பண்றது கெட்ட பழக்கம் இல்ல நந்தா. .! ”
” இ.. இல்ல. .! நா.. அப்படி சொல்லல.. ஆண்ட்டி. .”
” உனக்குத்தான்.. உன் சொந்தத்துல.. தமிழரசி.. சுதிகானு..நெறைய யங் கேராள்ஸ் இருக்காங்களே.. அவங்கள்ள யாராவது..?”

” சே.. சே..! அவங்கள்ளாம் ஆல் ரெடி… ஆள் வெச்சிருக்காங்க ஆண்ட்டி. ! ”
” அப்ப நீ.. லவ்வே பண்ணதில்லயா…?”
” அதெல்லாம். . காலேஜ் டேஸோட முடிஞ்சு போச்சு ஆண்ட்டி.. இப்பெல்லாம்.. ப்ரீ பர்ட்தான்..” எனச் சிரித்தான்.

” அப்பறம் பூரணி எப்படி இருக்கா..?” எனக் குறும்பாகப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
புன்னகைத்தான்.

” ம்.. ம்.. நல்லாருக்கா ஆண்ட்டி. .”
” அவள ரொம்ப புடிச்சிப்போச்சு போலிருக்கு..?”
” அப்படித்தான் நானும் நெனைக்கறன் ஆண்ட்டி. .! ஆனா அவளுக்கெல்லாம் கண்டிப்பா. ..இப்ப பாய் பிரெண்டு இருப்பான்..”

” ஏன் வருத்தமா இருக்கா..?”
”சே… சே..! அதெல்லாம் இல்ல”
” இன்னொரு விசயம் தெரியுமா உனக்கு. .?”
” என்ன.?”
” பூரணி. . ஒரு டெஸ்ட் ட்யூப் பேபி..”

வியந்து போய்ப் பார்த்தான்.

”நெஜமாவா ஆண்ட்டி. .?”
” ஆமாப்பா..!!”
” என்னால நம்ப முடியல ஆண்ட்டி. .! பாக்க தேவதை மாதிரி இருக்கா… அத்தன அழகு..!!”
” அப்ப நம்பிக்கை இல்லையா.. நான் சொன்னதுல..?”
” இல்ல.. நா அப்படி சொல்லல ஆண்ட்டி. .! இதுக்கு முன்ன எந்த ஒரு டெஸ்ட் ட்யூப் பேபியையும் நான் பாத்ததில்ல அதான். ..எப்படி இது.. ?”

அதன் பிறகு… பூரணி. . கருவான விதம்… உருவான விதம்… ருதுவான விதமெல்லாம் தனக்குத் தெரிந்தவரை சொன்னாள் மிருதுளா..!! ஏழரை மணிவரை பேசிக் கொண்டிருந்து விட்டு. .

”சரி வாப்பா டிபன் சாப்பிடலாம்” என எழுந்தாள்.

நந்தா ” நீங்க நடங்க ஆண்ட்டி. . நான் வரேன்.” என பாத்ரூம் போனான்.

அவன் பாத்ரூமில் இருக்கும்போது.. வெளியே ‘தடால் ‘ என ஒரு சத்தம் கேட்டது. பாத்ரூமிலிருந்து வந்தவன் அறைக்கு வெளியே போய்ப் பார்க்க. .. காலைப் பிடித்தவாறு.. மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள் மிருதுளா.
”என்னாச்சு ஆண்ட்டி. .?” அருகில் போனான்.

”ஸ்லிப்பாகிட்டேன்..!” என முனகலாகச் சொன்னாள்.

” அச்சச்சோ… அடி. ஏதாவது பட்றுச்சா.. ஆண்ட்டி. .?”

” அடி படல்ல.. ஆனா கால் சுளுக்கிருச்சுனு நெனைக்கறேன்.. கால் ஊனினா.. பயங்கரமா வலிக்குது.. அதான். . அப்படியே உக்காந்துட்டேன்.”

“ஐயோ.. என்ன ஆண்ட்டி நீங்க? பாத்து வரக் கூடாது? ”

அவளுக்கு இரண்டு படிகள் கீழே போய் உட்கார்ந்தான். அவள் காலை எடுத்து.. நீட்டச் செய்தான். அவளால் நல்ல விதமாக நீட்ட முடியவில்லை.

” கால.. ஊன முடியல…”என்றாள்.
” எந்த இடம்..?”
” இங்க. .” என பாதத்தின் மேற்புறதத்தில் தொட்டுக் காண்பித்தாள்.

அவள் சொன்ன இடத்தில்.. காலை மெதுவாக நீவினான்.

” வீட்ல மூவ் இருக்கா ஆண்ட்டி. ?”
” ஆ.. இருக்குப்பா. .”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *