இனி அப்படிதான்…
ஓ…
எவ்ளோ நாளா சாட் பண்றோம். எல்லா விசயத்தையும் சேர் பண்றோம். அதனாலே நான் உன்னை இனி எனக்கு எப்படியெல்லாம் கூப்பிட ஆசையா இருக்கோ அப்படியெல்லாம் கூப்பிடுவேன்.
அவனுடைய மெசெஜில் ஒரு அதிகாரம் இருந்தது. அவன் எடுத்துக் கொண்ட அதிகப்படியான உரிமைக்காக அவன் மீது கோபப்பட்டு அவனை திட்ட என் பெண்மை அனுமதிக்கவில்லை. அவன் அப்படி சொன்னதில் ஒரு ஆளுமை இருந்தது. அதற்கு என் பெண்மை அடங்கி போனது. அவன் செலுத்திய அதிகாரம் எனக்கு பிடித்திருந்தது.
அவனை இன்னும் தூண்டி விட வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் வந்தது.
ஓஹோ… சாருக்கு இன்னும் எப்படியெல்லாம் கூப்பிடனும்ன்னு ஆசை…
எப்படி வேணா கூப்பிடுவேன்…
அதான் எப்படின்னு சொல்லுடா…
அம்மு….
அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே…
செல்ல அம்மு….
டேய்…
ம்ம்ம்…
செல்ல ராகவ்…
அம்மு….
ராகவ்…
அம்ம்மு….
ராகவ்வ்வ்…
அம்ம்ம்ம்ம்ம்மு…
ஓ….ராகவ்… மை ஸ்வீட் ராஸ்கல்…
உன் கூட இப்படியே பேசி கிட்டே இருக்கு அம்மு….
எனக்கும் தாண்டா….
அம்மு….
ம்ம்ம்ம்….
ஒரு கவிதை சொல்லட்டுமா?
ஓ… கவிதை கூட எழுதுவீங்களா சார்?
இது வரைக்கும் இல்லை… ஆனா இந்த கவிதையை பார்த்தப்புறம் கவிதை வருது…
எந்த கவிதையை…
அமுதா என்கிற கவிதையை…
டேய்… இதெல்லாம் ஓவர்டா….
சரி கவிதையை கேளுங்க…
சொல்லு பார்ப்போம்…
அழகின் இருப்பிடமே…
முத்து ரத ரத்தினமே…
தாமரை மலராய் மலர்ந்தவளே…
போடா… ரொம்ப மொக்கையா இருக்கு.
