ஆபிசிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா கிச்சனிலிருந்த படியே கூப்பிட்டாள் “அமுதா வந்துட்டியா” ஆமா ரொம்ப இன்டலிஜென்டான கேள்வி நான் வராமல் எப்படிப் பதில் சொல்லப் போகிறேனாம் என்று சலித்தபடி பதில் சொன்னாள் அமுதா “ஆமா வந்துட்டேன்மா” “பக்கத்து வீட்டு இந்து உன்னை அங்கு வரச் சொன்னா. அவளோடு ஹஸ்பன்ட் எங்கே வெளியில போறாராம் அவள் தனியாத தான் இருக்காளாம். நீ வந்தா உன் கூடப் பேசிக் கொண்டு இருந்தா பொழுதும் போகும் அதை விட இரவில் தனிய […]