ஆதலால் காதல் செய்வீர் Part 5

எங்களுக்கும் இரு தினங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது …பத்மாவின் கணவர் என்னுடைய கணவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் …

அவர் போகும்போது உங்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லி விட்டு சென்றிருக்கிறார் ..
என்னுடைய கணவர் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் அவரும் உங்களை லேசாக விசாரித்துவிட்டு விட்டுவிட்டார் அதன் விளைவு இன்று பல கிளைகளாக பல பெண்களின் வாழ்க்கை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டது…

அன்றே உங்களை தீவிரமாக விசாரித்து இருந்தால் உண்மை தெரிந்து இருக்கும் அப்படி உண்மை தெரிந்து இருந்தால் அன்றைய உங்களுக்கு விஷம் வைத்துக் கொன்று இருப்பேன் பல பெண்களின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டிருக்கும்…

ஒரே குடும்பத்தில் அம்மா மற்றும் அவளுடைய இரண்டு பெண்களின் வாழ்க்கையில் நீங்கள் விளையாண்டு இருக்கிறீர்கள்…. அதிலே அந்த அம்மாவுக்கு நீங்களே தாலியும் கட்டிய குடும்பமும் நடத்தி இருக்கிறீர்கள் ….இவை அனைத்தையும் யாருக்கும் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்… பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிக்கும் பொழுது உலகமே இருண்டு விட்டது என்று நினைக்கலாம் …

அதுபோல்தான் உங்கள் நடவடிக்கை இருந்திருக்கிறது… நீங்கள் இப்பொழுது கூட்டி வந்திருக்கும் பெண் திவ்யா உங்களது குழந்தையை நீங்கள் சுமப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் …அது மிகப்பெரிய தவறு .

அது ராஜாவின் குழந்தை … அது ராஜாவுக்கும் தெரியும் …நீங்கள் முதல் முறை தவறு செய்துவிட்டு பத்மாவின் கணவன் உங்களை துரத்தும் பொழுது நீங்கள் கோட்டை சுவரை ஏறி குதிக்கும் பொழுது உங்களுடைய விதைப்பையில் அடிபட்டு உங்களுடைய ஆண்மை பறிபோய்விட்டது…. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எந்த ஒரு மருத்துவமனைக்கும் சென்று நீங்கள் அதை சோதித்து அறியலாம் …

நீங்கள் செய்த தவறுக்கு ஆண்டவன் என்றொ தண்டனை கொடுத்து விட்டார்….

அதை அறியாமல் நீங்கள் உங்கள் வேலைகளை இதுவரை நடத்தி விட்டீர்கள் நீங்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக ராஜாவின் குழந்தையை நீங்கள் வளர்ப்பீர்கள்…. ஏனென்றால் இப்பொழுது அது ராஜாவின் குழந்தை நான் மறக்க மாட்டேன் என்றால் உங்கள் முன்னாள் கள்ளக்காதலி இப்போதைய மனைவி திவ்யா உங்கள் முகத்தில் காறி துப்பி விட்டு போய் விடுவாள்…

நீங்கள் வெளியே நடமாட முடியாது இதுதான் உங்களுக்கு கிடைத்த தண்டனை உங்களுக்கு இந்த வீட்டையும் நீங்கள் புதிதாக ஆரம்பித்த கம்பெனியையும் கொடுத்திருக்கிறோம்…

உங்கள் கம்பெனிக்கு இந்த வீட்டின் மேல் கடன் உள்ளது அதை அடைப்பதும் மீதமுள்ள வாழ்க்கை வாழ்வதும் உங்கள் திறமை அடக்கத் தவறினால் நீங்களிருவரும் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருவீர்கள் குழந்தையை உங்களிடமிருந்து எப்படி வாங்கவேண்டும் என்று ராஜாவுக்குத் தெரியும் அவன் வாங்கிக் கொள்வான் …

மீதமுள்ள அனைத்தும் என்னுடைய கணவன் தன்னுடைய சுய முயற்சியால் சம்பாதித்தது அதனை நாங்கள் எங்களுடைய பையன் ராஜாவுக்கு சுயநினைவோடு எழுதிக் கொடுத்து இருக்கிறோம்…

நாங்கள் அவனுடன் தான் இருக்கிறோம் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் எங்கள் கண்முன் வந்து விடாதீர்கள் அப்படி வந்தால் நீங்கள் உயிரோடு இருக்கும் கடைசி நாளாக அது தான் இருக்கும் …நானே உங்களை சொறி நாயை சுடுவது போல சுட்டு விடுவேன் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று அந்த கடிதம் முடிந்து இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *