ஆதலால் காதல் செய்வீர் Part 5

அதற்கு கிருஷ்ணன் எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது ஆனாலும் எப்படி செய்தால் சமூகசேவை செய்ததாக சரியாக நம்முடைய கம்பெனிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும் என்று அவர் பதிலுக்கு நடிக்க ஆரம்பித்தார்…

இறுதியில் காவியாவும் ஒருவழியாக ஒத்துக்கொண்டால் காவியா கிருஷ்ணனுக்கு தெரியாமல் தர்ஷன் மொபைலுக்கு நீ வீட்டுக்கு சென்று விடு எனக்கு திருச்சியில் ஒரு வேலை இருக்கிறது நான் போய்விட்டு வந்துவிடுகிறேன் ஒரு பத்து நாள் ஆகும் என்று கூறி மெசேஜ் அனுப்பினாள்….

அதனால் தர்ஷன் கிளம்பிப் போய்விட்டான் பெண் காவியாவும் கிருஷ்ணனும் வீட்டிற்கு வந்தார்கள் ….

வந்தவர்கள் மதிய உணவு அருந்தி விட்டு நான்கு பேரும் ஒன்றாக கிருஷ்ணனும் காவியாவும் ஒரு காரிலும் சகோதரர்கள் இருவரும் ஒரு காரிலும் கிளம்பி ஆசிரமத்தை அடைந்தார்கள் …

இனி நடப்பதை மற்றொரு எபிசோடில் காணலாம்

திவ்யாவின் விவாகரத்து அப்ளை செய்த சில நாட்களிலேயே ராஜாவின் திறமையால் விவாகரத்து கிடைத்தது தர்ஷன் எவ்வளவு அந்த வழக்கை இழுத்து அடிக்க நினைத்தான் ராஜா அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டான் …

ராஜா தர்ஷன் ஆண்மையற்றவன் என்று அதற்கான சான்றிதழ்களை கோர்ட்டில் கொடுத்திருந்தான் ..

அதனை தர்சனுக்கு தெரியாமல் மறைத்து வேறு சில காரணங்களை கூறி வழக்கை முடித்து வைக்குமாறு கூறியிருந்தான்… ஏதேனும் ஜீவனாம்சம் வேண்டுமா என்று திவ்யாவிடம் கேட்டதற்கு அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டாள்…

தர்ஷன் திவ்யா தன்னிடம் விவாகரத்து வாங்கி விட்டதாக கூறினான் அதற்கு அவனது பெற்றோரும் சரி விட்டுவிடு என்று கூறினார்கள்… அவனுக்கு அவனது பெற்றோர் சிறிது காலத்திற்கு முன்பே அவனை தலை முழுகி விட்டார்கள் என்பது தெரியாது…

தர்ஷன் தனது பெற்றோர் இன்னும் தன்னை நம்புவதாக எண்ணி திவ்யாவிடம் சென்று நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்… என்னுடைய குழந்தையும் உன்னுடைய வயிற்றில் வளர்கிறது …எனவே நாம் இருவரும் திருமணம் செய்து என்னுடைய வீட்டிலேயே குடும்பமாக வாழலாம் என்று கூறினான்…

திவ்யாவும் ஒப்புக்கொண்டாள் அவள் தன் அப்பாவிடம் “அம்மா எங்கே சென்றிருக்கிறார்” என்று கேட்டால்.. . அதற்கு அவர் உன்னுடைய அம்மா சமூக சேவை செய்வதற்காக திருச்சி வரை சென்றுள்ளார்… அங்கு ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார் என்று கூறினார்…

மேலும் அவர் ஏதாவது முக்கியமான விஷயமா அப்படி இருந்தால் என்னிடம் கூறு முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன் என்றார் .

அவள் எதற்காக தன்னை நாடி வந்து நடித்துக்கொண்டு இருக்கிறாள் என்பது அவருக்கே தெரியும்… இருந்தாலும் அப்படி கேட்டார்… அதற்கு திவ்யா ராஜா என்னை வேண்டாம் என்று கொடுமைபடுத்தி ஒதுக்கிவிட்டார் நான் இருக்கும் பொழுதே பவித்ராவிடம் உறவு வைத்துக்கொண்டார் என்னால் அதை தாங்க முடியாமல் அவருடனான உறவை முறித்துக் கொண்டேன்…

இப்பொழுது பவித்ராவும் தர்சனை வேண்டாம் என்று கூறிவிட்டா அதனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இருக்கிறோம் என்று கூறினாள் ….

அதற்கு கிருஷ்ணன் சரிதான் உங்கள் இருவருக்கும் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் …நீங்கள் இருவரும் திருமணம் செய்து தர்ஷன் வீட்டிற்கு சென்று விடுங்கள் …இங்கு வரவேண்டாம் அங்கேயே வாழுங்கள் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்…

அவர் ஆத்திரத்தில் வெளியே சென்றுவிட்டார் இதனை அறியாத திவ்யா அப்பா இவ்வளவு சீக்கிரமா தங்கள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் என்று நினைத்து அன்றைய தினமே இருவரும் திருமணம் செய்துகொண்டு தர்ஷன் வீட்டை அடைந்தனர்

அங்கே தன்னுடைய வீட்டில் காவலாளி மட்டுமே இருந்தான் தர்சன் காவலாளியிடம் அம்மாவும் அப்பாவும் எங்கே என்று கேட்டான் …

அதற்கு காவலாளி இருவரும் மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டை விட்டுப் போய்விட்டார்கள் நீங்கள் வந்தால் இந்தக் அவரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று ஒரு கவரை கொடுத்தான் …

நீங்கள் வரும்பொழுது கூட ஒரு பெண்ணையும் கூட்டிக் கொண்டு வருவீர்கள் என்று சொல்லி அவர்களிடமும் ஒரு கவரை கொடுக்கச் சொல்லி தந்து விட்டு போய்விட்டார்கள் என்று சொல்லி திவ்யாவிடம் ஒரு கவரைக் கொடுத்தார்…

அதில் இருந்தது என்ன பொருத்திருந்து பார்க்கலாம்….

இருவரும் வீட்டிற்குள் சென்று தனித்தனி அறையில் சென்று தங்களது கவரை ஓபன் செய்து படிக்க ஆரம்பித்தார்கள் …முதலில் தர்ஷன் உள்ளே இருந்த பேப்பரில் அவனுடைய தாயார் எழுதியிருந்தார் …”மிஸ்டர் தர்ஷன் அவர்களுக்கு ,உங்கள் பெற்றோர் எழுதிக்கொள்வது … நீங்கள் உங்கள் புது மனைவியுடன் இந்த கடிதத்தை படிக்கும் பொழுது நாங்கள் வீட்டில் நீங்கள் இருக்கும் இப்பொழுது இருக்கும் வீட்டில் இருக்க மாட்டோம் …எங்களுடைய பையன் வீட்டில் இருப்போம் …

உங்களுக்கு தெரியாது உங்களை நானும் எனது கணவனும் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை நீங்கள் …எனக்கு திருமணம் ஆகும்போது 20 வயது… எட்டு வருடங்களாக எங்களுக்கு குழந்தை கிடையாது …அந்த எட்டு வருடங்கள் கோவில் குளம் என்று போகாதே இடமில்லை பார்க்காத மருத்துவம் இல்லை… ஆனாலும் கருத்தரிக்க வில்லை கருத்தரிக்கவில்லை ….

நான் இருக்காத விரதமும் இல்லை ஏதோ யார் செய்த புண்ணியமோ நீங்கள் என்னுடைய 28வது வயதில் எனக்கு பிறந்தீர்கள் உங்களுடைய சிறுவயதிலிருந்து உங்களுடைய தேவைகள் அனைத்தையும் ஒரு தாயாக நான் நிறைவேற்றி வைக்க ஆசைப்பட்டேன் …இருந்தாலும் சமூகத்தில் உங்களை ஒரு ஒழுக்கமுள்ள மனிதனாக தான் வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை …

அதனால் தான் உங்களுடைய சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைத்த நான் கண்டிக்க வேண்டிய விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டேன்… அதில் முக்கியமானது சுய ஒழுக்கம் …நீங்கள் இதுவரை அப்படித்தான் நடந்து கொண்டீர்கள் என்று நான் நினைத்தேன்…

ஆனால் நீங்கள் இதுவரை அப்படி நடந்து கொண்டதாக எங்கள் இருவரிடமும் நடித்தது சமீபத்தில் எங்களுக்கு தெரிய வந்தது…

நீங்கள் உங்களுடைய பதினெட்டாவது வயதில் பக்கத்து வீட்டில் குடியிருந்த பத்மாவிடம் தவறாக நடந்து இருக்கிறீர்கள் …அதனால் விளைந்த விளைவு உங்களுக்கு இன்றும் தெரியாது பத்மா அவளுடைய கணவர் உடன் ஊருக்கு சென்றது தான் உங்களுக்கு தெரியும்… இருவரும் ஊருக்கு சென்றதும் அவருடைய கணவர் அவனை ஒதுக்கி வைத்துவிட்டாராம்… அவள் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் …அது உங்களுக்கு தெரியாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *