கிருஷ்ணன் அவருக்கு நகைக்கடை ஒன்றை துவக்கி முன்னேற வழிவகை செய்தார் அதனால் அண்ணன் தம்பி இருவரும் கிருஷ்ணனின் சொல்லை வேத வாக்கு என்று இருப்பவர்கள் .
இருவரும் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் வசிக்கிறார்கள் .
. இரண்டு பேருக்குமே இரண்டு பசங்க தான் ராமன் தன்னுடைய மூத்த பையனுக்கு திவ்யாவை பெண் கேட்டார் அதற்குள்ளாக ராஜாவுக்கு பேசி முடித்து விட்டதால் திவ்யாவை பெண் கொடுக்க முடியவில்லை பவித்ராவை கேட்டபொழுது காவியா பெண் தர மறுத்து விட்டாள் … அதற்கான காரணம் நம் எல்லோருக்கும் தெரியும் …
கிருஷ்ணன் இருவருக்கும் போன் செய்து இருவரையும் நான் பார்க்க வேண்டும் முக்கியமான விஷயத்தைக் குறித்து பேச வேண்டும் நீங்கள் எப்பொழுது ஃப்ரீயாக இருப்பீர்கள் என்று சொன்னால் நான் நாளை வந்து பார்க்கிறேன் என்று கூறினார் …
அதற்கு அவர்கள் என்ன மாமா எங்களிடம் பேசுவதற்கு உங்களுக்கு எதற்கு நேரம் காலம் தேவைப்படுகிறது …நீங்கள் சொன்னால் அடுத்த நிமிடமே நாங்கள் அங்கு வந்து நிற்போம் .
ஏன் எங்களிடம் இதுபோல தெரித்து பேசுகிறீர்கள் என்று வருத்தப்பட்டார்கள்…
அதற்கு கிருஷ்ணன் இல்லையப்பா இது வேறு வகையான முக்கியமான விஷயம் நான் நேரில் சந்தித்து உங்களுடன் பேசவேண்டும்… இந்த விஷயம் காவியாவிற்கு எக்காரணம் கொண்டும் தெரியக்கூடாது என்று கூறினார்.
அவர்களும் ஒப்புக்கொண்டனர் காலை 11 மணியளவில் குறிப்பிட்ட ஓட்டலை சொல்லி அங்கு சந்திக்கலாம் என்று கிருஷ்ணன் கூறினார் அவர்களும் வந்து விடுகிறோம் என்றார்கள்.
பவித்ரா கிருஷ்ணனை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்தால் .
ராஜா ஏற்கனவே வீட்டுக்கு வந்து விட்டான் அவன் வேலைக்காரர்கள் கொடுத்த தேநீரை அருந்தி விட்டு ஹாலில் காத்திருந்தான்… பவித்ரா வந்ததும் மாமா உங்களிடம் முக்கியமான சில விஷயங்களை பேச வேண்டும் என்றால்.
. அதற்கு ராஜா என்ன உங்கள் அக்கா அம்மா விஷயமாக பேச வேண்டுமா என்று கேட்டான்…
இந்த முறை அதிர்ந்து நிற்பது பவித்ராவை முறையானது …பவித்ரா “மாமா உங்களுக்கு எப்படி தெரியும் “என்று கேட்டால் …அதற்கு ராஜா என்னை என்ன ஏமாளி என்றும் கேன பையன் என்றும் நினைத்தாயோ நான் யார் என்று உனக்கு தெரியுமா …நீ எங்க வேலை பாக்குற என்று தெரியுமா …நீ பேசிக் கொண்டிருப்பது தி கிரேட் பிசினஸ்மேன் ராஜாவிடம் என்று உனக்கு தெரியுமா… நான் தான் ராஜா குரூப் ஆப் கம்பெனி ஓனர் …
நீ வேலை பார்க்கும் தேவி ஹாஸ்பிடல் எங்களுடையது தான் அது என்னுடைய அம்மாவின் பெயரில் நிறுவப்பட்ட ஹாஸ்பிட்டல் என்று கூறினான் …அதைக் கேட்ட பவித்ரா அதிர்ச்சியில் உறைந்து விட்டால்…
எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் எவ்வளவு சிம்பிளாக இருக்கிறான் என்று அதிர்ச்சியானாள் …நேற்று இரவு உன்னை அவன் அவமானப்படுத்தும் போது நீ வெளியே உன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாய் அப்பொழுது நான் வெளியே தான் இருந்தேன் …
அப்பொழுது தீர்மானித்துவிட்டேன் ஏதோ என்னை சுற்றி நடக்கிறது அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் …அதனால் காலையில் நான் தனியாக எனக்கென்று வைத்திருக்கும் டிடக்டிவ் ஏஜென்சிகள் எனக்காக வேலை பார்த்தார்கள் …அவர்கள் கொடுத்த தகவல் தான் இது …
இனிமேல் இந்த ராஜாவை ஆட்டத்தை எல்லோரும் பார்ப்பார்கள் என்று கூறினான்.
அதற்கு பவித்ரா சரி மாமா இனிமேல் இங்கு எனக்கு வேலை இல்லை எனவே நான் கிளம்புகிறேன் என்று கூறினால்… அதற்கு ராஜா இனிமேல் இங்கு உனக்கு வேலை இல்லை என்று யார் கூறினார் இனிமேல் தான் இங்கு உனக்கு வேலை இருக்கிறது… நானாக சொல்லும்வரை நீ எங்கும் போக கூடாது இங்கே தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டான் …பவித்ராவும் சரி மாமா என்று கூறி உள்ளே சென்று விட்டாள்..
மறுநாள் தான் சொன்னது போலவே கிருஷ்ணன் கிளம்பிச் சென்று தனது மனைவியின் சகோதரர்களை ஹோட்டலில் சந்தித்தார் …இருவருக்கும் தேவையான உணவை அவரே ஆர்டர் செய்தார் …சாப்பிட்டு முடித்தவுடன் சகோதரர்கள் இருவரும் என்ன விஷயம் மாமா எதுவென்றாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறினார்கள்…
அதற்கு கிருஷ்ணன் நான் சொல்லப் போகும் விஷயம் மிகவும் பெரியது நீங்கள் இருவரும் உங்கள் மனதில் இருக்கும் முடிவை கூறுங்கள் …நானும் ஒரு முடிவை எடுத்து வைத்திருக்கிறேன் …பிறகு மூவரும் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்று கூறினார் சரி மாமா நீங்கள் கூற வந்ததை கூறுங்கள் என்று கூறினார்கள்..
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கிருஷ்ணன் தான் கொண்டு வந்திருந்த ரிப்போர்ட் களை அவர்கள் முன் வைத்தார் …வைத்துவிட்டு ,நீங்களிருவரும் படியுங்கள் நான் ஒரு பத்து நிமிடம் கழித்து வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார் …
சகோதரர்கள் இருவரும் அந்த ரிப்போர்ட்டை படிக்க ஆரம்பித்தார்கள் படிக்க ஆரம்பித்த உடனேயே தங்களது சகோதரியின் லீலைகளை புரிந்து கொண்டார்கள் …மேலும் சகோதரியின் மூத்த மகளின் லீலைகளையும் அம்மா மற்றும் அக்காவால் பாதிக்கப்பட்ட பவித்ரா மற்றும் கேடுகெட்ட தர்ஷன் பற்றிய குறிப்புகளையும் தெரிந்து கொண்டார்கள்….
அவர்கள் இருவருக்கும் ஆத்திரத்தை அடக்குவது பெரிய விஷயமாக இருந்தது அந்த நிமிடமே இருவரும் கிளம்பிச் சென்று மூவரையும் கண்டந்துண்டமாக வெட்டி விட வேண்டும் என்று ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தார்கள்….
சிறிது நேரம் கழித்து கிருஷ்ணன் உள்ளே வந்தார் அவருடைய முகத்தை பார்க்கவே இருவருக்கும் கூசியது தங்கள் சகோதரி செய்த காரியத்தால் அவருடைய முகத்தில் விழிக்கவே கேவலமாக இருந்தது …இருவரும் தலையை தொங்க போட்டுக்கொண்டு மாமா அப்படி கூப்பிடுவதற்கு கூட எங்களுக்கு உரிமை உண்டா என்று தெரியவில்லை ஏனெனில் எங்கள் உடன்பிறந்த கேடு கெட்ட ஜென்மம் பண்ணிய காரியம் அப்படிப்பட்டது …எங்களை மன்னித்து விடுங்கள் என்று இருவரும் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து தந்தார்கள்…
கிருஷ்ணன் இருவரையும் தூக்கி தோளோடு அணைத்துக் கொண்டார் அவரும் குலுங்கி அழுதார் இருவரையும் அனைத்துக் கொண்டேன் நான் காதலித்து இரு வீட்டிலும் எதிர்ப்புகளுக்கு இடையே அவளைக் கரம் பிடித்தேன் …இவள் இப்படிப்பட்ட காரியத்தை செய்வாள் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை … அதுவும் இத்தனை வருடங்களாக எனக்கு தெரியாமல் மறைத்து வைப்பாள் என்று சத்தியமாக கனவில் கூட நினைக்கவில்லை …இரண்டு நாட்களுக்கு முன்பு வரை உறவு ரீதியாக கூட அவளை சந்தோஷமாக வைத்திருந்தேன் …
எனக்கு இப்படிப்பட்ட திரவத்தை செய்ய அவளுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை என்று அழுதுகொண்டே கூறினார்…
பிறகு மூவரும் தனித்தனியாக அமர்ந்து என்ன செய்யலாம் என்று கேட்டார் …அதற்கு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக மாமா நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மூவரையும் தீர்த்த கட்டி விடுகிறோம் எங்களுக்கு நீங்கள் எவ்வளவு உதவி செய்திருக்கிறீர்கள் உதவி செய்யாவிட்டாலும் அவள் செய்த பாவத்திற்கு சகோதரர்களாக நாங்கள் இந்த செயலை செய்து தான் ஆக வேண்டும்… அப்படி இருக்க நீங்கள் செய்த உதவிக்காக கண்டிப்பாக மூவரையும் நாங்கள் தீர்த்துக் கட்டி விடுகிறோம் …ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை எப்படியும் நாங்கள் வெளியே வந்து விடுவோம் என்று கூறினார்கள்…
அதற்கு கிருஷ்ணன் “பரவாயில்லை மூன்று பேரையும் வெட்டி விட்டு ஜெயிலுக்கு போனால் வரும் அவப்பெயரை உங்கள் குழந்தைகள் ஏன் சுமக்க வேண்டும் “அது மட்டுமில்லாமல் மூன்று பேரையும் வெட்டினால் ஏன் வெட்டினார்கள் என்ற காரணத்தை எப்படி கூறுவீர்கள் என்று யோசித்தீர்களா என்று கேட்டார் ….
