சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 75

அவள் உடையிலிருந்து இன்னும் மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ! கட்டில் மீது போட்டிருந்த துணிக் குவியலில் இருந்து ஒரு துண்டு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் நவநீதன்.
” மழை வருதில்ல.. எங்காவது நின்னு வந்துருக்கலாமில்ல. ?”

” எவ்ளோ நேரம் நிக்கறது ? மழைய பாரு.. இப்போதைக்கு விடாது போலருக்கு. !”

துண்டால் அழுத்தி அழுத்தி ஈரம் துடைத்தாள். தலையை துவட்டினாள். கூந்தலில் இருந்த பூவை எடுத்து ஜன்னல் மீது மெதுவாக வீசினாள். அது தவறி கீழே விழு.. நவநீதன் அதை எடுத்து ஜன்னல் மீது வைத்தான்.!!

நீளமாக முல்லை. ஒரு விரிந்த ரோஜா !! பூக்கள் இரண்டும் மழையில் நனைந்து எழுப்பிய அதன் நறுமணம்.. அவன் மனதை கொள்ளை கொண்டது. !! இப்போது அந்த பூவின் வாசணையை ஆழமாக முகர வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிச் செய்தால்.. அதையும் தப்பாக புரிந்து கொண்டு ஆங்கிலப் படத்தை குற்றம் சொல்லுவாள் கிருத்திகா !!

சூழ்நிலை கருதி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான்.!!

ஈரம் துடைத்த கிருத்திகா.. வெளிச்சம் இல்லாத அந்த அரையிருட்டிலும்.. பளிச்செனத் தெரிந்தாள். அவள் கழுத்துக்கு கீழே இருந்த விம்மலில் பாயும் அவன் விழிகளை மிகச் சிரமப்பட்டு திசை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன்.!!

மெதுவாக நகர்ந்து ஜன்னல் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தாள் கிருத்திகா. !
” செம்ம மழை.. இல்ல? துளி காத்துகூட இல்லாம நின்னு பெய்யுது. ! டிச்செல்லாம் பாரு.. எவ்ளோ சுத்தமா ஓடிட்டிருக்குனு..!”

அவள் பக்கத்தில் போய் நின்று.. சாக்கடை நீரை எட்டிப் பார்த்தான் நவநீதன். அவன் மனம் அங்கு போகவே இல்லை. அவன் நாசியில் ஏறிய அவளது ஈர வாசணையை நுகர்ந்து கிறங்கிக் கொண்டிருந்தது அவன் மனம்!

அவள் அணிந்திருக்கும் சுடிதார் புதுசு. அந்த புது உடை மழையில் நனைந்து எழுப்பிய மணம்.. அவளின் பருவப் பூ மேனி மணம்.. ஜன்னல் மீது வைத்த மழையில் நனைந்து பூக்களின் மணம்.. எல்லாமாக சேர்ந்து.. அவனை கனவுலகில் சஞ்சரிக்க வைத்துக் கொண்டிருந்தது !!

‘இஷ்க் ‘ என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். ” ரொம்ப நாள் ஆச்சு. இப்படி நல்லா நின்னு மழை பேஞ்சு. இந்த மழைல நனைஞ்சி விளையாட எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா ? இப்படியே போய்.. மறுபடி மழைல நனையனும் போலருக்கு.. ” என்று ஒரு வித கிறக்கத்தில் சிலாகித்துச் சொன்னாள் கிருத்திகா.

” ம்ம்.. நனைஞ்சப்பறம்.. வீட்டுக்குள்ள வர வேண்டாம். அப்படியே நேரா ஆஸ்பத்ரி போய்ட வேண்டியதுதான்.! பெட்ல போய் படுத்து….”

‘ பட் ‘ டென அவன் தோளில் அடித்தாள்.
” ச்சீ. போ. ! உனக்கெல்லாம் ரசனையே கிடையாது. !”

மீண்டும் சில நொடிகள் கழித்து மெதுவாக கேட்டான் நவநீதன்.
” சுடி புதுசா ?”

” ம்ம்ம்..!!!” அவன் முன் நேராக நின்றாள். ( ம்ம் இப்ப நல்லா பாத்துக்கோ நானே காட்றேன் )

” அளவு குடுத்து தெச்சேன்.. நல்லாருக்கா ?” எடுப்பாய் நிமிர்ந்து நிற்கும் அவள் தாமரையின் வடிவழகை பார்வையால் வருடினான்.

” ம்ம்.. சூப்பரா இருக்கு. அசத்தல்.. !!”

” நெக் டிசைன் நல்லாருக்கில்ல.. ??”

” ம்ம்.. !!” அவன் பார்வை தடுமாறியது.

” திட்ட மாட்டேன். நல்லா பாத்து சொல்லு. நான் உன் அத்த மகதான..? ஏன் இப்படி பயந்து பயந்து திருட்டு பார்வை பாக்கற… ?” அவள் மெல்லிய சிரிப்புடன் அவனைச் சீண்டினாள்.

நவநீதன் மெலிதாகப் புன்னகைத்தான்.
” இந்த பொண்ணுங்க மனச கெஸ் பண்ணவே முடியாது போலருக்கு.”

” ஹ்ஹா.. டென்ஷனாகிட்டியா நான் அப்படி சொன்னதுக்கு…?”

” ம்கூம்.. !”

” ஆனா எனக்கு கோபம் வந்துச்சு. நீ என்னை அப்படி பாத்ததுல.. ”

” ஸாரி. ”

” இனிமே அப்படி வெறிச்சு பாக்காத அறைஞ்சாலும் அறைஞ்சிருவேன்.!”

” ம்ம்.. !!”

” எனக்கு அப்படி பாத்தா மசக் கடுப்பாகுது தெரியுமா ?”

” சரி விடு.. பாக்கல. !! ஆமா ஜீன்ஸ் போடலியா ?”

” ஸாரி.. கோச்சுக்காத.. அத போட எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு. கம்பெனிக்கு அத போட்டுட்டு போயிருந்தா.. எல்லாரும் என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டியே.. அழ வெச்சிருப்பாங்க. அதான் போடல.. ” அவன் கை பிடித்து அவள் சமாதானம் சொல்ல.. அவளது கையின் குளிர்ச்சியில் அவன் சிலிர்த்துக் கொண்டான்.

” ம்ம்.. பரலால்ல.. ”

” சரி.. இப்ப போட்டு காட்டட்டுமா ?நீ மட்டும் பாரு.. ஓகே வா.. ??”

வெளியே நல்ல மழை. அந்த மழையில் நனைந்து வரும் ஈரக் காற்றின் குளிர்ச்சியை விட.. கிருத்திகா சொன்னது இன்னும் அதிகமான குளர்ச்சியைக் கொடுத்தது நவநீதனுக்கு. உள்ளமும்.. உடலும் இன்பச் சிலிப்பில் நெகிழ.. கண்களில் பொங்கிய காதலை அடக்க முடியாமல் நெகிழ்ந்த குரலில் மெதுவாகக் கேட்டான்.
” எனக்கு மட்டும் ஸ்பெஷலா போட்டு காட்ட போறியா ?”

” ம்ம்ம்.. ஏன்.. ?” மெல்லிய புன் சிரிப்புடன் அவனையை பார்த்தாள்.

”நான் மட்டும் பாத்தா போதுமா?”

” என் பர்த்டேக்குனு நீ வேற ரொம்ப ஆசையா கிப்ட் பண்ணிருக்க. இப்ப நான் அத போட்டுட்டு வெளில போகலேன்னாலும் உனக்காச்சும் போட்டு காட்னாத்தான உனக்கு சந்தோசமா இருக்கும் ??” என்று மெல்லிய புன்னகையுடன் சொல்லி விட்டு சர்ரென மூக்கை உறிஞ்சியபடி ஜன்னல் பக்கத்தில் இருந்து நகர்ந்து போனாள். !!