” அப்ப எங்கண்ணன் பண்ணது சரிங்கறியா ?”
” எருமை. உனக்குனு வரப்ப எப்படி மாத்தி யோசிக்கற பாரு.? வெவரமான ஆளுடி நீ..”
” என்னடீ சொல்ற.. ? சொல்றத புரியற மாதிரி சொல்லித் தொலை. எதையும் யோசிக்கற நிலமைல நான் இல்லை. எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு. எங்க போய் முட்டிட்டு சாகலாமோனு இருக்கு..! நீ ஒரு பக்கம் தர்ம நாயம் பேசி என்னை சாகடிக்காத..”
” தங்கச்சியோட பிரெண்டு மாதிரிதான். பிரெண்டோட தங்கச்சியும். உன் அண்ணன் பண்ணது தப்புன்னா நீ பண்ணதும் அதே தப்புதான். நீ பண்ணது சரின்னா.. உன் அண்ணன் என்னை தாராளமா லவ் பண்ணலாம்.! இதுதான் நான் சொல்ற லாஜிக் ”
” மயிறு.! மூஞ்சியும் மொகறையும் பாரு..! பெருசா பேச வந்துட்டா ! போ.. அவன்லாம் ஒரு ஆளுனு.. அவனை போய் லவ் பண்ணி சாகு போ.! நாசமா போனவளே..!”
” ஏய் நான் உன் அண்ணனை லவ் பண்றேனு சொல்லலடி. அதை உதாரணத்துக்கு சொன்னேன்.”
” நீ என்னமோ பண்ணி நாசமா போ.!! இப்ப என்ன.. நான் லவ் பண்றது தப்புங்கற..?”
” ஆமா ”
சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின் ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டுச் சொன்னாள்.
” ம். புரியுதுடி. ஆனா அதை ஏத்துக்கத்தான் முடியல.”
” அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது”
” எனக்கு இன்னொரு டவுட்றீ ”
” என்ன டவுட்டு ?”
” என்னை லவ் பண்ணாட்டி பரவால்ல. வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருப்பானோ ?”
”சொல்ல முடியாது. திருப்பூர்ல ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் ”
” கேட்டு பாக்கறது ?”
” சொல்லுவாப்லயா ?”
”நாம கேட்டா சொல்ல மாட்டான். அன்பை கேட்டா தெரியும். ”
” கேட்டு பாரு ”
” நான் கேட்டா இவன் கண்டிப்பா சொல்ல மாட்டான். அதில்லாம நாங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி பேசிக்கவே மாட்டோம் ”
” அப்பறம் என்ன பண்றது ?”
” நீ கேளு. ! அன்பு உன்கிட்ட கொஞ்சம் வழிவான் !”
” யேய்..”
” என்னடி யேய்..?”
” யேய்.. என்னை ஏன்டி வம்புக்கு இழுக்கற..?”
” கேப்பியா மாட்டியா..?”
” ஆமாடி. கடைசில நீ அதுக்கும் என்னைத்தான் திட்டுவ. தேவடியா அவளே இவளேனு. எனக்கு எதுக்கு வம்பு ”
” பாத்தியா ? அது கோபத்துல திட்னதுடி. சரி. இனி திட்ட மாட்டேன். நீ அன்பை லவ் பண்ணாலும் சரி. இல்ல.. வேண்டாம். நீ என்னமோ பண்ணி தொலை. எனக்கு என் பிரச்சினைக்கு ஏதாவது வழி இருக்கானு பாக்கனும். அன்பை கேளு. எனக்காக.”
” ம்.. கேட்டு தொலைக்கறேன். ஆனா நான் ஒரு தடவ கேட்டப்ப.. அதெல்லாம் இல்லேன்னுதான் சொன்னாப்ல”
” என்கிட்டயும் அப்படித்தான் சொன்னான். நாம என்ன அவ்வளவு க்ளோசா..? நம்மகிட்ட சொல்றதுக்கு. நீ அன்புகிட்ட கேளு.. அந்த தறுதலைக்கு தெரிஞ்சிருக்கும் ”
” ம்.. ” என்றாள் பிரமிளா.
நவநீதனை தன் பக்கம் இழுக்க என்ன வழி இருக்கிறது என்று தீவிரமாக யோசித்து மண்டையை சூடாக்கிக் கொண்டிருந்தாள் திவ்யா..!!!
வேலை முடிந்து வெளியே வந்ததும் நவநீதனைக் கேட்டான் அன்பு.
” தண்ணி அடிப்பமா நாண்பா ?”
” தண்ணியா..? என்னடா திடீர்னு.?” நவநீதன் மெல்லிய குழப்பத்துடன் கேட்டான்.
” திடீர்னெல்லாம் இல்லடா. ஒரே டென்ஷனா இருக்கு. பயங்கர பிரஷ்ஷர்டா வொர்க்கு..! நேரா பாருக்கு போய்டலாமா ?”
” இல்லடா.. எனக்கு வேண்டாம் ”
” ஏன்டா பணம் இல்லையா.? நான் போட்டுக்கறேன்டா..”
” அதில்லடா.. இனிமே உங்ககூட சேந்து தண்ணியடிக்கவே கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன்.” என்றான் நவநீதன்.
அன்பு சத்தமாக வாய் விட்டுச் சிரித்தான்.
” இவ்வளவதானா..? நல்ல ஆளுடா..! சரி.. சரி நான் பாத்துக்கறேன்.!”
” நீ வேணா போய் அடிச்சிட்டு வாடா. நான் வேன்ல போய்க்கறேன்.”
” டேய்.. உக்கார்ரா மூடிட்டு..! பார்ல அடிக்க வேண்டாம். வாங்கிட்டு நம்ம ஏரியாக்கே போய்டலாம்..”
” டேய்.. எனக்கு வேணாண்டா. சொன்னா கேளு..”
” அத அப்பறம் பாத்துக்கலாம் வாடா..”
தண்ணி அடிக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான் நவநீதன். அதேபோல கடைக்குப் போய் சரக்கு வாங்கும் போதும் நவநீதன் மறுத்து விட்டான். ! அவனை ரொம்ப கம்பல் பண்ண விரும்பாத அன்பு அவனுக்கு மட்டும் வாங்கிக் கொண்டான்.! ஒரு பாட்டில் ரம் வாங்கி.. மிக்ஸிங் பண்ண பெப்சி ஒன்றை வாங்கினான் அன்பு. !!!
இருட்டி விட்டது. வீட்டில் அன்பு மட்டும்தான் இருந்தான். அவன் தங்கை திவ்யா இல்லை. அன்பு தனியாக வீட்டில் உட்கார்ந்து.. டிவியை சத்தமாக வைத்து விட்டு.. பெப்சி பாட்டிலில் ரம்மைக் கலந்து குடித்துக் கொண்டிருந்தான்.
பிரமிளா வந்தாள். ஒரு டைட்டான சுடிதார் போட்டிருந்தாள்.
” வாடி பல்லி ” என்று சிரித்தான் அன்பு.
“எரும.. என்னடா பண்ற?” அவளும் சிரித்தாள்.
“பாத்தா எப்படி தெரியுது?”
” எங்கடா.. அவ இல்லையா ?”
” எவடீ ?”
” உன் தங்கச்சிடா.. திவ்யா ?”
” அந்த சனியன் எங்க போனாளோ.? அவ உன்னை பாக்கத்தான்டி வருவா.? அவளோட பிரெண்டே நீதான..?”
அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அவன் முன்பாக இருந்தவைகளை எல்லாம் பார்வையிட்டாள். பாதி பெப்சி பாட்டிலை பார்த்ததும் அவளது தொண்டை தவிக்கத் தொடங்கி விட்டது.
” என்னடா கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி வெச்சு குடிச்சிட்டு இருக்க..?”
” ஆமாடி. குடிக்கனும் போலருந்துச்சு. வாங்கினேன். ரொம்ப குடிக்க முடியல. ஒரு மாதிரி.. புளிச்ச ஏப்பம் வருது. உக்கார்ரீ..!”
” பரவால்ல நிக்கறேன். திவ்யா எங்க போனானு தெரியலையா ?”
” நான் வரப்ப இருந்தா. அப்பறம்தான் காணம். உன்ன பாக்க வரலியா ?”
” இல்லைடா. சரி.. என் பணம் என்னாச்சு ?”
” ஓ.. உனக்கு பணம் வேற தரனும் இல்ல? ” என்று சிரித்தான்.
” பாத்தியா. உன் புத்தியை காட்டிட்ட? ”
” அட லூசே. தரேன்டி. இப்ப ஆயிரம் இருக்கு. மீதி சம்பளம் வாங்கி தரேன். இந்தா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சு கொதிக்கற வயித்த கொஞ்சம் கூல் பண்ணு..” என்று பெப்சி பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
சிரித்துக் கொண்டே எதார்த்தமாக பெப்சியை வாங்கினாள் பிரமிளா.
” எல்லாமே குடிச்சிக்கவாடா ?”
” ம்ம்ம்.. உனக்கு புடிச்சா குடிச்சிக்கோ. அந்த டேஸ்ட் எனக்கு சுத்தமா புடிக்கல..”
பிரமிளா குடித்தாள். அன்பு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சில் கை வைத்தபடி குடித்து வாயை எடுத்தாள்.
” சுரு சுருனு இருக்குடா. செம காட்டு..!”
Wast story please stop it