சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 6 104

“ஏன் மாமா”

“ம்?”

” அக்கா போன் எதுவும் பண்ணலையா உனக்கு ?”

” அக்காவா? எந்த அக்காடி ?”

”கிருத்திகக்கா ?”

” ஓ.. அவளா.? ம்கூம். போன் எதுவும் பண்ணல. ஆமா நீ ஏன் தேவை இல்லாம அவளை பத்தியே கேட்டுட்டு இருக்க…?”

” ஏன் மாமா. அவ எனக்கு அக்காதான . நான் கேட்டா என்ன தப்பு. ?”

நவநீதன் பேசவில்லை. அவனுக்கு கிருத்திகாவின் நினைவு வந்து சட்டென அவன் மனதைத் தாக்கிப் போனது. ஒரு பக்கம் அவளை பார்க்க வேண்டும் போலகூட இருந்தது.
‘எப்படி இருக்கிறாளோ?’

” மாமா ” மெதுவாக அழைத்தாள் கவிதா.

” ம் ?”

” கோபமாகிட்டியா ?”

” ஏன் ?”

” பேச மாட்டேங்குற? ”

”தூங்கலாண்டி ”

” அக்கா பத்தி இனி பேச வேண்டாமா ?”

” நீ பேச வேண்டாம் ”

”ஏன் மாமா. நான் பேசினா என்ன. ?”

” நீ பேசினா எனக்கு அவ நினைப்பு வரும் ”

” வந்தா.. ?”

”உன்ன தூக்கி போட்டு ஒதைக்கனும்னு தோணும்.. ”

கவிதா சிரித்தாள். ”சரி பேசல.”

அவன் ”குட்நைட் ”சொல்லி புரண்டு படுத்தான்.

அவள் ”ஸ்வீட் ட்ரீம்ஸ் மாமா ” சொன்னாள்.!!!

கண்களை மூடிய நவநீதனுக்கு கிருத்திகாவின் நினைவு இன்னும் அதிகமாக வந்தது. அவன் கண்களை மூடி தூங்கத்தான் முயன்றான். ஆனால் கிருத்திகாவின் நினைவுகள் அதிகமாகி அவன் மனதைக் கொஞ்சம் வதைத்தது. அவளின் அழகு முகம் அடிக்கடி வந்து அவனை ஏங்கச் செய்தது.

தூக்கம் பிடிக்காமல் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான். கிருத்திகாவின் நினைவில் இருந்து அவன் மீள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே உணர்ந்தான்.
‘ச்ச அவள போய் எதுக்கு இந்த அளவுக்கு நேசிச்சு தொலைச்சோம் !’ என்று மனதுக்குள்ளேயே வருத்தப் பட்டான்.

கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து அவன் எழுந்து பாத்ரூம் போய் வந்தபோது கவிதாவும் தூங்காமல் இருந்தாள். அவனைப் பார்த்து விட்டு
”ஏன் மாமா. இன்னும் தூங்கலையா ?” என்று கேட்டாள்.

” ம். ஏன்டி நீ தூங்கல. ?”

” இல்ல மாமா. எனக்கும் தூக்கமே வர மாட்டேங்குது ”

” உன்னாலதான்டி எனக்கும் இப்ப தூக்கம் போச்சு ”

” நான் என்ன மாமா பண்ணேன்.?”

1 Comment

  1. Look like family subject. Nice

Comments are closed.