சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 6 104

” ம்..” என முனகினான்.

” சாப்பிடலியா..?”

” ம்கூம். ”

” ஏன் மாமா.. இப்படி படுத்துருக்குற..? என்னாச்சு..?”

” கொஞ்சம் இங்க வா..” என்றான்.

அவன் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து உடனே சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தாள்.
” என்ன மாமா ?”

” மூவோ.. ஐயோடெக்ஸோ ஏதாவது இருக்கா.?”

” மூவு இருக்கும் மாமா.. ஏன் மாமா.?”

” சொல்றேன். எடுத்துட்டு வா.! யாரையும் எழுப்பி விட்றாத.”

அவள் ஏதோ நினைத்து பயந்து விட்டாள். உடனே அவள் வீட்டுக்கு ஓடிப்போய் மூவ் எடுத்து வந்தாள்.

” கதவ நல்லா சாத்திட்டு லைட் போடு” என்றான்.

கவிதா கதவைச் சாத்தியபின் லைட்டைப் போட்டாள். நவநீதன் விலாவைக் காட்டினான்.
” இங்க கொஞ்சம் அடி பட்றுச்சு. தேச்சு விடு வா..”

உடனே கட்டிலுக்கு கீழே மண்டியிட்டு உட்கார்ந்தாள்.
” எப்படி ஆச்சு மாமா..? ஐயோ.. இப்படி வீங்கிருக்கு..?”

” ம்.. மெதுவா தேய். கல்லு மேல விழுந்துட்டேன்..”

கவிதா அவனிடம் இருந்து வந்த பீர் வாசணையை முகர்ந்தாள். அவனுக்கு மூவை மெதுவாக தேய்த்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

” ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கியா மாமா ?”

” ஆமாடி..”

” மட்டையாகி விழுந்துட்டியா ?”

” ம்.. !!”

” அய்யோ.. மாமா.. !” எனச் சிரித்தாள்.
நவநீதன் சொன்ன விதமாகவெல்லாம்.. சொன்ன இடத்தில் எல்லாம் மூவ் தேய்த்து விட்டாள் கவிதா.

” சாப்பிட்டு படுத்துக்கோ மாமா..”

” வேணாண்டி..”

” ஏன் மாமா..? அத்தை என்கிட்ட சொல்லிட்டுதான் தூங்குச்சு..”

” பரவால்ல படுத்துக்கோ. என்னால இப்ப உக்காந்து சாப்பிட முடியாது. ”

” ரொம்ப வலிக்குதா மாமா..?”

”ம்.. ரொம்ப இல்ல…..”

” சரி.. நான் போட்டு ஊட்டி விடட்டுமா மாமா..?”

” என்னடி.. திடீர்னு பாசம்..?”

” திடீர்னெல்லாம் இல்ல..? நீ லேசா எந்திரிச்சு சாஞ்சு உக்காரு. நான் உனக்கு சோறு போட்டு ஊட்டி விடறேன்..” எனச் சொன்ன கவிதா எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்தாள்…!!!

நவநீதன் மெதுவாக எழுந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான். இடுப்பில் லி மின்னலாய் ஊடுருவிப் போனது. பல்லைக் கடித்து வலியைப் பொறுத்தான். கால்களை நீட்டி உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஒரு தட்டில் உணவைப் போட்டு எடுத்துக் கொண்டு தண்ணீருடன் அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் கவிதா.

“மாமா..”

அவன் பேசவில்லை. கண்களைத் திறந்து அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தான்.

“கஷ்டமாருக்கா?” உண்மையான வருத்தத்துடன் கேட்டாள்.

தலையை ஆட்டி மெல்லப் புன்னகைத்தான். அவள் உணவைப் பிசைந்து எடுத்து அவன் வாயருகே கொண்டு வாந்தாள்.
“ஆ காட்டு மாமா”

வாயைத் திறந்து உணவை வாங்கினான். இரண்டு கவளம் சாப்பிட்ட பிறகு
“ஸாரிடி” என்றான்.

1 Comment

  1. Look like family subject. Nice

Comments are closed.