விலாவில் தாக்கிய இடி மின்னலில் துவண்டு போனான் நவநீதன். இடுப்பைப் பிடித்துக் கொண்டு..
”ப்ப்ப்பா..!!!” என முனகி.. பல்லைக் கடித்தபடி.. அப்படியே மடங்கி உட்கார்ந்து விட்டான்.
இதைப் பார்த்த அன்பு.. பிரேம் அடுத்த கல்லை எடுப்பதற்கு முன்னால் அவனை நோக்கிப் பாய்ந்தான். மீண்டும் அவர்கள் கட்டிப்பிடித்து புரள… நல்ல வேளையாக எங்கிருந்தோ வந்த இரண்டு பேர்.. ஓடி வந்து அவர்களைப் பிரித்தார்கள். !!!
அதே ஊர் பையன்கள்தான். காட்டுப் பக்கம் ஒதுங்க வந்தவன்கள்.. இவர்களின் சண்டையை விலக்கி.. பிரேமை கையோடு அழைத்துப் போனார்கள்.
அன்புவின் மொபைல் எங்கோ விழுந்து விட்டது. அவன் மொபைலை தேடி.. நவநீதன் மொபைலில் இருந்து ரிங் விட்டு கண்டுபிடித்து எடுத்துக் கொண்ட பின்.. நவநீதனைக் கேட்டான் அன்பு.
” உனக்கு எப்படிடா இருக்கு.?”
” தெரியலடா. வீட்ல போய் பாத்தாதான் தெரியும்.” முனகினான்.
” எங்க காட்டு ?”
மொபைல் டார்ச் அடித்துப் பார்த்தான் அன்பு. காயம் இல்லை. ஆனால் கொஞ்சம் புடைத்து வீங்கியிருந்தது. எழும்பில் அடி சரியாகப் படவில்லை என்கிற அளவில் ஒரு நிம்மதி..!!
அன்புவுக்கும் நிறைய அடி பட்டிருந்தது. நவநீதன் இப்போது எதுவும் பேசும் நிலையில் இல்லை என்பதால்.. அன்புவை அதிகம் திட்டவில்லை! ஆனாலும்..
” சத்தியமாடா இனி உங்க கூட சேந்து தண்ணியே அடிக்க மாட்டேன்டா..” என்றான்.
” டேய். நான் என்னடா பண்றது. நீயே பாத்த இல்ல.. அவன்தான்டா மொதல்ல ஆரம்பிச்சான். என் மேல ஏதாவது தப்புன்னா சொல்லு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் உன்கிட்ட..?”
” என்கிட்ட கேட்டு மயிரா ஆகப் போகுது..? எடைல தடுக்க வந்த பாவத்துக்கு என் இடுப்ப ஓடச்சிட்டிங்களேடா..? எங்கம்மாக்கு தெரிஞ்சா.. திட்ட முடியாம அழுகுன்டா.. பாவிகளா..”
” ஸாரிடா.. நான் வேணா உங்கம்மா கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் நட. ஆஸ்பத்ரி போகனுமாடா..?”
” வேணாண்டா நடக்க முடியுது. கஷ்டம்னா காலைல பாத்துக்கலாம். ”
” நான் எப்படி நைட் தூங்க போறேனு தெரியலைடா. கொட்டையவெல்லாம் புடிச்சு நசுக்கிட்டாண்டா..! அவன் ஏதோ பிளானோடதான்டா இன்னிக்கு என்னை சரக்கடிக்க கூப்பிட்டுருக்கான்..”
” ஒருத்தனுக்கொருத்தன் வெட்டிட்டு சாகாம போனிங்களே.. அதுவரைக்கும் சந்தோசம்டா சாமிகளா.. இந்த பொழப்பே இனி ஆகாதுடா.. ” என்றான் நவநீதன்..!!!
“ஸாரிடா.. அடிச்ச மப்பே சுத்தமா எறங்கிப் போச்சுடா..” என்ற அன்பு மெல்லக் கேட்டான். “இன்னொரு கட்டிங் அடிக்கலாமாடா?”
“இன்னொரு கட்டிங்கா?”
“முடியாதுடா.. இப்படியே போய் படுத்து தூங்க முடியாது. எனக்கு கொட்டை வலிக்குது”
“அங்க என்னடா பண்ணான்”
“பொட்ட பையன் மாதிரி அதை புடிச்சு கசக்கி விட்டுட்டான்டா.. வா.. போய் ஆளுக்கு ஒரு கட்டிங் அடிக்கலாம்” என்று அன்பு அழைத்தான்.
நவநீதனுக்கும் கடுமையான வலி இருந்தது. முதலில் மறுத்தாலும் பின்னர் அன்புவுடன் கிளம்பி விட்டான். இருவரும் நேராக பாருக்குப் போனார்கள்..!
நவநீதனின் வீட்டுக்குத் திரும்பியபோது மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது. அவன் அம்மா தூங்கியிருந்தாள்.
” எங்கம்மா தூங்கிருச்சுடா நீ போ.. பாத்து போடா..” என அன்பை அனுப்பி விட்டு.. அவன் பைக்கைக் கிளப்பிப் போனதும் மெதுவாக நடந்து வீட்டுக்குள் போனான் நவநீதன்.
கவிதா பாயில் சுருண்டு படுத்திருந்தாள். டிவி ஆப் ஆகியிருந்தது. லைட்டைக் கூட போடாமல்.. மிகவும் மெதுவாக நடந்து போய் கட்டிலில் படுக்க முயன்றான். வலித்தது. சரிந்து படுக்க முடியாமல் தொப்பென விழுந்தான்.
அவன் விழுந்த சத்தம் கேட்டு விசுக்கென திரும்பிப் பார்த்தாள் கவிதா.!
நவநீதன் மெதுவாக அசைந்து..
” அம்ம்ம்மா..” என முனகிக் கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.
அவனால் அசையக்கூட முடியாத அளவுக்கு வலித்தது. மூவோ.. ஐயோடெக்ஸோ.. ஏதாவது ஒன்றை தேய்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவன் தலையணை மீது கூட தலையை வைக்காமல் கோணாலாக படுத்துக் கிடப்பதைப் பார்த்து.. பட்டென எழுந்து விட்டாள் கவிதா.
” மாமா.” என மெல்ல அழைத்தாள்.
அவன் பேசவில்லை.
” மாமா..” என இப்போது கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்.
Look like family subject. Nice