“அட.. இல்ல கவி. அவ பொய் சொல்றா”
“யேய்.. இல்லடி. அவன்தான் பொய் சொல்றான். நான் பாத்தேன். உன்னை படம் புடிச்சதை” என்று சரண்யா சொல்ல.. எழுந்து போன வேகத்தில் அவன் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கினாள் கவிதா.
“ஒடச்சிருவேன். மரியாதையா உண்மைய சொல்லு?” என்று கையை ஓங்கினாள்.
“ஏய்.. அப்படி எதுவும் பண்ணிடாத” பதறி எழுந்து அவள் கையைப் பிடிக்க வந்தான்.
கையை பின்னால் கொண்டு போய் மறைத்தாள் கவிதா.
“அப்ப சொல்லு என்னை போட்டோ எடுத்ததான?”
“ஆ.. ஆமா.. நீ அழகாருந்த. அதான்.. உனக்கு சொல்லாம… சொன்னா நீ போட்டோ எடுக்க ஒத்துக்க மாட்டேனு..”
“அப்ப காட்டு என்கிட்ட.. நான் பாக்கணும்”
“சரி குடு காட்றேன்” என்று போனை வாங்கினான். “என்னை திட்டக் கூடாது ” என்று விட்டு அவளை போட்டோ பிடித்ததைக் காட்டினான். இரண்டு போட்டோ ஒரு வீடியோ. அந்த வீடியோவிலும் அவள் அழகாய் இருப்பதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.
அண்ணன், தங்கை, கவிதா என மூன்று பேரும் சேர்ந்து ஆவலாக அவன் எடுத்த போட்டோ, வீடியோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து விட்டு அவர்களிடம் போனான் அந்த வழியாக வந்து கொண்டிருந்த நவநீதன். அவனை அவர்கள் மூன்று பேருமே கவனிக்கவில்லை. அருகில் போனதும்தான் சரண்யா அவனைப் பார்த்து திகைத்தாள். சட்டென்று கவிதாவின் கையைப் பிடித்தாள். போன் கவிதாவின் கையில் இருந்தது.
“ஏய்.. உங்க மாமாடி”
நவநீதனப் பார்த்த கவிதா திடுக்கிட்டாள்.
“என்ன பாக்கற அப்படி?” இயல்பாக சிரித்தபடி கேட்டான்.
சட்டென்று போனை பின்னால் கொண்டு போய் மறைத்தாள்.
“ஒண்ணுல்ல” அவள் முகத்தில் ஒரு கலவரம் தோன்றியது.
அவனுக்கு சந்தேகம் வந்தது.
“அப்ப ஏன் மறைக்கற? காட்டு பாக்கலாம்”
கவிதா பயந்து போய் உடனே போனை சரண்யாவின் அண்ணனிடம் கொடுத்து விட்டாள்.
சரண்யாவின் வாய் அடங்கவில்லை.
“இவன் அவளை வீடியோ எடுத்துருக்கான்” என்று ஆர்வக் கோளாறில் உளறி விட்டாள்.
அவள் அண்ணன் முகத்தில் அதிர்ச்சி. கவிதா முகத்தில் கலவரம். அவன் கையில் இருந்த போனை புடுங்கினான் நவநீதன்.
“குடுறா”
“இ… இல்லண்ணா..” பயந்து விட்டான் பையன்.
கவிதாவை முறைத்துப் பார்த்து விட்டு வீடியோவைப் பார்த்தான் நவநீதன். மெமரியில் அதிகமான படங்கள் இல்லை என்பது நிம்மதியளித்தது. அதில் தேடி கவிதாவின் போட்டோக்களையும் அவளை அவன் எடுத்த வீடியோவையும் பார்த்தான். கவிதாவை சாதாரணமாக இல்லாமல் அவள் உடலின் அங்கங்களை குறி வைத்து படம் எடுத்திருந்தான் பையன். நவநீதனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. போனைக் காட்டி கவிதாவைக் கேட்டான்.
“என்னடி இது?”
அவள் கண்களில் பயம் தோன்றியது. திரும்பி பையனை முறைத்தான். அவன் முகத்திலும் பயம் அப்பியிருந்தது.
‘நாமதான் அவசரப் பட்டு போட்டுக் குடுத்துட்டோமோ?’என்று இப்போது யோசித்துக் கொண்டிருந்தாள் சரண்யா.
உடனே அந்த படங்களை டிலேட் செய்தான் நவநீதன்.
“இங்க வா” கவிதாவை அழைத்தான்.
பயத்துடன் அருகில் வந்தவளின் கன்னத்தில் ஓங்கி பளீரென ஒரு அறை விட்டான். அவள் கன்னம் சிவந்து போனது. உடனடியாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“போடி வீட்டுக்கு” என்று மிரட்டினான்.
கன்னத்தைப் பிடித்தபடி அழுதுகொண்டே வேகமாக ஓடினாள் கவிதா.
பையனைப் பார்த்தான்.
“என்ன காரியம்டா பண்ணியிருக்க நீ.? படிக்கற பையன்தான? இன்னொரு தடவை இந்த மாதிரி பாத்தேன்.. தொலைச்சிருவேன் தொலைச்சு” என்று மிரட்டினான்.
அவனும் பயந்து போய்த்தானிருந்தான். சரண்யாவைப் பார்த்தான் நவநீதன்.
“போனு யாரு வாங்கித் தந்தது இவனுக்கு?”
“எங்கம்மா” முனகினாள்.
“இனிமே இதை இவன் கைல குடுக்க வேண்டாம்னு சொல்லிரு. பேரை கெடுத்துருவான்” என்று போனை அவள் கையில் கொடுத்தான். “அப்பப்போ இதை நீ செக் பண்ணி பாரு”
கை நடுங்க போனை வாங்கினாள் சரண்யா. இத்தனை பிரச்சினைக்கும் நான்தான் காரணமோ? தன் அண்ணனை கவலையுடன் பார்த்தாள்.
வீட்டுக்குப் போனான் நவநீதன். அத்தை அப்போதுதான் ஆடுகளை ஓட்டி வந்திருந்தாள். ஆடுகளை பிடித்து கயிற்றில் கட்டிக் கொண்டிருந்தாள். அமுதாவையும், பையனையும் காணவில்லை. ஆட்டுச் சாலைக்குள் இருந்து துள்ளிக் குதித்தபடி வெளியே ஓடி வந்த ஆட்டுக் குட்டியைப் பார்த்து..
“அதை புடிச்சிட்டு வா சாமி” என்றாள் அத்தை.
அதை குறுக்காட்டி எட்டிப் பிடித்தான். மிரண்டு போய் ‘மேமேமே..’ என்று கத்தியது. உள்ளே கொண்டு போய் கட்டி வைத்த பின் கதவருகே போய் நின்று வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். கவிதா கட்டிலில் குப்புறப் படுத்திருந்தாள்.
“கவி.. இங்க வா” எனக் கூப்பிட்டான்.
அவள் அசையக்கூட இல்லை. ஆடுகளை கட்டி வைத்த பின் அத்தையும் அவளை அழைத்தாள்.
“எந்திரிச்சு வாடி”
அப்போதும் கவிதா எழவில்லை. அத்தையே உள்ளே போனாள்.
“காபி தூள் இல்ல. போய் வாங்கிட்டு வா”
“சர்ர்”ரென மூக்கை உறிஞ்சினாள் கவிதா.
“ஏன்டி.. என்னாச்சு? ” எனக் கேட்டாள் அத்தை.
கவிதாவுக்கு இப்போது மீண்டும் அழுகை வந்து விட்டது. அவள் அழுவதைப் பார்த்து அத்தை கலவர முகத்துடன் கேட்டாள்.
“ஏன்டி என்னாச்சு.. இப்ப ஏன் அழற?”
“அவள நான் அடிச்சிட்டேன்த்த” என்றான் நவநீதன்.
ரொம்ப மொக்கை கதை. Please stop it.