சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 5 53

” நீ பேசுடி ”

பச்சை புள்ளியை நகர்த்தி.. காதில் வைத்தாள் கவிதா.
”ஹலோ ?” எதிர்முனை பேச.. ” அக்கா நான் கவி.. ம்ம்.. நான் நல்லாருக்கேன்க்கா.. நீங்க நல்லாருக்கிங்களா..? சித்தி.. ? ம்ம்ம்ம்.. எல்லாம் நல்லாருக்கோம்..! மாமாவா ? மாமா.. எங்கயோ போச்சுக்கா.. சார்ஜ் போட்டுட்டு..” என தொடர்ந்து கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினாள். அப்பறம் ”சரிக்கா மாமா வந்ததும் சொல்றேன். நாளைக்கு நீயே பண்றியா.? ம்ம் சரிக்கா.. ஆமாக்கா.. குட்நைட்க்கா..” என முடித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த நவநீதன் ஒரு பெருமூச்சுடன் கேட்டான்.
” என்ன சொன்னா ?”

” பாவம் மாமா.. நீயே பேசியிருக்கலாம்..” என்றாள் கவிதா.

” எனக்கு அவ கூட பேச புடிக்கல. சரி எதுக்கு போன் பண்ணாளாம் ?”

” சும்மாதான் மாமா. உன்கூட பேசனும்னு பண்ணியிருக்கு. நாளைக்கு பண்ணி உன் கூட பேசறேன்னுச்சு.. ”

” ம்.. பரவால்ல. நீ கூட போன்ல நல்லாவே பேசி சமாளிச்ச.. ” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

போனை கீழே வைத்தாள்.
”ஏன் மாமா பேச புடிக்கல.. ?”

” ப்ச்.. புடிக்கல”

” கோபமா அக்கா மேல? ”

” தெரியல. ”

” பொய் சொல்லாத மாமா. கோபம்தான்..”

” சரி. அத விடு. நீ போய் தூங்கு போ.”

” ஏன் மாமா. உனக்கு தூக்கம் வருதா ?”

” மணி பதிணொண்ணுக்கு மேல ஆச்சுடி. ?”

” ம்.. நாளைக்கும் நான் லீவுதான். ”

” அதனால தூங்க மாட்டியா ?”

” தூங்குவேன் ” சிரித்து ”நீ இன்னும் அவளை மனசுக்குள்ளயே வெச்சிட்டு இருக்கியா ?”

” எவளை ?”

” கிருத்திய. ?”

கவிதாவை உற்றுப் பார்த்தான். அவள் கேட்டது சரிதான். கிருத்திகா இன்னும் அவன் மனதைவிட்டு முழுசாக நீங்கவில்லைதான். ஆனால் அது இவளுக்கு தேவை இல்லாதது.!
” நீ போய் படுத்து தூங்குடி.” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

”மாமா.. நான் இன்னைக்கு கட்டல்லயே படுத்துக்கட்டுமா ?” எனக் கேட்டாள்.

” கட்டல்லயா..? என்ன விளையாடறியா..?”

” இல்ல..!” எனச் சிரித்தபடி படுத்து விட்டாள். அவனுடன் உரசிக் கொண்டு படுத்தவள் மெதுவாகச் சொன்னாள்.
”இந்த டூர்ல மட்டும் என் கூட நீ இருந்திருந்தா.. நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்திருப்பேன்..”

” என்ன.?” அவளை லேசான திகைப்புடன் பார்த்தான்.

” ம்.. ஆமா மாமா.. இந்த டூரு பூரா எனக்கு உன் நினைப்பாவே இருந்துச்சு. ஒவ்வொரு இடத்துலயும் நீ என் கூடவே இருக்கற மாதிரி இருந்துச்சு..!”

” யேய்.. லூசு..! என்னடி சொல்ற..?”

” ஆமா மாமா.. எனக்கு நான் தனியா போன பீலிங்கே இல்ல. எல்லா எடத்துலயும் நீ என் கூடவே இருந்த மாதிரிதான் இருந்துச்சு..”

நவநீதன் அவளையே பார்த்தான். அவள் விளையாட்டுக்கு அப்படி சொல்லவில்லை என்று தெரிந்தது. அப்படி என்றால் இவள் என்னை காதலிக்கிறாளா..?
” ஏன்டி இப்படி பேசற.. ?”

” ஏன் மாமா ?”

” நீ என்ன சொல்லிட்டு இருந்த..?”

” என்ன சொல்லிட்டு இருந்தேன்.?”

” நான் லவ்வே பண்ண மாட்டேன். படிக்கனும். அப்பா அம்மா பாக்கற மாப்பிள்ளையை கட்டிட்டு வாழனும்னு எல்லாம் சொல்லல..?”

” ம்.. ஆமா சொன்னேன். ”

” அப்பறம்.. இப்ப இப்படி சொல்ற..?”

” சொன்னா என்ன மாமா.? எனக்கு அப்படித்தான் இருந்துச்சு. அதத்தான் சொன்னேன்..!”

” அப்ப நீ என்னை லவ் பண்றியா ?”

” லவ்வா..? இல்லையே..?”

” விளையாடதடி.. பளீர்னு அப்பிருவேன்.!!”

” அம்மா மேல சத்தியமா மாமா. நான் விளையாடல..! ஏன் மாமா.. இந்த மாதிரி நெனப்பு வந்தா தப்பா. ?”

” தப்பு இல்லடி.. நமக்கு புடிச்சவங்க.. நெருக்கமானவங்ககிட்டத்தான் அந்த மாதிரி பீலிங் வரும்.. ”

“ஆமா.. உன்ன எனக்கு புடிச்சிருக்கு.. நாம ரெண்டு பேரும் நெருக்கமாத்தானே பழகறோம்?”

அவளையே பார்த்தான். மெல்லச் சிரித்தாள்.
“இந்த ரெண்டு நாள்ள நீ என்னை நெனைச்சியா மாமா?”

1 Comment

  1. ரொம்ப மொக்கை கதை. Please stop it.

Comments are closed.