“வந்தான்னா கால வெட்டிருவேன்னு சொல்லியிருக்கேன்”
“யாரு நீய்யா..?” சிரித்தான்.
“அலோ.. நாங்களும் செய்வோம். சிரிக்காதீங்க..”
“அப்படி இல்ல.. நீ மெரட்டினியா உங்கப்பாவை?”
“பின்ன சும்மா விடுறதா? என் வயசுல ஒருத்தியை வெச்சிருக்கான்னா அந்தாளை எல்லாம் வீட்டுக்குள்ள விடலாமா?”
“ம்.. பாவம் உங்கம்மா”
“யாரு அவளா..?”
“மரியாதையாவே பேச மாட்டியா பிரமி?”
“க்கும்.. இப்ப இவளுக்கு மரியாதை ஒண்ணுதான் கேடு. புதுசா வந்தவ பொண்டாட்டி மாதிரியும்.. இவ இப்ப கூத்தியா மாதிரியும் ஆகிட்டாங்க இப்ப”
“ஏய்.. என்ன சொல்ற?”
“அட போங்க சார் சும்மா..”
“புதுசு புதுசா ஒண்ணொண்ணா கெளம்புது போல..”
“அது எல்லாம் நல்ல விசயமா இருந்தா சந்தோசப்படலாம் எல்லாமே நாற விசயம்.. இத எப்படி வெளிய சொல்லிக்கறது” என்று விட்டு ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தாள். “அடி வயித்த முட்டுது இருங்க வரேன்” என்று சொல்லிவிட்டு வடது பக்கத்தில் இருந்த பாத்ரூமுக்குள் சென்றாள். பின்னர் முகம் கழுவி வந்து வீட்டுக்குள் போய் லைட்டைப் போட்டு விட்டு வெளியே வந்தாள்.
“காபி வெக்கறேனே?”
“வேண்டாம் பிரமி. நீ வேலைக்கு கிளம்பணுமா?”
“சரி.. அப்ப நான் கிளம்பறேன்” என்று எழுந்தான்.
“அட இருங்க. என்ன அவசரம் எனக்கு இன்னும் டைம் இருக்கு”
“இல்ல போலாம். இருட்டிருச்சு”
“ஏன் இருட்டுன்னா பயமாக்கும்?”
“ஆமா.. உன்னை மாதிரி தேவதைகள்ளாம் நடமாடுமே..”
“அய…” என்று சிரித்தாள்.
அதே நேரம் பிரமிளாவின் அம்மாவும் வேலை முடிந்து வந்தாள். அவளுடனும் பேசினான். அதன்பின் பிரமிளா வைத்துக் கொடுத்த காபியைக் குடித்துவிட்டுத்தான் அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினான் நவநீதன்..!!!
இரவு எட்டரை மணிக்கு வீடு போனான் நவநீதன். அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்த அவன் அம்மா ஜாடையில் சொன்னாள்.
‘அவ வந்துட்டா ‘
புரியாமல் அம்மாவைப் பார்த்தான்.
‘எவ.?’
‘ கவிதா ‘
சாப்பாட்டில் கை வைக்கப் போனவன் உடனே எழுந்து விட்டான். அம்மாவிடம்
‘இரு வரேன் ‘ என ஜாடை செய்து விட்டு வெளியே போனான். நேராக மாமா வீட்டுக்கு போனான். அத்தை டிவியில் சீரியலை மிக சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
” எங்க அத்தை. அவ வந்துட்டாளா.?”
” ஓ வந்துட்டா.” அத்தை திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னாள். ”சரண்யா வீட்டுக்கு போயிருக்கா ”
” எப்ப போனா ?”
” இப்பதான் கொஞ்சம் முன்னால போனா அம்முவ கூட்டிட்டு. சரண்யா என்னமோ வாங்கிட்டு வரச் சொன்னாளாம் இவகிட்ட.. அத குடுத்துட்டு வரேனு போயிருக்கா”
” சரி.. வரட்டும் ” எனச் சொல்லி விட்டு திரும்ப வந்து உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினான்.
நவநீதன் சாப்பிட்டு முடித்து கை கழுவும்போது.. தன் தங்கையுடன் வந்தாள் கவிதா.
”ஹாய் மாமா.. ” என உற்சாகமாகச் சிரித்துக் கொண்டு வந்து நின்றாள்.
” வாடி. எப்ப வந்த நீ ?”
” ஏழு மணிக்கு மாமா. நான் வந்தப்ப நீ இல்ல. ” சுடிதார் போட்டிருந்தாள். தலையில் பூ வைத்திருந்தாள். அந்தப் பூ வாடிப் போயிருந்தது. அதன் சுகந்த மணம் வீடு முழுவதும் பரவியது.
” சரி.. டூர் எல்லாம் எப்படி இருந்துச்சு..?”
” செம ஜாலி மாமா.. நான் சூப்பரா என்ஜாய் பண்ணேன்.” என்றாள்.
கட்டிலில் அவன் பக்கத்தில் வந்து நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பேகோடு தூக்கி வந்திருந்தாள். ஒன்று மிச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் அவனுக்கு காட்டி.. கடை பரப்பி.. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னாள். அவள் வாங்கி வந்ததில் எதுவும் பெரிய சுவாரஸ்யம இல்லை என்றாலும் அவள் மகிழ்ச்சியுடன் சொல்லும் போது அதைக் கேட்க நன்றாக இருந்தது. நீண்ட நேரம் பொருட்களைக் காட்டி.. அவள் அளந்த கதைகளை எல்லாம் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த அமுதா.. ஒரு மணி நேரத்துக்கு பிறகு.. தூக்கம் வருவதாகச் சொல்லி தூங்கப் போய் விட்டாள். அமுதா போன பின் நவநீதனும் படுத்தான். தரையில் பாயை விரித்து விட்டு அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து தன் கதையை நிறுத்தாமல் சொன்னாள் கவிதா..!!
சுற்றுலாவில் அவள் பார்த்தது.. ரசித்தது.. வியந்தது.. காலேஜ் பெண்கள்.. பையன்கள் எல்லாம் அடித்த கூத்து என அவளுக்கு தோன்றியதை எல்லாம் அவள் வாயே வலிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.! அவனும் டிவியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபடி அவள் சொன்ன கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் நவநீதனின் மொபைல் அழைத்தது.! கவிதாதான் அதை முதலில் எடுத்துப் பார்த்தாள்.!
” ஐய்ய்.. அக்கா கூப்பிடறா.. ” என்று விட்டு முகம் பூரிக்க போனை அவனிடம் கொடுத்தாள்.
” அக்காவா..? எந்த அக்கா..?” எனக் கேட்டபடி வாங்கிப் பார்த்தான் நவநீதன்.
‘கிருத்திகா காலிங் ‘ என்றது டிஸ்ப்ளே..!!!
டிஸ்ப்ளேவில் ‘கிருத்திகா ‘ என்ற பெயரைப் பார்த்ததும்.. வயிற்றில் சட்டென ஒரு சங்கடத்தை உணர்ந்தான் நவநீதன். ஏனோ கிருத்திகாவுடன் பேச அவன் மனசு விரும்பவில்லை. ! என்ன செய்யலாம் என யோசித்தான்.!
‘போனை ஆஃப் பண்ணி வைத்து விடலாமா.? இல்லை காலை கட் பண்ணி விடலாமா..?’
” பேசு மாமா.” என்றவாறு கவிதா அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கவிதா லேசாக சரிந்து படுத்து.. அவன் தோளில் கை வைத்தாள்.
யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
” ப்ச்.. இவ எதுக்கு.. இப்ப போன் பண்றா ?”
” பேசு மாமா. பேசினாத்தான தெரியும். ?” சிரித்தாள்.
” அவகூட நான் பேசல.. இந்தா நீ வேணா பேசு..” என அவளிடம் போனை நீட்டினான். ”நான் வீட்ல இல்லேன்னு சொல்லிரு. சார்ஜ் போட்டு.. பிரெண்ட்ஸ் கூட வெளிய போயிக்கேனு சொல்லிரு.. அப்படியே எதுக்கு போன் பண்ணானு விசாரி.. ”
அவசரமாக வாங்கினாள் கவிதா.
”நீயே பேசு மாமா..”
ரொம்ப மொக்கை கதை. Please stop it.