“சினிமா போலாமாடா?”
“ம்ம்ம் போலான்டா. என்ன படத்துக்கு?” நவநீதன் பக்கம் திரும்பிய அன்புவின் தோளைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான் பிரேம்.
“எனக்கு பதில் சொல்லிட்டு அப்பறம் நீ எங்க வேணா போ.”
“என்னடா..?”
“எங்கக்காள லவ் பண்றியா?”
“சே.. என்னடா ஒளர்ற..?”
“யாரு நான் ஒளர்றனா..? என்னைவே ஏமாத்த பக்கறியா… டேய்..”
“இப்ப எதுக்குடா இது? தேவையில்லாம..?”
“எனக்கு எல்லாம் தெரியுன்டா”
நவநீதன் “சரி.. அதான் எல்லாம் தெரியுமில்ல.. அப்றம் என்ன விடு” என்றான்.
“ஓ.. ஹோ.. அப்ப நீயும் இதுல கூட்டா?” என்று திடீரென நவநீதனைப் பார்த்து குரல் உயர்த்திக் கத்தினான் பிரேம். “நீங்கள்ளாம் பிரெண்ட்ஸ்களாடா பாவிகளா.. அவ என் அக்காடா..”
நவநீதன் அதிர்ச்சியில் திணறினான்.
“அத நீ பேசறியா?” என்று எகிறினான் அன்பு.
“நான் பேசாம வேற ஓவன்டா பேசுவான்?”
அன்பு கோபமடைந்தான்.
“ஏன்.. என் தங்கச்சிய நீ ஓட்டல. நான் ஏதாவது இப்படி பேசினனா? இப்பவரை நான் அதைப் பத்தி பேசினதே இல்ல”
“அதும் இதும் ஒண்ணாடா? உன் தங்கச்சிய நான் வெறும் லவ் மட்டும்தான் பண்ணேன். அவள நான் தொட்டுக்கூட பேசினதில்ல. ஆனா நீ.. எங்கக்காளை.. நைட்ல தனியா கூட்டிட்டு போய்.. ச்சீ.. நீயெல்லாம் ஒரு மனுஷனாடா?” கோபத்தில் கத்தினான்.
பிரேம் நிதானம் இழந்து விட்டான். போதையில் அவனது கோபம் உச்சத்திற்குப் போய் விட்டது. அவன் கோபத்தை சாந்தப் படுத்த எண்ணி நவநீதன் இடை புகுந்தான்.
“சரி.. சரி.. கத்தாதடா.. மெதுவா பேசு”
“நான் எதுக்குடா மெதுவா பேசணும்? இவனெல்லாம் ஒரு பிரெண்டுனு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு”
அன்பும் சூடானான்.
“இத நீ என் தங்கச்சிகூட தியேட்டர் போனப்ப யோசிச்சிருக்கணும். அப்ப பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து பெரிய பருப்பு மாதிரி பேசற?”
“சரி.. சரி.. இருங்கடா.. மெதுவா பேசலாம். இப்ப என்ன பண்ணனுங்கற,” என்று பிரேமைக் கையமர்த்திக் கேட்டான் நவநீதன்.
“டேய்.. நீ என்ன எடைல.? நான் மப்புல கத்தறேன்னு நெனச்சியா? இத பாரு.. இது இவனுக்கும் எனக்குமான பிரச்சினை. இதுக்கு எடைல நீ வராத.. அப்றம் உன்னோட மானம் மரியாதை கெட்றும்” என்று நவநீதன் மீது பாய்ந்தான் பிரேம்.
அவன் பேசியதைக் கேட்டு வாயடைத்துப் போனான் நவநீதன்.
“என்னடாது…?”
“விட்றா.. நான் பாத்துக்கறேன்” என்று நவநீதனை அமைதிப் படுத்தினான் அன்பு. பின் பிரேமைப் பார்த்துச் சொன்னான். “நான் ஒண்ணும் உங்கக்காளை புடிச்சுப் போயி லவ் பண்ணல. அவதான் வலிய வந்து என்னை புடிச்சிருக்குனு லவ் பண்ணா.. கேக்கறதா இருந்தா நீ எதாருந்தாலும் அவளையே போய் கேளு..”
“துரோகி.. பண்றதையும் பண்ணிட்டு எப்படிடா.. இப்படி வெக்கமில்லாம பேசற?”
“நான் ஏன்டா வெக்கப் படணும் இத ஆரம்பிச்சு வெச்ச நீ வெக்கப்படல.. உங்கக்கா வெக்கப்படல. இதுக்கும் நான் ஒண்ணும் அவளை கட்டாயப் படுத்தல.. அவதான் என் மேல பைத்தியமா இருக்கா தெரிஞ்சுக்கோ.. பேச வந்துட்டான் பெருசா. மாப்ள.. வாடா நாம போலாம். இதுக்கு மேல இதைப் பத்தி பேசினா.. கடுப்புதான் ஆகும்..” என்று நவநீதனைப் பார்த்தபடி எழப் போனான் அன்பு.
“துரோகி.. துரோகி.. நீயெல்லாம் ஒரு மனுசனாடா.. த்தூ..” என்று ஆவேசத்தில் காறித் துப்பினான் பிரேம். அவன் எச்சில் பாய்ந்து போய் அன்புவின் முகத்தில் அப்பியது.
அவ்வளவுதான் கோபத்தின் உச்சிக்குப் போய் விட்ட அன்பு.. எழுந்தபடி பளீரென பிரேமின் கன்னத்தில் அறைந்தான். பதிலுக்கு பிரேம் அவனைத் திருப்பி அறைய.. இருவருக்குமிடையே கை கலப்பாகி விட்டது.
அவசரமாகப் பாய்ந்து இடை புகுந்தான் நவநீதன். இருவரையும் ஆளுக்கு ஒரு கையில் பிடித்து தடுத்தான். நவநீதன் முகத்திலும் ஒரு அறை விழுந்தது. அப்படியே கைகலப்பு முற்றி விட்டது. இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டதில் பிரேம் தடுமாறி கீழே விழுந்தான். அன்பு அவன் மேல் பாய்ந்து தாக்க.. அவனைப் பிடித்து இழுத்துப் பிரித்தான் நவநீதன்.
விழுந்து கிடந்தவன் கோபத்துடன் எழுந்தான். கையில் கிடைத்த ஒரு கல்லை எடுத்து எறிந்தான். அது அன்புவை தாக்குரவதற்கு பதிலாக நவநீதனின் விலாவில் தாக்கியது. ஒரு நொடி மின்னல் தாக்கியதைப் போல உணர்ந்தான் நவநீதன்..!!!
ரொம்ப மொக்கை கதை. Please stop it.